Published:Updated:

`சுகாதார பிரசாதம், அசத்தும் அன்னதானம்!’ - நெல்லையப்பர் கோயிலுக்கு BHOG தரச்சான்று

நெல்லையப்பர் கோயில்
நெல்லையப்பர் கோயில்

தமிழகத்திலேயே முதல் முறையாக, நெல்லையப்பர் கோயில் மற்றும் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணர் கோயில் ஆகியவற்றுக்கு மத்திய அரசு நிறுவனத்தின் சார்பாக தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. 

நெல்லையின் அடையாளங்களில் முக்கியமானதாக இருப்பது, நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயில். வரலாற்றுச் சிறப்புக்குரிய இந்தக் கோயில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்தக் கோயிலை சுகாதாரமாகப் பராமரிக்க அலுவலர்களும் பணியாளர்களும் நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர். 

Vikatan

இந்த நிலையில், டெல்லியில் உள்ள மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் நிர்ணயம் எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ சார்பாக உணவு உற்பத்தி நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு தரக்கட்டுப்பாட்டுச் சான்று வழங்கிவருகிறது.

எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ அமைப்பின் சார்பாக, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தனியார் வசம் உள்ள கோயில்களில், சுவாமிக்கு படைக்கும் பிரசாதம் தயாரிக்கப்படும் இடங்கள், அன்னதானக் கூடங்கள் ஆகியவற்றில் ஆய்வுசெய்து ’போக்’ (Blissful hygienic Offering to God) என்ற சான்று வழங்கப்படுகிறது. 

தரச்சான்று
தரச்சான்று

அதற்காக இந்தக் குழுவினர், நெல்லையப்பர் கோயிலில் சுவாமிக்கு படைக்கும் பிரசாதம் தயாரிக்கப்படும் மடப்பள்ளி, பக்தர்களுக்கான அன்னதானம் தயார் செய்யப்படும் சமையல் கூடம், விற்பனைக்கான பிரசாத தயாரிப்புக் கூடம் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டனர். பிரசாதம் உள்ளிட்டவற்றை சோதனைக் கூடங்களுக்கும் அனுப்பி பல கட்ட ஆய்வுசெய்தனர்.

நெல்லையப்பர் கோயிலில் தயாரிக்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதானத்துக்கான உணவுப் பொருள்கள் சுகாதாரமாக இருப்பது உறுதிசெய்யப்பட்டதால், தமிழகத்திலேயே முதல் முறையாக நெல்லையப்பர் கோயிலுக்குப் படைக்கப்படும் பிரசாதத்துக்கு ’போக்’ சான்று வழங்கப்பட்டுள்ளது. இதேபோல சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணசுவாமி கோயிலுக்கும் சான்று கிடைத்துள்ளது. 

நெல்லையப்பர் கோயில்
நெல்லையப்பர் கோயில்

இந்த தரச்சான்று கிடைத்துள்ள விவரம் அறிந்ததும் நெல்லையப்பர் கோயிலின் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். கோயிலின் செயல் அலுவலர் யக்ஞநாராயணன் மற்றும் பணியாளர்களுக்கு, பக்தர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தமிழகத்தில் தரச்சான்று பெற்ற இரு கோயில்களில் ஒன்று நெல்லை மாவட்டத்திலும், மற்றொன்று அண்மையில் புதிதாகப் பிரிந்த தென்காசி மாவட்டத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு