Published:Updated:

ராமநாதபுரம்: முதன்முறையாக முளைக்கட்டுத் திருவிழா கொண்டாடிய திருநங்கைகள்!

பால்குடங்களுடன் ஊர்வலமாக வந்த திருநங்கைகள்

ராமநாதபுரம் அருகே திருநங்கைகள் மணலில் அம்மன் கோயில் எழுப்பி முளைக்கட்டுத் திருவிழா கொண்டாடினர். திருநங்கைகள் முதன்முறையாகப் பால்குடம் சுமந்து சென்று அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ராமநாதபுரம்: முதன்முறையாக முளைக்கட்டுத் திருவிழா கொண்டாடிய திருநங்கைகள்!

ராமநாதபுரம் அருகே திருநங்கைகள் மணலில் அம்மன் கோயில் எழுப்பி முளைக்கட்டுத் திருவிழா கொண்டாடினர். திருநங்கைகள் முதன்முறையாகப் பால்குடம் சுமந்து சென்று அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Published:Updated:
பால்குடங்களுடன் ஊர்வலமாக வந்த திருநங்கைகள்

ராமநாதபுரம் அருகே மாடக்கொட்டான் தில்லைநாயகபுரம் கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மும்தாஜ் என்ற திருநங்கை சொந்தமாக வீடு கட்டி, அதில் 15 திருநங்கைகளுடன் வசித்து வருகிறார்.

இவர்கள் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும், நாட்டு மக்கள் நோய் நொடியின்றி வாழவும் தங்களது பகுதியில் மணலில் முத்துமாரியம்மனுக்குக் கோயில் எழுப்பி, முளைக்கட்டுத் திருவிழா கொண்டாட முடிவு செய்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதன்படி முதலாம் ஆண்டு முளைக்கட்டுத் திருவிழாவை முன்னிட்டு கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை முதல் காப்புக்கட்டி விரதம் இருந்து வந்தனர். தினமும் கோயில் முன்பு கும்மி கொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர்.

பெண்களுடன் கும்மி கொட்டிய திருநங்கைகள்
பெண்களுடன் கும்மி கொட்டிய திருநங்கைகள்

இதனைத் தொடர்ந்து நேற்று முளைப்பாரி, பால்குடத்துடன் மாடக்கொட்டான் பகுதியிலிருந்து இரண்டு கி. மீ தூரம் ஊர்வலமாக நடந்துவந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது திருநங்கைகள் வேடமிட்டு நடனமாடியபடி வந்தனர். பின்னர் சுமந்து வந்த முளைப்பாரிகளை அங்குள்ள காட்டு ஊரணியில் கரைத்தனர். இந்த விழாவில் சென்னை, பெங்களூரு, கோவை, திருப்புவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர்.

கடந்த ஒரு வார காலமாக பல்வேறு விதமான பாரம்பர்யக் கலைகளுடன் திருநங்கைகள் பல்வேறு அபிஷேக ஆராதனையுடன் முத்துமாரி அம்மனுக்கு முதன்முறையா முளைக்கட்டுத் திருவிழாவைக் கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.