Published:Updated:

வீடு - மனை யோகம் அருளும் மஞ்சள் மாலை வழிபாடு!

சரணம் கணேசா
பிரீமியம் ஸ்டோரி
சரணம் கணேசா

சரணம் கணேசா

வீடு - மனை யோகம் அருளும் மஞ்சள் மாலை வழிபாடு!

சரணம் கணேசா

Published:Updated:
சரணம் கணேசா
பிரீமியம் ஸ்டோரி
சரணம் கணேசா

முழுமுதற் கடவுளான விநாயகரின் திருவடிவங்களில் 32 வகை உண்டு என்கின்றன ஞானநூல்கள். அவற்றில் குறிப்பிடத்தக்கது `ஹேரம்ப கணபதி’ எனப்படும் பஞ்சமுக விநாயகர் வடிவமாகும். ஆக்கல், அழித்தல், காத்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில் தத்துவத்தையும், பஞ்ச பூதங்களையும் பரிபாலிக்கும் விநாயகப் பெருமானின் மகத்துவத்தையும் உணர்த்தும் அற்புத வடிவம் இது.
தத்துவ வடிவமான பஞ்சமுக விநாயகரை தரிசனம் செய்து வழிபட் டால் சகல செளப்பாக்கியங்களும் அடையலாம்; வறுமை, பிணி, தடை கள் போன்ற துன்பங்கள் நம்மைவிட்டு விலகி ஓடும் என்பது பெரியோர் வாக்கு. தமிழகத்தில் பஞ்சமுக விநாயகர் அருள்பாலிக்கும் கோயில்கள் சில உண்டு. அவற்றில் ஒன்று, திருச்சி - பிச்சாண்டவர் கோயில் அருகில் ராஜகோபால் நகரில், அய்யன் வாய்க்கால் கரையில் அமைந்துள்ளது.

பிள்ளையார் மீது அதீத பக்தி கொண்ட பள்ளி ஆசிரியர் ஒருவரின் கனவில் தோன்றி, தமக்கு வாய்க்கால் கரையில் சிம்ம வாகனத்தில் பஞ்சமுக அம்சத்துடன் கூடிய சிலை நிறுவி வழிபடும்படி அருள்பாலித்தாராம் பிள்ளையார். அதன்படியே அற்புதமான பஞ்சமுக விநாயகர் சிலையை வடித்து அய்யன் வாய்க்காலின் கரையில் எழுந்தருளச் செய்து வழிபட்டாராம் அந்த ஆசிரியர்.

பஞ்சமுக விநாயகர்
பஞ்சமுக விநாயகர்

ஆரம்ப காலத்தில் விநாயகர் சிலை மட்டுமே வழிபாட்டில் இருந்தது; பிற்காலத்தில் இப்பகுதி மக்களின் கூட்டு முயற்சியால் ஆலயம் எழுப்பப்பட்டது; திருச்சி மாவட்டத்தில் பஞ்சமுக விநாயகருக்கென்று அமையப்பெற்ற தனிக்கோயில் இதுதான் என்கிறார்கள்.

கருவறையில் மூஷிக பீடத்தின் மீது சிம்ம வாகனத்தில் அமர்ந்த கோலத்தில் அருள்கிறார் பஞ்சமுக விநாயகர். கோயிலின் தலவிருட்சமாக அரச மரமும், வேப்ப மரமும் பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன. ஐந்து முகங்களில் மேல் முகமானது பிரம்ம முக அம்சமாம். அதற்கேற்ப விமானம் அமைந்துள்ளது. கோஷ்ட தெய்வங்களாக தட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்கை, கஜலட்சுமி ஆகியோர் தரிசனம் தருகிறார்கள்.

இந்தப் பிள்ளையாருக்கு வேண்டுதல் நிமித்தம் விசேஷமான பரிகார வழிபாடுகள் நடைபெறுகின்றன.

கல்யாணத்தடை நீங்க `தேங்காய் மாலை’

ராகு, கேது தோஷங்களால் கல்யாணத்தடை, வரன் அமைவதில் தாமதம் ஆகிய பிரச்னைகளால் வருந்தும் அன்பர்கள், ஒரு வெள்ளிக் கிழமையில் கோயிலுக்கு வந்து பிள்ளையாரை மனமுருக வேண்டிக்கொள்ள வேண்டும். 2-வது வெள்ளி முதல் 8-வது வெள்ளிக்கிழமை வரை ராகு காலத்தில் ஏழு தேங்காய்களை மாலையாகக் கோத்து பிள்ளையாருக்கு அணிவித்து வழிபட வேண்டும். 9-வது வெள்ளிக்கிழமை அன்று அர்ச்சனை செய்து வணங்க வேண்டும்.

10-வது வாரத்தில் 12 வகை அபிஷேகம் செய்து, மஞ்சள் அல்லது சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி, அருகம்புல் அல்லது முல்லைப் பூ மாலை சாத்தி கல்யாண இனிப்பாக லட்டு அல்லது சர்க்கரைப் பொங்கல் சமர்ப்பணம் செய்து வழிபட வேண்டும். இதன் மூலம் விரைவில் தடைகள் நீங்கி, கல்யாணம் கைகூடும் என்பது நம்பிக்கை.

dhakshna moorthi
dhakshna moorthi
DIXITH
sri aiyappan
sri aiyappan
DIXITH
sri amman
sri amman
DIXITH
panjamuga vinayagar
panjamuga vinayagar
DIXITH


வேலை கிடைக்க வாழைப்பழ மாலை

படிப்புக்கேற்ற வேலை கிடைக்காத நிலை, வேலை கிடைப்பதில் தாமதம், அதிகமான வேலைப்பளு, தொழில் போட்டி ஆகியவற்றால் வருந்தும் பக்தர்கள், வாழைப்பழ மாலை சமர்ப்பணம் செய்து வழிபட லாம். அதாவது முதல் வெள்ளிக்கிழமை அன்று பிள்ளையாரை தரிசனம் செய்து பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.

2-வது வாரம் முதல் தொடர்ந்து (மொத்தம் 12 வாரங்கள்) வெள்ளிக் கிழமைகளில் செவ்வாழை அல்லது கற்பூரவல்லி பழங்களை 9 என்ற எண்ணிக்கையில் கோத்து விநாயகருக்கு மாலையாக சமர்ப்பித்து வழிபட வேண்டும். நிறைவு நாளன்று அபிஷேக ஆராதனைகளுடன் சர்க்கரைப் பொங்கல் சமர்ப்பித்து வழிபட்டால், வேண்டுதல் விரைவில் பலிக்கும் என்கிறார்கள்.

புது வீடு - மனை வாங்க மஞ்சள் மாலை

வீடு, மனை வாங்கும்போது எவ்வித பிரச்னைகளும் தடைகளும் வராமல் இருக்கவும், திருஷ்டி மற்றும் போட்டி-பொறாமைகளால் உண்டாகும் பாதிப்புகளிலிருந்து விடுபடவும், (27 என்ற எண்ணிக்கையில்) விரலி மஞ்சளை மாலையாகக் கோத்து பஞ்சமுக விநாயகருக்கு சமர்ப் பித்து வழிபடுகிறார்கள்.

தம்பதி ஒற்றுமை மேலோங்க எலுமிச்சை விளக்கு

கணவன் - மனைவிக்கு இடையே ஏற்படும் கருத்துவேறுபாடுகள் நீங்கவும், பிரிந்த தம்பதி மீண்டும் ஒன்றுசேர்ந்து வாழவும், இல்லறம் நல்லறமாகவும் பஞ்சமுக விநாயகரை பிரார்த்தித்துச் செல்கிறார்கள் பக்தர்கள். அத்துடன் இந்தக் கோயிலில் அருளும் விஷ்ணு துர்கைக்கு, 9 வாரங்கள் வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். முதல் வெள்ளி அன்று இரண்டு விளக்குகள் எனத் தொடங்கி கடைசி வாரத்தில் 18 என்ற எண்ணிக்கையில் எலுமிச்சை தீபங்கள் ஏற்றி வழிபடவேண்டும் என்பது ஐதிகம்.

வளர்பிறை சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி ஆகிய தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. விநாயகர் சதுர்த்தி அன்றும் இந்தப் பிள்ளையாருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. இந்த நாள்களில் பிள்ளையாரை தரிசித்து 16 முறை வலம் வந்து வணங்கி வழிபட்டால், 16 பேறுகளும் கிடைக்கும் என்கிறார்கள்.

விநாயகர் சதுர்த்தி அன்று 21 முறை வலம் வந்து வணங்கி வழிபடுவது விசேஷமாம். அன்று 21 இலைகளால் பிள்ளையாருக்கு அர்ச்சனை வழிபாடு நடக்கும். இந்த வைபவத்தை தரிசித்தால், 21 தலைமுறைக்கும் பெரும் புண்ணியம் வாய்க்கும் என்கிறார்கள். ஆடிப்பூரத்தன்று விஷ்ணு துர்கைக்குச் சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism