Published:Updated:

சித்தர்கள் ஸ்தாபித்த ராசிச் சக்கர பீடம்!

தீர்த்தக் குளம்
பிரீமியம் ஸ்டோரி
News
தீர்த்தக் குளம்

திருச்சியிலிருந்து 39 கி.மீ தொலைவில் உள்ள கிராமம் பகளவாடி. இங்கே காவிரி ஆற்றுக்கு வடக்கில் இயற்கை எழில்சூழ அமைந்துள்ளது அருள்மிகு ஏகாம்பர ஈஸ்வரர் ஆலயம்.

திருச்சியிலிருந்து 39 கி.மீ தொலைவில் உள்ள கிராமம் பகளவாடி. இங்கே காவிரி ஆற்றுக்கு வடக்கில் இயற்கை எழில்சூழ அமைந்துள்ளது அருள்மிகு ஏகாம்பர ஈஸ்வரர் ஆலயம். 27 நட்சத்திரங் களுடன்கூடிய ராசிச் சக்கர பீடத்தின் மீது ஆலயம் அமைந்திருப்பது விசேஷம். சித்த புருஷர்களில் ஒருவரான சாரங்க நாதர் ஸித்தி அடைந்ததும் இங்குதான் என்கிறார்கள். முற்காலத்தில் மன்னர்களும் சிற்றரசர்களும் இந்த ஆலயத்தில் திருப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இங்குள்ள அன்னச்சத்திரம் ராணி மங்கம்மாவால் கட்டப்பட்டது என்கிறது வரலாறு.

சித்தர்கள் ஸ்தாபித்த ராசிச் சக்கர பீடம்!

ராசி வழிபாடு

ல படிநிலைகளாகத் திகழ்கிறது பீடம். முதல் நிலையின் நான்கு கோணங்கள், நான்கு வேதங்களைக் குறிக்கும். இரண்டாம் நிலையின் எண் கோணங்கள், அஷ்ட திக் பாலகர்களையும், மூன்றாம் நிலையின் 16 கோணங்கள் 16 செல்வங்களையும் குறிக்கும். நான்கு மற்றும் ஐந்தாவது நிலைகள் 64 கலைகளைக் குறிக்கும் விதமாக அமைந்துள்ளன. ஆறாவது நிலையில் வாசுகி நாகம் திகழ, அதற்கும் மேலுள்ள ஏழாவது நிலையில் அஷ்ட திக் கஜங்களும் நாகங்களும் காவல் புரிகின்றன. இவற்றுக்கு மேலே அமைந்துள்ள பாகத்தில் 12 ராசி - லக்னங்களும், 27 நட்சத்திரங்களும், நவகிரகங்களும் அமைந்துள்ளன. இந்தப் பீடத்தை வியாக்ரபாதர், பதஞ்சலி, சாரங்கநாதர் ஆகிய சித்த புருஷர்கள் அமைத்ததாகச் சொல்கிறது தலபுராணம். அன்பர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து தமக்குரிய ராசியின் முன் நின்று, முதலில் குலதெய்வத்தை மனத்தில் நினைத்து வழிபட்டு, பிறகு இங்குள்ள அம்மையையும் அப்பனையும் துதித்து தங்கள் வேண்டுதல்களைச் சொல்லி பிரார்த்தித்தால், விரைவில் அந்த வேண்டுதல்கள் பலிக்கும் என்பது நம்பிக்கை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
தீர்த்தக் குளம்
தீர்த்தக் குளம்

சீதாதேவி நீராடிய தீர்த்தக் குளம்

ங்குள்ள தீர்த்தக்குளம் அக்னி மூலையில் அமைந்துள்ளது. வைத்தீஸ்வரன் கோயில் குளம், மதுரை பொற்றாமரைக் குளம், திருவாசி சிவாலயத் திருக்குளம் ஆகியவற்றைப்போல் அக்னி மூலையில் திருக்குளம் அமைந்திருப்பது இங்குதான். `சீதாதேவி நீராடிய திருக்குளம் இது' என்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏகாம்பர ஈஸ்வரர்
ஏகாம்பர ஈஸ்வரர்

நவகோள்களும் வணங்கும் ஈசன்

மூலவர் ஏகாம்பர ஈஸ்வரர், கேட்ட வரம் தரும் வள்ளலாய்த் திகழ்கிறார். கிரகங்களும் நட்சத்திரங்களும் தொழும் இந்த இறைவனை வணங்கி வேண்டினால், சகல தோஷங்களும் நீங்கும். நவகோள்களும் நன்மையே அருளும். திருமணப்பேறு, குழந்தைப்பேறு, வேலைவாய்ப்பு ஆகிய வேண்டு தல்கள் இங்கே நிறைவேறும்.

காமாட்சி
காமாட்சி

மனக்கவலை தீர்க்கும் காமாட்சியம்மை

மர்ந்த நிலையில் அருளும் அம்பிகை காமாட்சியை தரிசித்தாலே போதும்; நம் மனக்கவலைகள் எல்லாம் தீரும் என்கிறார்கள் பக்தர்கள். இந்த ஆலயத்தில் பெளர்ணமிதோறும் ஜாதகத்தைக் கொண்டுவந்து வைத்து வழிபடுகிறார்கள். இதனால் ஜாதகத்தில் உள்ள குறைபாடுகள் நீங்கும் என்பது ஐதிகம்.

நட்சத்திர விருட்சங்கள்
நட்சத்திர விருட்சங்கள்

நட்சத்திர விருட்சங்கள்

ங்கு 27 நட்சத்திரங் களுக்குரிய விருட்சங்கள் உள்ளன. பக்தர்கள், அவரவர் நட்சத்திரத்துக்குரிய விருட்சத்தை வணங்குவதும் தேவைக்கேற்ப நீர் ஊற்றுவதும் சிறப்பு. இதனால் எதிர்மறை சிந்தனைகள் நீங்கி, மனத்தில் புது நம்பிக்கை பிறக்கும்.