Published:Updated:

உ.பி அதிர்ச்சி: ரத்த காயத்துடன் உதவி கேட்ட சிறுமி; செல்போனில் படமெடுத்து வேடிக்கை பார்த்த மக்கள்!

சிறுமி ( மாதிரி படம்)
News
சிறுமி ( மாதிரி படம்)

அப்பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு அருகில் சிறுமி ஒருவர் ரத்த காயங்களுடன் கிடப்பதை பார்த்த காவலாளி, போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அந்த சிறுமியுடன் இளைஞர் ஒருவர் வந்தது அங்குள்ள விருந்தினர் மாளிகை கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

உ.பி அதிர்ச்சி: ரத்த காயத்துடன் உதவி கேட்ட சிறுமி; செல்போனில் படமெடுத்து வேடிக்கை பார்த்த மக்கள்!

அப்பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு அருகில் சிறுமி ஒருவர் ரத்த காயங்களுடன் கிடப்பதை பார்த்த காவலாளி, போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அந்த சிறுமியுடன் இளைஞர் ஒருவர் வந்தது அங்குள்ள விருந்தினர் மாளிகை கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

Published:Updated:
சிறுமி ( மாதிரி படம்)
News
சிறுமி ( மாதிரி படம்)

உத்தர பிரதேச மாநிலம் கன்னுஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை, உண்டியல் வாங்குவதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்தார். அந்த சிறுமி வீடு திரும்பாததால் பெற்றோர், குடும்பத்தினர் பல இடங்களில் தேடி அலைந்தனர்.

இந்த நிலையில், அருகில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு அருகில் அச்சிறுமி ரத்தக் காயங்களுடன் அடிபட்டு கிடந்தது தெரியவந்தது. தலை உள்பட பல இடங்களில் ரத்தக் காயங்களுடன் அடிபட்டு உயிருக்குப் போராடி வந்த சிறுமி, தன்னை காப்பாற்றும்படி சுற்றி நின்று கொண்டிருந்த மக்களை நோக்கி இரு கைகளையும் நீட்டி கெஞ்சினார்.

சிறுமி ( மாதிரி படம்)
சிறுமி ( மாதிரி படம்)

அரசு விருந்தினர் மாளிகை காவலாளி, போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அந்தச் சிறுமியுடன் இளைஞர் ஒருவருடன் வந்தது அங்குள்ள விருந்தினர் மாளிகை கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தகவல் கிடைத்ததும் அந்த இடத்திற்கு விரைந்து  வந்த போலீசார் சிறுமியை மீட்டு ஆட்டோ மூலமாக விரைவாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து மீட்கும் வரை சிறுமி அதே இடத்தில் காயங்களுடன் வலியால் துடித்தபடி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

அந்த சிறுமி அடிபட்டு வலியால் துடிப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் சிறுமியை காப்பாற்ற முன்வராமல், சுற்றி நின்று வேடிக்கை பார்த்துள்ளனர். வலியால் துடித்த அந்தச் சிறுமிக்கு உதவி செய்து மருத்துவமனையில் சேர்க்க ஒருவர் கூட முன்வரவில்லை என்பது அதிர்ச்சி, கொடுமை.

செல்போனில் படமெடுத்து வேடிக்கை பார்த்த மக்கள்!
செல்போனில் படமெடுத்து வேடிக்கை பார்த்த மக்கள்!

மனிதாபிமானம் மரித்துவிட்டது என்பதற்கு உதாரணமாக, ஒருவர் கூட சிறுமியை காப்பாற்ற முன் வராமல், சிறுமி உதவி கேட்டு அலறுவதை பல்வேறு கோணங்களில் செல்போனில் படம் பிடித்தது வேதனையிலும் வேதனை.

இணையத்தில் பரவும் அந்த வீடியோவில், சுற்றியிருக்கும் மக்கள் கொஞ்சம் கூட சலனம் இன்றி, உதவ எந்த அக்கறையும் காட்டாமல் வீடியோ எடுக்கும் காட்சிகள், சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வீடியோ வேகமாகப் பரவி வருகிறது. ’மனிதாபிமானம் இல்லாத ஜென்மங்கள்’, ’மனித உணர்வுகள் அற்ற மிருகங்கள் ஒரு காட்சி பொருளாக படமெடுக்கும் அளவுக்கு செல்போன் மோகத்தில் விழுந்து அறிவிழந்து விட்டனர்’ என சமூக வலைதளங்களில் அவர்களை கடுமையாக சாடி வருகின்றனர். அத்துடன் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இறுதியாக, காவலர் ஒருவர் தனி ஆளாக அந்தச் சிறுமியை தூக்கிக்கொண்டு ஆட்டோவில் ஏற்றி வைக்கும் வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது. அதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

சிறுமி ( மாதிரி படம்)
சிறுமி ( மாதிரி படம்)

மருத்துவமனையில் சிறுமி சேர்க்கப்பட்டுள்ள நிலையில்,  இது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறும்போது, 'காயம் அடைந்த நிலையில் சிறுமி மீட்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனையில் சிறுமியை சேர்த்துள்ளோம். சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும், சிறுமிக்கு நேர்ந்த காயங்களின் தன்மை குறித்து மருத்துவர்களின் அறிக்கைக்கு பின்னரே அறிய வரப்படும். சிறுமியுடன் வந்த இளைஞரை தேடி வருகிறோம்’ என்று தெரிவித்துள்ளனர்.