Published:Updated:

அழகிய மயிலே அபிராமி!

ஸ்ரீஅபிராமி தாயானவள்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீஅபிராமி தாயானவள்

ஒருமுறை, எங்கள் கோயிலில் அபிராமிக்கு பூஜை செய்யும் கல்யாணராம குருக்களின் இரண்டாவது மகனுக்கு மூக்கின் உள்ளே பென்சில் குச்சி ஒன்று மாட்டிக்கொண்டது.

அழகிய மயிலே அபிராமி!

ஒருமுறை, எங்கள் கோயிலில் அபிராமிக்கு பூஜை செய்யும் கல்யாணராம குருக்களின் இரண்டாவது மகனுக்கு மூக்கின் உள்ளே பென்சில் குச்சி ஒன்று மாட்டிக்கொண்டது.

Published:Updated:
ஸ்ரீஅபிராமி தாயானவள்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீஅபிராமி தாயானவள்

திருக்கடவூரில் வீற்றிருக்கும் அன்னை அபிராமி கருணையே வடிவானவள். தன்னை தினமும் பூஜித்த அபிராமி பட்டரின் பக்தியை மெச்சி, அவர் மன்னருக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றியவள். தனது காதணியை வானில் வீசி, அமாவாசை (தை அமாவாசை) இரவில் பௌர்ணமி நிலவைத் தோன்றச் செய்து அற்புதம் நிகழ்த்தியவள்.

அழகிய மயிலே அபிராமி!

நாகை மாவட்டம் திருக்கடவூரில் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரருடன் உடனுறையும் ஸ்ரீஅபிராமி தாயானவள் ‘என்றும் 16’ என மார்க்கண்டேயனுக்கு சிரஞ்ஜீவி வரம் அருளியவள். வேண்டுவோருக்கு வேண்டுவன யாவும் அருள்வதோடு, தன்னை வழிபடுவோரின் பிணி தீர்த்து, ஆயுளை நீட்டிக்க வல்லவள். அதனாலயே இத்தலத்தில் ஆண்டு முழுவதும் நாள்தவறாமல் ஆயுஷ்ஹோம பூஜைகளும், திருமணங்களும் நடந்த வண்ணமிருக்கின்றன! கருணைக் கடலாக விளங்கும் அன்னை அபிராமியின் அற்புதங்கள் குறித்து, திருக்கடவூரில் அந்த அன்னைக்கு பூஜை செய்யும் கணேச சிவாசார்யர் பகிர்ந்துகொண்டார்.

“வேண்டியதை வேண்டியபடி அருளும் கற்பக விருட்சம் அபிராமியம்மை. எத்தனையோ பக்தர்கள் அன்னையின் சந்நிதிக்கு வந்து, தங்களின் குறைகளைச் சொல்லி அழுது புலம்பியிருக்கிறார்கள். அவளும் அவர்களின் குறைகளை விரைவில் களைந்து அருள் செய்திருக்கிறாள். அதன்பொருட்டு தங்களின் நன்றியைச் சமர்ப்பிக்கவும் வேண்டுதல் வழிபாடுகளைச் செய்யவும் தினமும் இங்கு கூடும் பக்தர்கள் கூட்டமே அதற்கு சாட்சி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்ரீஅபிராமி தாயானவள்
ஸ்ரீஅபிராமி தாயானவள்

ஒருமுறை, எங்கள் கோயிலில் அபிராமிக்கு பூஜை செய்யும் கல்யாணராம குருக்களின் இரண்டாவது மகனுக்கு மூக்கின் உள்ளே பென்சில் குச்சி ஒன்று மாட்டிக்கொண்டது. அதனால் வாய் வழியாக ரத்தம் வடிந்து உயிருக்கு ஆபத்தான நிலைக்கு அக்குழந்தை ஆளானது. குழந்தையைச் சென்னைக்கு அழைத்துச் சென்று குழந்தைகள்நல மருத்துவமனையில் சேர்த்தபோது, ‘உடனடியாக ஆபரேஷன் செய்து பென்சிலை அகற்றவேண்டும்’ என்று கூறிவிட்டார்கள்.

பிஞ்சு வயதில் அறுவை சிகிச்சையா என்று பதறிப்போனோம். எங்கள் அபிராமி அம்மையையே சரணடைந்தோம். `அம்மா ஆபரேஷன் எதுவும் தேவையில்லாமலேயே குழந்தை நல்லபடியாய் மீளவேண்டும். காப்பாற்று தாயே' என்று மனமுருகி வேண்டிக் கொண்டோம். அபிராமி கைவிட்டுவிடுவாளா என்ன... மறுநாளே அந்த அதிசயத்தை நடத்தினாள்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மறுநாள் ஆபரேஷன் செய்வதற்கு முன்பு காலை வேளையில் அந்த பென்சில் குச்சி தானாகவே மூக்கிலிருந்து வெளியே வந்து விட்டது. ஆபரேஷன் இல்லாமல் அந்தக் குழந்தை உயிர் பிழைத்துவிட்டது. எல்லாம் அபிராமியின் அருள்!'' என்றார் நெகிழ்ச்சியுடன்.

அழகிய மயிலே அபிராமி!

திருக்கோயிலின் கண்காணிப்பாளரான ராஜேந்திரனின் அனுபவம் வித்தியாசமானது.

``2016-ம் ஆண்டு, அமெரிக்காவில் ஃப்ளோரிடா மாகாணத்தில் வசிக்கும் என் மகன் பாலாஜியைப் பார்க்க நானும் மனைவியும் ஒரு மாத விடுமுறையில் சென்றிருந்தோம். ஊர் திரும்புவதற்கு 2016 அக்டோபர் 7-ம் தேதி விமான டிக்கெட் முன்பதிவு செய்திருந்தோம். ஆனால், திடீரென 5-ஆம் தேதி முதல் அங்கு கடும் புயல் வீச இருப்பதாகவும், விமான சேவை ரத்து செய்யப்படலாம் என்றும் தகவல் வந்தது. பெரும்பாலான மக்கள் பயத்தில் அருகிலுள்ள மாகாணங்களுக்கு இடம் பெயர்ந்து சென்றுகொண்டிருந்தார்கள்!

நான், 10-ம் தேதி திருக்கடவூரில் அபிராமி அம்மைக்கு பாலபிஷேகம் செய்து வழிபட திட்டமிட்டிருந்தேன். அதில் மாற்றம் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். மகனோ `இந்தச் சூழலில் பயணம் பாதுகாப்பு இல்லை' என்று கூறி தடுத்தான். பஞ்சபூதங்களின் சீற்றத்தைத் நம்மால் தடுக்க முடியாதுதான். ஆனால், அவை அனைத்துக்கும் நாயகி அபிராமி அல்லவா. அவளையே மனதார வேண்டிக்கொண்டோம்.

அன்னை அருள்பாலித்தாள். புயல் சின்னம் வலுகுறைந்து விலகியது. நாங்கள் ஏற்கெனவே புக் செய்திருந்த அதே விமானத்தில் பயணம் செய்து இந்தியா வந்தோம். குறிப்பிட்ட நாளில் அன்னை அபிராமிக்குப் பாலபிஷேகம் செய்து பிரார்த்தனையை இனிதே நிறைவேற்றினோம். இப்படி இந்த அன்னை நிகழ்த்திய அற்புதங் கள் அநேகம். எனக்குத் தெரிந்து எத்தனையோ பேர் இங்கு வேண்டிக்கொண்டு திருமண வரம் பெற்றிருக்கிறார்கள்; குழந்தை பாக்கியம் பெற்றிருக்கிறார்கள். அபிராமியின் கருணையே கருணை!'' என்றார் பரவசத்தோடு.

வரும் ஜனவரி 24 அன்று தை அமாவாசை. அபிராமி அற்புதம் நிகழ்த்திய அந்தத் திருநாளில் நாமும் திருக்கடவூர் சென்று திருவருள் பெற்று வருவோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism