Published:Updated:

`ஜூன்-1 கோயில்கள் திறப்பு குறித்து முடிவெடுக்கவில்லை!’ -அறநிலையத்துறை விளக்கம் #VikatanFactCheck

திருவாரூர் கோயில்
திருவாரூர் கோயில்

தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில், வருகிற ஜூன் 1-ம் தேதி முதல் வழிபாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாகப் பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகிவருகின்றன. #VikatanFactCheck

ஜூன் 1-ம் தேதி முதல் தமிழகக் கோயில்கள் திறக்கப்படுவது குறித்து அறநிலையத்துறை எந்த முடிவையும் இன்னும் எடுக்கவில்லை என்று மக்கள் தொடர்பு அலுவலர் தெளிவுபடுத்தியுள்ளார்.

மதுரை மீனாட்சியம்மன் கோயில்
மதுரை மீனாட்சியம்மன் கோயில்
என்.ஜி.மணிகண்டன்

கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 22-ம் தேதி முதல் மக்கள் ஊரடங்கு, அதைத் தொடர்ந்து இரண்டு மாதங்களாகத் தொடர் ஊரடங்கு நிலவிவருகிறது. இந்த நாள்கள் முழுவதுமே இந்தியாவிலுள்ள திருக்கோயில்களில் வழிபாடுகள் நிறுத்தப்பட்டன. வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெற்றுவந்தாலும், பக்தர்கள் அதில் கலந்துகொள்ள முற்றிலும் தடை விதிக்கப்பட்டது.

கொரோனா பரவல் தடுப்பு முயற்சி... மயிலை கபாலீஸ்வரர் கோயில் பங்குனித் திருவிழா ரத்து!

தற்போது, மெல்ல மெல்ல ஊரடங்கு தளர்வுகள் செய்யப்பட்டு வருகிற நிலையில், சில மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் பொதுப் போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, ஒருசில மாநிலக் கோயில்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய வழிபாட்டுக்கும் அனுமதி வழங்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில், வருகிற ஜூன் 1-ம் தேதி முதல் வழிபாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாகப் பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

த. மருதபிள்ளை
த. மருதபிள்ளை

இதுதொடர்பாக, விகடன் சார்பில் தகவலை உறுதிசெய்து கொள்வதற்காக, அறநிலையத்துறை மக்கள் தொடர்பு அலுவலர் மருதபிள்ளையைத் தொடர்பு கொண்டு பேசினோம். அவர் கூறுகையில், "தற்போது வரை, தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் பக்தர்கள் வழிபாட்டை அனுமதிப்பது குறித்து எந்தவிதமான முடிவும் எடுக்கப்படவில்லை. அறநிலையத்துறை சார்பிலும் அப்படி எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை" என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு