Published:Updated:

கிரிவலம் - ஓர் அனுபவம் #MyVikatan

கிரிவலம்
News
கிரிவலம்

அண்ணாமலை டிபன் சென்டரில் இரவு உணவும், குபேர லிங்கம் அருகில் இருந்த சிறுகடையில் காலை உணவும், மல்லாட்ட சட்னியுடன் (நிலக்கடலை). குறைந்த விலை, வாய்க்கு ருசியான டிபன்.

மாயவனையும் மகேசனையும் ஒரே நாளில் தரிசிக்கும் பாக்கியம் இன்று. ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்குப் பிறகு கிரிவலம். அதிகாலை 3:39 தொடங்கி, 8:40 மணிக்கு ஐந்து மணிநேரத்தில் முடித்தோம்.

அதிகாலைக்கும்தான் எத்தனை முகங்கள். பேமஸ் பேக்கரியில் நீல பனியனும், கட்டம் போட்ட கைலிகட்டியவர், சட்டையைக் கழட்டி விட்டுக் கண்ணாடி டம்ளர்களை கழுவ ஆரம்பித்தார்.

ஏதோ ஒரு நகைக்கடையின் தூங்காத கைபேசியில் ‘வலையோசை கலகலவென’ பாடல் கேட்டபடி தூங்கிக் கொண்டிருந்த காவலாளி.

‘தமிழா, தெலுங்கா தெரியல, திட்டுமேல் ஏறிப்பாறுங்கள், நன்றாகக் தெரியும் என அக்னி லிங்கம் அருகில் வழிகாட்டியவர்.

புகைப்படம் எடுக்க முயன்றபோது, என்னைத் திட்டிய அர்ச்சகர்.

மாட்டில் பால் கறந்து கொண்டிருந்தவர்.

அடி அண்ணாமலை மின் கம்பத்தில் தொங்கிக்கொண்டிருந்த கிளிகள்.

மழையைத் தவிர்க்கப் படுதா கட்டியபடி தூங்கும் சாதுக்கள். காபி குடிக்கையில், சாத்விகாவின் காலைச் சுற்றிய பூனாச்சி.

இதுதான் திருவண்ணாமலை!

thiruvannamalai temple
thiruvannamalai temple

அண்ணாமலை டிபன் சென்டரில் இரவு உணவும், குபேர லிங்கம் அருகில் இருந்த சிறுகடையில் காலை உணவும், மல்லாட்ட சட்னியுடன் (நிலக்கடலை). குறைந்த விலை, வாய்க்கு ருசியான டிபன்.

தரிசனம் இரண்டு மணி நேரத்தில், 10:41ல். ராஜ கோபுரத்தில் உள் நுழைந்து, தெற்கு கோபுரம் வழியாக வெளியே வருவதற்குள் கோவிலை முழுமையாகச் சுற்றியாயிற்று.

அறநிலையத்துறைக்கு வேண்டுகோள்கள்:

1. கட்டப்பட்டுள்ள எந்தக் கழிப்பறையும் திறக்கப்படவில்லை. விக்கி காலையில் மிகவும் சிரமப்பட்டு விட்டான்.

2. தனியார் நடத்தும் கழிப்பறைகளில் கொள்ளை. பத்து ரூபாய் ஒருவருக்கு. பல இடங்களில் பெண்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம்.

3. பார்க்கிங் மற்றொரு கொள்ளை. உள்ளே நுழைந்தாலே கட்டணம். திருவண்ணாமலையில் எழுபது ரூபாய் கட்டணம்.

நேற்று திருவண்ணாமலையில் மழையென்று சொன்னார்.

ஈசனின் அருள் சொட்டிக் கொண்டிருந்தது மரங்களிலிருந்து, கிரிவலப் பாதையெங்கும்.

- கண்ணன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz