Election bannerElection banner
Published:Updated:

திருப்பதி பேருந்துகள் மீண்டும் கோயம்பேட்டிலிருந்து இயக்கப்படுமா? - பக்தர்கள் கோரிக்கை! #Tirupati

Tirupati
Tirupati

கீழ்த் திருப்பதியில் இறங்காமல் நேராகத் திருமலைக்கே செல்லும் பக்தர்கள், ஆந்திர மாநிலப் பேருந்துகளில் மட்டுமே பயணிக்கமுடியும். ஏனென்றால், பிற மாநிலப் பேருந்துகளுக்கு மலைப்பாதையில் செல்ல அனுமதி கிடையாது.

திருப்பதிக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், திருப்பதி செல்ல மாதவரம் பஸ் ஸ்டாண்டுக்கு வந்துதான் ஆந்திர பஸ்களில் பயணிக்கவேண்டிய நிலை உள்ளது.

Tirupati
Tirupati

கீழ்த் திருப்பதியில் இறங்காமல் நேராகத் திருமலைக்கே செல்லும் பக்தர்கள், ஆந்திர பஸ்களில் மட்டுமே பயணிக்க முடியும். ஏனென்றால், பிற மாநிலப் பேருந்துகளுக்கு மலைப்பாதையில் செல்ல அனுமதி கிடையாது.

பொங்கல் போன்ற விழா நாள்களில், கூட்டத்தைச் சமாளிக்க மாதவரத்திலிருந்து ஆந்திர பஸ்கள் புறப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இப்போது, புதிதாக மாதவரத்தில் பேருந்து நிலையம் கட்டப்பட்டதால் எல்லா ஆந்திரப் பேருந்துகளுமே அங்கிருந்துதான் புறப்படுகின்றன.

Koyambedu CMBT
Koyambedu CMBT

இதனால் தென்சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளிலிருந்து செல்லும் பக்தர்கள், மாதவரம் பஸ் ஸ்டாண்டுக்குத்தான் வர வேண்டியிருக்கிறது.

திருப்பதிக்கு அடிக்கடி போய் வரும் பக்தரான நங்கநல்லூரைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்னும் பக்தர், ஒரு புகார் பட்டியலையே வாசிக்கிறார்.

Madhavaram Bus Stand
Madhavaram Bus Stand

``வேளச்சேரி, மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம் மாதிரி பகுதிகள்லேருந்து மாதவரம் போகணும்னா ஒரு மணி நேரம் ஆகிறது. சில நேரங்கள்ல ஒன்றரை மணி நேரம்கூட பஸ்ல பயணிக்கவேண்டியிருக்குது. வாடகைக் கார் புக் பண்ணிப் போகலாம்னா 400 முதல் 450 ரூபாய் வரை ஆகுது.

போதாக்குறைக்கு, சில நேரங்கள்ல கார் டிரைவர்கள் மாதவரத்துக்கு வந்தால் மறுபடியும் சவாரி கிடைக்காதென கடைசி நேரத்துல கேன்சல் பண்ணி டென்ஷனாக்கிடுறாங்க. ஏரியா ஆட்டோக்காரங்க, சவாரி கிடைக்காதுன்னு வர மாட்டேங்கிறாங்க.

Tirupati
Tirupati

அதனால, திருப்பதி பேருந்துகள் மட்டுமாவது பழையபடி கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிலிருந்து புறப்படுற மாதிரி செஞ்சாங்கன்னா பயணிகளுக்கு சௌகரியமா இருக்கும்.

அதிலும், பெருமாள் பிறந்த மாதமான புரட்டாசி மாதத்திலாவது கோயம்பேட்டிலிருந்து திருமலைக்குப் போகிற பேருந்துகள் புறப்பட்டா நல்லா இருக்கும்'' என்று கோரிக்கை வைத்தார்.

CMBT
CMBT

கூடவே இன்னொரு தகவலையும் சொன்னார். ``திருப்பதியிலேருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு 9 மணிக்கு சென்ட்ரல் வந்த சப்தகிரி ரயில், இப்போ 6 மணிக்கு புறப்படுறதால, சென்னை வர 9.45 மணியாகுது.

நாம் ரயிலைவிட்டு இறங்கி, பஸ் ஸ்டாப்புக்கு வர 10 மணியாகுது. அதுக்குப் பிறகு பஸ் பிடிச்சு, அவங்க அவங்க இடங்களுக்குப் போக பக்தர்கள் ரொம்பவே அவதிப்படவேண்டியிருக்குது'' என்றார்.

Tirupati
Tirupati

திருப்பதியில் பிரம்மோற்சவம் நடைபெறும் இந்தப் புரட்டாசி மாதத்தில் மட்டுமாவது திருப்பதி பஸ்கள் கோயம்பேடு பஸ்ஸ்டாண்டுக்கு வந்து புறப்பட வேண்டும் என பக்தர்கள் பலரும் கோரிக்கை வைக்கிறார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு