Published:Updated:

சுருக்கு மடிவலையை பயன்படுத்த அரசு அனுமதிக்கக்கூடாது; காரணம் சொல்லும் நாட்டுப்படகு மீனவர்கள்!

சுருக்கு மடிவலை
News
சுருக்கு மடிவலை

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுருக்கு மடிவலையை பயன்படுத்திட அரசு அனுமதி வழங்க வேண்டும் என விசைப்படகு மீனவர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுருக்கு மடிவலையை பயன்படுத்த அரசு அனுமதிக்கக்கூடாது; காரணம் சொல்லும் நாட்டுப்படகு மீனவர்கள்!

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுருக்கு மடிவலையை பயன்படுத்திட அரசு அனுமதி வழங்க வேண்டும் என விசைப்படகு மீனவர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Published:Updated:
சுருக்கு மடிவலை
News
சுருக்கு மடிவலை

தமிழ்நாடு கடல்சார் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை வெளியிட்ட அரசாணையின்படி சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பில் ஈடுபடக்கூடாது என, 25.03.2000-ல்  தடை விதித்தது. இந்த நிலையில், சுருக்கு மடிவலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி அளிக்கக்கோரி, கடல்சார் மக்கள் சங்கம் சார்பில் தமிழகத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த மீன்வர்கள்  சென்னை எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் போராட்டத்தை நடத்தியுள்ளனர். சுருக்குமடிவலைகளைப் பயன்படுத்தி விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிப்பதால், நாட்டுப்படகு மீனவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்னென்ன என்பது குறித்து தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு  பைபர் மற்றும் கட்டுமர மீனவர் சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் கயஸிடம் பேசினோம்.

நாட்டுப்படகுகள்
நாட்டுப்படகுகள்

 “தமிழ்நாட்டுல 14 கடலோர மாவட்டங்களில் 50,000-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகள் உள்ளன.  5 லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள்ள  தொழிலுக்குப் போறாங்க. 4,000 விசைப்படகுகள் உள்ளன. இதில், பதிவு செய்யப்படாத நிலையில் 2,000 விசைப்படகுகள் உள்ளது.

தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் 1983-ல்  நடைமுறைக்கு வந்ததே  பாரம்பர்ய நாட்டுப்படகு மீனவர்கள் இரவில் மீன்பிடிப்பதற்கு எந்தத்தடையும்  இருக்கக்கூடாது என்பதற்காகத்தான். அதனால்,  விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக காலை 5 மணி முதல்  இரவு 9 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டது. விசைப்படகுகளில் 70 குதிரை திறன் இயந்திரத்திற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு  240 குதிரை திறன் இயந்திரத்திற்கு அரசு அனுமதித்தது.

விசைப்படகுகள்
விசைப்படகுகள்

பெரும்பாலான விசைப்படகுக்காரர்கள், 650 குதிரைதிறன் இயந்திரத்தைப் பொருத்தி அதில், ’240 குதிரைத்திறன்’  என்ற போலி லேபிள்களை ஒட்டி,  அத்துடன் இழுவைத் திறனைக் கூட்டுவதற்காக கியர் பாக்ஸ், பம்ப்களையும் மாற்றி அமைச்சிருக்காங்க.  விசைப்படகின் நீளமும் நிர்ணயிக்கப்பட்ட அளவைத்தாண்டி இருக்கு.  இது எல்லாமே சட்டவிரோதம்தான். தகுதியான விசைப்படகுகள் குறித்து மீன்வளத்துறை அதிகாரிகளும் முறையாக ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை” என்றவர்,  மீன்பிடி வலையைப் பற்றிச் சொன்னார்.

 ”ஆரம்பகாலங்கள்ல  கட்டுமரங்கள் மூலமாத்தான் மீனவர்கள் மீன்பிடித் தொழிலைச் செய்தாங்க. அதற்குப் பிறகு கட்டுமரங்கள், சிறிய படகுகளானது. இதை நாட்டுப்படகுகள்னு சொல்றோம். பேச்சு வழக்குல இதுக்கு ‘வள்ளம்’னு இன்னொரு பேரு இருக்கு. பிறகு இதில் சிறிய மோட்டார்கள் பொருத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர், பெரிய விசைப் படகுகளில்  அதிக குதிரைதிறன் கொண்ட விசைப்படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நாட்டுப்படகுகள், விசைப்படகுகள் இரண்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளன.    தூண்டில் மூலம் மீன்பிடித்தல், ஆழ்கடலில் தூண்டில் மூலம் மீன் பிடித்தல், கரைப்பகுதிகள் மற்றும் ஆழ்கடலில் வலைகள் மூலம் மீன் பிடித்தல் என பல வகை மீன்பிடித்தல் உள்ளன.

கயஸ்
கயஸ்

இதில், வலைகள் மூலம் மீன்பிடித்தலிலும் பல வகை உள்ளது. நீரில் அமிழ்த்தும் வலை, எறிதல் வகை வலை, முடிப்பு வலை, வட்டவலை, செவுள் வலை,  மடி வலை, சுருக்கு மடிவலைன்னு பல வகை இருக்கு. இதுல  மடிவலை, சுருக்கு மடிவலை இரண்டைப் பயன்படுத்தி மீன்களைப் பிடிக்கும் போது  தரை மட்டத்தில் மண்ணுடன் சேர்த்து குஞ்சு மீன்கள் முதல் பெரிய மீன்கள்  அள்ளி எடுத்து வரப்படும்.  அபாயம் உள்ளது.  

கடலில் நீரோட்டங்களுக்குத் தகுந்தபடி இந்த வலை வீசப்படுகிறது. சுமார் 10 டன் எடையுடைய பெரிய விசைப்படகுகளில்தான் இந்த வலைகளைக்  கொண்டு செல்ல முடியும்.  30 முதல் 40 பேர் சேர்ந்துதான் இந்த வலையை பிடித்து இழுக்க முடியும்.  ’சுருக்குப்பை’ போல வட்ட வடிவில் இறுகிக்கொண்டே செல்லும் என்பதால் இதற்கு ’சுருக்கு மடிவலை’ என்று பெயர். இந்த வகையில் மீன்பிடித்தால் அதிக லாபம் கிடைப்பதால் இதனை பயன்படுத்துகிறார்கள். ஆனால், சாதாரண வலையைப் பயன்படுத்தும் நாட்டுப்படகு  மற்றும் பாரம்பர்ய படகு மீனவர்களுக்கு குறைந்த லாபமே கிடைக்கிறது.

கடலுக்குச் செல்லும் நாட்டுப்படகு மீனவர்கள்
கடலுக்குச் செல்லும் நாட்டுப்படகு மீனவர்கள்

சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் போது அடிமண், குஞ்சுமீன், பெரிய மீன்கள் வரை மாட்டிக் கொள்ளும் என்பதால் மீன்வளம் குறையும் அபாயம் உள்ளது. நாட்டுப்படகு மீனவர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழக அரசு 2007-ம் ஆண்டு தடை விதித்தது”  மீனவர்களுக்கு மீன்பிடித்தல்  தொழில் எவ்வளவு முக்கியமோ, அதைப் போல கடல் வளத்தைப் பாதுக்காப்பதும் முக்கியம்” என்றார்.