Published:Updated:

`ஏன் அடிக்கடி மின் வெட்டு?' கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி ஜார்க்கண்ட் அரசுக்குக் கேள்வி

சாக்சி தோனி
News
சாக்சி தோனி

ஏன் அடிக்கடி மின் வெட்டு ஏற்படுகிறது என்று கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி மனைவி கேள்வி எழுப்பியுள்ளார்.

`ஏன் அடிக்கடி மின் வெட்டு?' கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி ஜார்க்கண்ட் அரசுக்குக் கேள்வி

ஏன் அடிக்கடி மின் வெட்டு ஏற்படுகிறது என்று கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி மனைவி கேள்வி எழுப்பியுள்ளார்.

Published:Updated:
சாக்சி தோனி
News
சாக்சி தோனி

நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. நாட்டின் பெரும்பாலான பகுதியில் வெப்பத்தின் அளவு 40 டிகிரிக்கும் அதிகமாக இருக்கிறது. இதனால் மக்கள் மத்தியில் மின் தேவை அதிகரித்துள்ளது. மின் தேவை அதிகரிப்பால் தற்போது அடிக்கடி அறிவிக்கப்படாத மின் வெட்டு அமல்படுத்தப்பட்டு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் குடும்பமும் இந்த மின் வெட்டில் இருந்து தப்பவில்லை. ஜார்க்கண்டில் வசிக்கும் தோனி மனைவி சாக்சி தோனி இதுகுறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், "ஏன் ஜார்க்கண்டில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக மின் தட்டுப்பாடு பிரச்னை இருக்கிறது என்பதை வரி கட்டுபவர் என்ற முறையில் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்

கணவருடன் சாக்சி
கணவருடன் சாக்சி

நாங்களும் மின்சாரத்தை சேமிக்க எங்களால் முடிந்தவற்றை செய்து கொண்டுதான் இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார். தோனி மனைவி வழக்கமாக சமூக வலைதளத்தில் அதிகம் ஆர்வம் காட்டமாட்டார். கடைசியாக தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தனது கருத்தை பதிவிட்டு இருந்தார். அதன் பிறகு இப்போதுதான் மின்வெட்டு பிரச்னையை எழுப்ப ட்விட்டரைப் பயன்படுத்தியிருக்கிறார். இதற்கிடையே நாட்டில் நிலவும் நிலக்கரி தட்டுப்பாட்டு பிரச்னைக்கு தற்காலிக மற்றும் நீண்ட கால தீர்வு குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வனியுடன் மத்திய மின் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் முக்கிய ஆலோசனை நடத்தினார். அனைத்து மாநிலங்களும் தங்களுக்கு கூடுதல் நிலக்கரி ஒதுக்கவேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism