Published:Updated:

``ஆகம விதிப்படிதான் நடத்த வேண்டும்!’ -ஊரடங்கால் திருநள்ளாறு கோயில் பிரம்மோற்சவ விழா ரத்து

பிரம்மோற்சவ விழா
பிரம்மோற்சவ விழா

திருவிழாவின் முக்கிய தொடக்க நிகழ்வான கொடியேற்றத்தை நடத்த இயலாத காரணத்தினால் பிரம்மோற்சவக் கொடியேற்றும் விழா ரத்து செய்யப்படுகிறது.

பிரசித்திபெற்ற ஸ்ரீ சனிபகவான் வீற்றிருக்கும் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வர சுவாமி கோயில் பிரம்மோற்சவ விழா ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

பிரம்மோற்சவ விழா ரத்து
பிரம்மோற்சவ விழா ரத்து

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள உலகப்புகழ்பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் தலமான ஸ்ரீ தர்பாரண்யேஸ்வர சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழா, இந்த ஆண்டு ஏப்ரல் 27 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் ஜூன் 5 -ம் தேதியுடன் முடிவடையும். எல்லா ஆண்டும் இவ்விழா நடைபெறும் நாள்களில் எல்லா நிகழ்ச்சிகளும் ஆலய சிவாச்சாரியார்கள், பூசாரிகள், ஊழியர்கள், ஸ்தானிகர்கள், தேவஸ்தானத்திற்குட்பட்ட 5 கிராமத்தினர் மற்றும் இதரப் பகுதி மக்கள் பங்களிப்புடன் மிகச் சிறப்பாக நடைபெறும்.

மேலும், விழாவில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா, ஸ்ரீ செண்பக தியாகராஜர் உன்மத்த நடனம், தேர்த் திருவிழா, ஸ்ரீசனீஸ்வரபகவான் சகோபுர வீதியுலா, தெப்போற்சவம் ஆகிய நிகழ்வுகளின்போது பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். அதுமட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் விழாவிற்கு அதிகளவில் வருவார்கள்.

பிரம்மோற்சவ விழா ரத்து
பிரம்மோற்சவ விழா ரத்து

இந்திய அரசால் பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று பரவும் இக்காலகட்டத்தில் ஆலயங்களில் கூட்டம் கூடுவது, பக்தர்களின் தரிசனம், விழாக்கள் மற்றும் ஊர்வலம் நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டு 144 பிரிவின் கீழ் ஊரடங்கு தடைச்சட்டம் அமலில் உள்ளது. எனவே, திருவிழாவின் முக்கிய தொடக்க நிகழ்வான கொடியேற்றத்தை நடத்த இயலாத காரணத்தினால் பிரம்மோற்சவக் கொடியேற்றும் விழா ரத்து செய்யப்படுகிறது.

இதுபற்றிக் கோயில் நிர்வாக அதிகாரி ஆதர்ஷ் பேசியபோது, "விழாவின் அனைத்து நிகழ்வுகளும் ஆகம விதிகள் மற்றும் சம்பிரதாயப்படி நட்சத்திர நாளை கணக்கில் கொண்டு நடத்தப்பட வேண்டும். எனவே, ஊரடங்கின் காரணமாக இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவ விழா ரத்து செய்யப்படுகிறது" என்று அறிவித்துள்ளார். முதன்முறையாக இவ்விழா நிறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

அடுத்த கட்டுரைக்கு