Published:Updated:

திருவருள் திருவுலா - ஆதவன் அருள்பெற்ற ஆலயங்கள்!

ஆதவன் அருள்பெற்ற ஆலயங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
ஆதவன் அருள்பெற்ற ஆலயங்கள்!

இது பிரம்மன் பூஜித்த தலம். வேதி பிரம்மன். எனவே, வேதிகுடி எனும் பெயர் வந்தது.

திருவருள் திருவுலா - ஆதவன் அருள்பெற்ற ஆலயங்கள்!

இது பிரம்மன் பூஜித்த தலம். வேதி பிரம்மன். எனவே, வேதிகுடி எனும் பெயர் வந்தது.

Published:Updated:
ஆதவன் அருள்பெற்ற ஆலயங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
ஆதவன் அருள்பெற்ற ஆலயங்கள்!

மாங்கல்ய வரம் கிடைக்கும்!

தலம்: திருவேதிகுடி

சுவாமி: வேதபுரீஸ்வரர்

அம்பாள்: மடமொழிமங்கை (மங்கையர்க்கரசி)

தலம்: திருவேதிகுடி
தலம்: திருவேதிகுடி

திருத்தலச் சிறப்பு: இது பிரம்மன் பூஜித்த தலம். வேதி = பிரம்மன். எனவே, வேதிகுடி எனும் பெயர் வந்தது. வேதங்களே இங்கு வழிபட்டதாகக் கூறப்படுகிறது. விழுதிகுடி, வீதிகுடி ஆகிய பெயர்கள் மருவி, வேதிகுடி ஆகிவிட்டதாகவும் சிலர் சொல்கிறார்கள். அதற்கேற்ப, தல விநாயகருக்கு வேத விநாயகர் என்று திருநாமம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வேதபுரீஸ்வரர்
வேதபுரீஸ்வரர்

அருள்மிகு வேதபுரீஸ்வரர் ஆலயக் கல்வெட்டுகளில், திருவேதிகுடி மகாதேவர் மற்றும் பரகேசரி சதுர்வேதி மங்கலத்து மகாதேவர் என்றெல்லாம் குறிப்பிடப்படும் இந்தத் தலத்தில் நந்தி தேவர், மார்க்கண்டேயர், குபேரன் ஆகியோர் வழிபட்டிருக்கின்றனர். பிரம்மனும் சூரியனும் இங்கு தவம் செய்துள்ளனர்.

வழிபாட்டுச் சிறப்பு: ஒவ்வோர் ஆண்டும், பங்குனி மாதம் 13,14,15 தேதிகளில் திருவேதிகுடியில் நடைபெறும் சூரிய பூஜை மிகவும் விசேஷமானது. ராகு- கேது பரிகாரத் தலமாகவும் இது விளங்குகிறது.

திருவருள் திருவுலா - ஆதவன் அருள்பெற்ற ஆலயங்கள்!

திருவேதிகுடிக்குப் பிரார்த்தித்துக்கொண்டால், தடைப்பட்ட திருமணங்கள் தடங்கல் இன்றி நடைபெறும். ஏற்கெனவே திருமணமானவர்கள் இங்கு வந்து வழிபட்டால், தம்பதிக்கிடையிலான மனக் கசப்புகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.

எப்படிச் செல்வது: தஞ்சாவூர் - திருவையாறு பாதையில் உள்ள இந்தத் தலம், கண்டியூருக்குக் கிழக்கே சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. தஞ்சை மற்றும் திருவையாறிலிருந்து பேருந்து வசதி உண்டு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
தலம்: ஞாயிறு
தலம்: ஞாயிறு

சூரியனுக்கு தாமரை வழிபாடு!

தலம்: ஞாயிறு

சுவாமி: புஷ்பரதேஸ்வரர்

அம்பாள்: சொர்ணாம்பிகை

திருத்தலச் சிறப்பு: பிரம்மாவின் சாபத்தால் தொழுநோய் கண்டு அவதிப்பட்ட சூரிய பகவான், சிவ வாக்குப்படி வந்து வழிபட்டு சாபம் நீங்கப்பெற்ற தலம் இது.

புஷ்பரதேஸ்வரர்
புஷ்பரதேஸ்வரர்

சோழ மன்னன் ஒருவன், இந்த வழியே வந்த போது, அருகிலிருந்த தாமரை தடாகத்தைக் கண்டு சிவ பூஜைக்காக பூக்களைப் பறித்தான். அப்போது ஒரு பூ மட்டும் விலகிச் செல்ல ஆத்திரம் கொண்ட மன்னன், கத்தியை எடுத்து மலரை வெட்டினான். அந்தப் பூவில் இருந்து ரத்தம் பீறிட அதிர்ந்த மன்னன், மயங்கிச் சரிந்தான். பிறகு மயக்கம் தெளிந்தபோது, தன் பார்வையை இழந்திருந்தான். தனது தவற்றை எண்ணி வருந்தியவன், சிவபெருமானிடம் மன்னிப்புக் கேட்க அவன் முன்னே காட்சி தந்த சிவ பெருமான், ‘இங்கே...சூரியன் வந்து வழிபடும் வகையில் ஆலயம் ஒன்றை எழுப்பு!’ என்று அருளினார். அதன்படி சிவாலயம் ஒன்றை எழுப்பிய மன்னன் நலம்பெற்றான்.

வழிபாட்டுச் சிறப்பு: சித்திரை மாதம் 1-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை, சூரியக் கதிர்கள், சிவனார் மற்றும் அம்பாள் சந்நிதியில் விழுகின்றன. இந்த நாளில், இறைவனை தரிசிப்பது பெரும்பலன் தரும் என்கின்றனர் பக்தர்கள். இங்கு 11 ஞாயிற்றுக்கிழமைகள் வந்து வணங்கி, 11-வது வாரத்தில் செந்தாமரை மலரால் அர்ச்சித்து வழிபட தீராத நோய், திருமணத் தடை ஆகியவற்றைத் தீர்த்து அருளுவார் சூரிய பகவான்.

எப்படிச் செல்வது?: திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ளது ஞாயிறு திருத்தலம். கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பஸ் வசதி உண்டு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தலம்: திருமீயச்சூர்
தலம்: திருமீயச்சூர்

பிரண்டை சாத நைவேத்தியம்!

தலம்: திருமீயச்சூர்

ஸ்வாமி: மேகநாதர், சகலபுவனேஸ்வரர்

அம்பாள்: லலிதாம்பிகை, மேகலாம்பிகை

திருத்தலச் சிறப்பு: திருக்கோயில், இளங்கோயில் என்று இரண்டு கோயில்கள் ஒரே தலத்தில் அமைந்த தலம் திருமீயச்சூர். திருக்கோயிலில் இறைவன் மேகநாத ஸ்வாமி என்ற திருப்பெயரிலும், இளங்கோயிலில் இறைவன் சகலபுவனேஸ்வரர் என்ற திருப்பெயரிலும் காட்சி தருகின்றனர். திருக்கோயில் இறைவி அருள்மிகு லலிதாம்பிகை; இளங்கோயில் இறைவி அருள்மிகு மேகலாம்பிகை.

மேகநாதர், சகலபுவனேஸ்வரர்
மேகநாதர், சகலபுவனேஸ்வரர்

பிரம்மா, சரஸ்வதி, மகாவிஷ்ணு, மகாலட்சுமி, அருணன், கருடன், காவிரி ஆகியோர் வழிபட்ட தலம். மேலும் கருடன், அருணன், வாலி, சுக்ரீவன், யமன், சனீஸ்வரன் ஆகியோர் பிறந்த தலம் என்று சொல்லப்படுகிறது. அம்பிகையிடம் லலிதா சஹஸ்ரநாமம் உபதேசம் பெற்ற ஹயக்ரீவர், அதை அகத்திய முனிவருக்கு உபதேசித்தார். உடனே அகத்தியர், மனைவி லோபாமுத்திரையுடன் இங்குவந்து லலிதா சஹஸ்ரநாமம் சொல்லி அம்பிகையைத் துதித்தார். அவருக்கு லலிதாம்பிகை நவரத்தினங்களாகக் காட்சி அருள, அகத்தியர், ‘லலிதா நவரத்தின மாலை’ பாடலையும் இயற்றினார்.

வழிபாட்டுச் சிறப்பு: சித்திரை மாதம் அக்னி நட்சத்திர காலத்தில் 21-வது நாள் முதல் 27-வது நாள் முடிய, காலை 6 முதல் 7.30 வரை, சூரியன் தன் கிரணங்களால் சிவலிங்கத் திருமேனியைத் தழுவி வழிபடுவது காணக் கிடைக்காத அற்புதக் காட்சியாகும். பிரண்டை சாத நைவேத்தியம் செய்து வழிபட்டால் வேண்டியது கிடைக்கும்.

எப்படிச் செல்வது?: திருவாரூர் மாவட்டம், பேரளம் புகைவண்டி நிலையத்திலிருந்து மேற்கே சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

திருத்தலம்: திருக்கண்டியூர்
திருத்தலம்: திருக்கண்டியூர்

ராகு-கேது தோஷங்கள் நீங்கும்!

திருத்தலம்: திருக்கண்டியூர்

ஸ்வாமி: பிரம்ம சிரகண்டீஸ்வரர்

அம்பாள்: அருள்மிகு மங்களாம்பிகை.

திருத்தலச் சிறப்பு: சூரியன் தன் தேவியர் இருவருடனும் வந்து வழிபட்ட தலம் இது. மாசியில் சூரியன் தன் கிரணங்களால் ஸ்வாமியின் திருமேனியைத் தழுவி வழிபடும் காட்சி அற்புதமாகும்.

பிரம்ம சிரகண்டீஸ்வரர்
பிரம்ம சிரகண்டீஸ்வரர்

பிரம்மாவின் கர்வத்தை அடக்க நினைத்த ஈசன் அவரின் ஒரு தலையைச் கிள்ளிய தலம் இந்த கண்டியூர். பிரம்மனைத் தண்டித்ததால் பிரம்மஹத்தி தோஷத்துக்கு ஆளானார் சிவனார். இங்குள்ள திருமால் அருளால், பிரம்மஹத்தி தோஷம் அகன்றது. சிவனாருக்கு அருள்செய்த இந்தத் திருமாலுக்கு ‘ஹரபாப விமோசனப் பெருமாள்’ என்பது திருநாமம். திருக்கண்டியூரில் உள்ள இந்தக் கோயிலும் பிரசித்தம்; 108 திவ்யதேசங்களில் ஒன்று.

வழிபாட்டுச் சிறப்பு: சாயா கிரகமான கேதுவுக்கு பிரம்மா அதிபதி. கேது தோஷம் நீங்கவும், கேதுவினால் கிடைக்கும் நற்பலன்கள் பெருகவும் இந்த பிரம்மாவை வழிபடுவது வழக்கம். படிப்பும் கல்வியும் பெருகுவதற்கு, இந்த பிரம்மாவையும் பிரம்ம சிரகண்டீஸ்வரரையும் வணங்கினால் மிகுந்த பலன் கிட்டும். பிரதோஷம்தோறும் திருக்காளத்தி சென்று வழிபடும் இயல்புடைய சாதாதப முனிவர், ஒருமுறை பிரதோஷத்தன்று அங்கு செல்ல முடியாமல் தவித்தார். அவருக்காகத் திருக்கண்டியூரிலேயே திருக்காளத்தி தரிசனம் கொடுத்ததாக ஐதிகம்.

எப்படிச் செல்வது?: தஞ்சை-திருவையாறு சாலையில், தஞ்சையில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவிலும், திருவையாறிலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவிலும் உள்ளது. தஞ்சை, திருவையாறு, கும்பகோணம் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதி உண்டு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism