Published:Updated:

கலெக்‌ஷனில் 'கரப்ஷன்'? - அத்திவரதர் நிர்வாகத்தை அலறவிட்ட 28 கேள்விகள்!

அத்திவரதர்
அத்திவரதர்

இந்தத் தகவல்களைக் கொடுத்தால் நிச்சயம் மாட்டிக்கொள்வோம் என்ற கலக்கத்தில், `சட்டப் பிரிவு 2(F)-ன்படி ஆர்.டி.ஐ தகவல் அளிக்க முடியாது'

அத்திவரதர் வைபவம் நிறைவடைந்து, ஒரு மாதத்துக்குமேல் ஆகிவிட்டது. ஆனாலும், அதன் தாக்கம் இன்னும் குறையவில்லை. 'அத்திவரதர் வைபவம் குறித்த தகவல்களை ஆர்.டி.ஐ மூலம் கேட்டால், அதிகாரிகள் அலறுகிறார்கள்' என்று காஞ்சிபுரம் வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வருகின்றன.

கடந்த 21.8.19 தேதியிட்ட ஜூ.வி இதழில், 'அத்திவரதர் தரிசனம் கண்டவர் ஒரு கோடி... கரப்ஷனோ ஆயிரம் கோடி!' என்ற தலைப்பில் அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இந்தச் செய்தியை அடிப்படையாக வைத்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பிய சமூக ஆர்வலர்களுக்கு தகவல் அளிக்க, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மறுத்துள்ளது. விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2osEdHm

ஆர்.டி.ஐ-யில் கோரும் தகவல்களை ஒவ்வொரு கேள்வியாகத்தான் மறுக்க வேண்டும். எனக்கு அனுப்பிய பதிலில், மொத்தம் 28 கேள்வி

இதுகுறித்து சமூக ஆர்வலர் காசிமாயன் கூறுகையில், ''அத்திவரதரை தரிசிக்க வருகைதந்த பொதுமக்களின் எண்ணிக்கை எவ்வளவு, இந்த வைபவத்துக்காக அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு, அந்த நிதியை செலவு செய்ததற்கான வரவு செலவு ரசீதுகள், எவ்வளவு தங்கம், வெள்ளி நகைகள் வந்தன போன்ற விவரங்களை வழங்குமாறு ஆர்.டி.ஐ-யில் கோரியிருந்தேன். குறிப்பாக, ஜூலை 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 17-ம் தேதி வரையிலான 47 நாள்களில் விநியோகிக்கப்பட்ட வி.வி.ஐ.பி., வி.ஐ.பி., உபயதாரர், பத்திரிகையாளர் பாஸ் எண்ணிக்கை யையும், அவற்றை விற்றதில் கிடைத்த வருமானத்தையும் வழங்குமாறு கேட்டிருந்தேன். இந்த பாஸ்கள் விநியோகித்த முறை, அதற்காக அமைத்த குழுவில் இடம் பெற்றவர்களின் பட்டியல், வி.ஐ.பி-கள் வருகை, தரிசனம் நடந்த இடங்களில் உள்ள சி.சி.டி.வி காட்சிகள் போன்றவையும் கேட்டு மனு செய்திருந்தேன்.

இந்தத் தகவல்களைக் கொடுத்தால் நிச்சயம் மாட்டிக்கொள்வோம் என்ற கலக்கத்தில், `சட்டப் பிரிவு 2(F)-ன்படி ஆர்.டி.ஐ தகவல் அளிக்க முடியாது' என, காஞ்சிபுரம் மாவட்ட பொதுத் தகவல் அலுவலர் பதில் அனுப்பியுள்ளார். அந்த உத்தரவில் பொதுத் தகவல் அலுவலர் பெயரைக்கூட குறிப்பிடவில்லை. பொதுவாக, ஆர்.டி.ஐ-யில் கோரப்படும் தகவலை மறுக்கும்போது, சட்டப் பிரிவு 8 மற்றும் 9-ன் அடிப்படை யிலேயே மறுக்க வேண்டும் என்று சட்டப் பிரிவு 7(1) குறிப்பிடுகிறது. 2(F) சட்டப் பிரிவு என்பது, தகவலை மறுக்கக்கூடிய பிரிவே அல்ல. கோரப்படும் தகவல்கள் எந்த வடிவில் இருந்தாலும், அதை அப்படியே வழங்க வகைசெய்யும் சட்டப் பிரிவுதான் அது. நான் கோரும் தகவலை மறுப்பதற்காக, அவசரகதியில் ஏதோ ஒரு சட்டப் பிரிவைப் போட்டு பதில் அனுப்பியுள்ளனர்.

அத்திவரதர்
அத்திவரதர்

ஆர்.டி.ஐ-யில் கோரும் தகவல்களை ஒவ்வொரு கேள்வியாகத்தான் மறுக்க வேண்டும். எனக்கு அனுப்பிய பதிலில், மொத்தம் 28 கேள்விகளுக்கும் ஒரே பதிலாக, 'இந்தத் தகவல்களை வழங்க முடியாது' என மறுத்துள்ளனர். இதை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளேன். மிகச் சாதாரண கேள்விகளுக்கே தகவல் அளிக்க முடியாது என மாவட்ட நிர்வாகம் மறுத்திருப்பதிலிருந்தே, இதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நிகழ்ந்திருப்பது புலனாகிறது. விரிவான விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும்" என்றார்.

- பட்டு வஸ்திரங்கள் முதல் 'ஷேர்' ஆட்டோ - ஆர்.டி.ஓ கொள்ளை வரை... ஜூனியர் விகடன் இதழின் முழுமையான செய்திக் கட்டுரைக்கு > ஆர்.டி.ஐ-க்கு அலறும் அத்திவரதர் நிர்வாகம்! - தங்க நகை தொடங்கி அங்கவஸ்திரம் வரை... 'நோ தகவல்!' https://www.vikatan.com/social-affairs/controversy/rti-about-athi-varadar-temple

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் சிறப்புக் கட்டுரைகள்! > ரூ.200 மதிப்பிலான் ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2mjxazv |

அடுத்த கட்டுரைக்கு