Published:Updated:

திருப்பதி தரிசனம்! - போலி இணையதளங்கள் பற்றி திருமலை திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை

திருப்பதி
திருப்பதி

திருப்பதி தரிசனம் ஓர் அற்புதமான அனுபவம் என்றால், அங்கிருக்கும் ஒழுங்கு, நேர்த்தியான நிர்வாகம், சுத்தம், தடையற்ற மின்சாரம், பராமரிப்பு எல்லாமே நம்மை கவர்ந்திழுப்பவை.

திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்யச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதே வேளையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம், பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. தரிசனம் ஓர் அற்புதமான அனுபவம் என்றால், அங்கிருக்கும் ஒழுங்கு, நேர்த்தியான நிர்வாகம், சுத்தம், தடையற்ற மின்சாரம், பராமரிப்பு எல்லாமே நம்மைக் கவர்ந்திழுப்பவை.

Tirupaty
Tirupaty

குறிப்பாக, சுவாமி தரிசனம் செய்வதற்கு வரும் பக்தர்களின் வசதிக்காகத் திட்டமிடப்பட்ட ஏற்பாடுகள், நுட்பமான நிர்வாக முறைகள் அங்கு கடைப்பிடிக்கப்படுகின்றன.

கூட்டத்தைச் சமாளிக்கப் பலவிதமான தரிசனமுறைகளையும் வைத்துள்ளனர். 'சர்வ தரிசனம்', 'திவ்ய தரிசனம்' (கீழ்த்திருப்பதியிலிருந்து நடந்தே மலையேறிச் சென்று தரிசிப்பது), ஸ்பெஷல் தரிசனம் என எல்லாமே பயோமெட்ரிக் முறையிலானவை. மிகவும் வெளிப்படையானவை.

இவை தவிர, ஆதார் கார்டு துணையுடன் நேர ஒதுக்கீட்டு தரிசன முறை எனப் பலவித முறைகள் உண்டு.

திடுதிப்பென ஒருவர் திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்யத் திட்டமிட்டால், 'சிறப்பு தரிசனம்' செய்ய (300 ரூபாய் டிக்கெட்) www.tirumala.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். இந்த இணையதளம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நேரடி கண்காணிப்பில் நடத்தப்பட்டு வருகிறது.

Tirupaty
Tirupaty

ஆனால், திருப்பதி தேவஸ்தான சிறப்பு தரிசன டிக்கெட், தங்கும் அறைகளுக்கான முன்பதிவு ஆகியவற்றை முறையற்ற வகையில் பதிவுசெய்து விற்பதாகச் சில இணையதளங்களை திருப்பதி தேவஸ்தானம் பட்டியலிட்டுள்ளது.

அவற்றில் பக்தர்கள் தரிசன டிக்கெட்டுகளைப் புக் செய்து ஏமாற வேண்டாமென அறிவுறுத்தியுள்ளது. இவற்றுடன் பக்தர்கள் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாமென கேட்டுக்கொண்டுள்ளது. அந்த இணையதளங்களின் மீது கிரிமினல் வழக்கையும் தொடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

Tirupaty
Tirupaty

அந்த இணையதளங்களின் பட்டியலையும் தனது செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது.

1.www.ttdtickets.com,

2.www.ttddarshan.com,

3. Tirupatibalajidarshantickets.co.in,

4.tirupatibalajidarshanbooking.com,

5.ttdbalajidarshan.com,

6.myspiritualyatra.com,

7. tirupatibalajidarshan.co.in,

8.tirupatibalajidarshan.org,

9.www.mybalaji.in,

10. bookingtirupatidarshan.com,

11. www.templeyatri.com,

12. tirupatibalajitemple.com,

13. www.tirupatibalajidarshanbooking.co.in,

14. tirupatitourism.in,

15. tirupatitourismseva.com,

16. padmavathitravels.in,

17.ttddarshan.com,

18. tirupatibalajidarshanbooking.co.in,

19.tirupatidarshanbooking.org.

இவ்வாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு