Published:Updated:

மாசி பெரியண்ண சுவாமி கோயில்

மாசி பெரியண்ண சுவாமி கோயில்
பிரீமியம் ஸ்டோரி
மாசி பெரியண்ண சுவாமி கோயில்

ஆலயங்கள் அற்புதங்கள்

மாசி பெரியண்ண சுவாமி கோயில்

ஆலயங்கள் அற்புதங்கள்

Published:Updated:
மாசி பெரியண்ண சுவாமி கோயில்
பிரீமியம் ஸ்டோரி
மாசி பெரியண்ண சுவாமி கோயில்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் உள்ளது ஓமாந்தூர் கிராமம். இங்கு பிரசித்திபெற்ற அன்ன காமாட்சியம்மன், மாசி பெரியண்ண சுவாமி கோயில் உள்ளது. கொல்லிமலை மாசி பெரியசாமி கோயில்களில் இந்தக் கோயிலே மிகப் பெரியது. எனவே இந்தக் கோயில் ஓமாந்தூர் பெரிய கோயில் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கோயிலில் உருவ வழிபாடு கிடையாது; ஜோதி வழிபாடு மட்டுமே. மாசி கருப்பசாமி, அப்பாச்சியாயி, பைரவர், ஓமரிஷி, முப்பத்து முக்கோடி தேவர்கள், நாற்பத்தொன்றாயிரம் ரிஷிகள், மகாமுனீஸ்வரர், செட்டியப்பன், புரவியப்பன், முத்துகருப்பண்ண சுவாமி, லாட சன்னியாசி, குப்பாச்சியாயி என அனைத்து சந்நிதி மூர்த்தங்களும் ஒளிவடிவிலேயே காட்சி தருகின்றன. இங்குள்ள தெய்வ ஜோதிகளுக்கு கற்பூர ஆரத்தி காட்டப்படுகிறது. பக்தர்களுக்கு இந்த ஆரத்தி காண்பிக்கப்படுவதில்லை. கோயில் வளாகத்தில் வெட்டியெடுக்கப்படும் மண்ணே திருநீறாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இங்கு கொடிக்கம்பத்துக்கு மாற்றாக மிகப் பெரிய வேல் வைக்கப்பட்டுள்ளது. இதையே தெய்வமாகக் கருதி பக்தர்கள் வழிபடுகின்றனர்.

ஆலயங்கள் அற்புதங்கள்
ஆலயங்கள் அற்புதங்கள்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
மாசி பெரியண்ண சுவாமி கோயில்
மாசி பெரியண்ண சுவாமி கோயில்

கொல்லிமலையில் கால்நடைகளை மேய்த்துவந்த காராளன் என்பவன் பூசாரியின் பேச்சை மீறி நடந்ததால் அவனை தண்டிக்க அடியாள்கள் ஏவப்பட்டார்கள். அவர்களிடமிருந்து காராளனைப் காப்பாற்ற கொல்லிமலை பெரியண்ணசாமி இந்த ஊருக்கு போகச் சொல்லி, அவனோடு இங்கேயே வந்து அமர்ந்தும் விட்டார் என தல வரலாறு கூறுகிறது. ஜோதி வடிவில் இருப்பதால் ஆலயத்தில் பக்தர்கள் விளக்கு ஏற்றுவதில்லை. பதிலாக விளக்குகளுக்குத் தேவையான நெய், எண்ணெய் காணிக்கை செலுத்துகின்றனர். அமாவாசை, பெளர்ணமி, பிரதோஷம், மாதப் பிறப்பு, சதுர்த்தி, சஷ்டி நாள்களில் கோயில் நடை திறப்பதில்லை. மகா சிவராத்திரி விழா, தமிழ் வருடப் பிறப்பு, பொங்கல், ஆங்கில வருடப் பிறப்பு, ஆடி 18, ஆடி 28 ஆகிய நாள்கள் இங்கு விசேஷம். இங்கு குறி சொல்லுதல் விசேஷம் என்கிறார்கள். திக்குவாய் நீங்க இங்கு அநேகம் பேர் வருகிறார்கள். இங்கு வந்து வழிபடும் எல்லா மக்களுக்கும் தாயாக இருந்து அவர்கள் கவலைகளை தீர்த்து வைக்கிறாள் அன்ன காமாட்சி அம்மன். நீங்களும் ஒருமுறை சென்று தரிசித்து வரலாமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism