Published:Updated:

வெடித்துச் சிதறியது உலகின் மிகப்பெரிய மீன்தொட்டி..!

உலகின் மிகப்பெரிய மீன் தொட்டி
News
உலகின் மிகப்பெரிய மீன் தொட்டி

இந்த ஹோட்டலின் வரவேற்பறையில், 46 அடி உயரத்தில் உருளை வடிவத்தில் இந்த மீன் தொட்டி அமைக்கப்பட்டிருந்தது. இதுதான் உலகின் மிகப்பெரிய மீன் தொட்டியாக இருந்து வந்தது. இது சுமார் ஒரு மில்லியன் லிட்டர் தண்ணீரால் நிரப்பப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட 1,500 மீன்களும் இதில் இருந்தன.

வெடித்துச் சிதறியது உலகின் மிகப்பெரிய மீன்தொட்டி..!

இந்த ஹோட்டலின் வரவேற்பறையில், 46 அடி உயரத்தில் உருளை வடிவத்தில் இந்த மீன் தொட்டி அமைக்கப்பட்டிருந்தது. இதுதான் உலகின் மிகப்பெரிய மீன் தொட்டியாக இருந்து வந்தது. இது சுமார் ஒரு மில்லியன் லிட்டர் தண்ணீரால் நிரப்பப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட 1,500 மீன்களும் இதில் இருந்தன.

Published:Updated:
உலகின் மிகப்பெரிய மீன் தொட்டி
News
உலகின் மிகப்பெரிய மீன் தொட்டி

ஜெர்மனியில் உள்ள உயர்தர ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்த சுமார் 10 லட்சம் லிட்டர் தண்ணீரைக் கொள்ளளவாகக் கொண்ட மீன்தொட்டி, வெடித்துச் சிதறியதில், தண்ணீர் தெருக்களில் வெள்ளமாகப் பாய்ந்தது.

ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில், ராடிசன் ப்ளூ என்ற உயர்தர ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டலின் வரவேற்பறையில், 46 அடி உயரத்தில் உருளை வடிவத்தில் இந்த மீன்தொட்டி அமைக்கப்பட்டிருந்தது. இதுதான் உலகின் மிகப்பெரிய மீன்தொட்டியாக இருந்து வந்தது.

உலகின் மிகப்பெரிய 
மீன்தொட்டி
உலகின் மிகப்பெரிய மீன்தொட்டி

இது சுமார் ஒரு மில்லியன் லிட்டர் தண்ணீரால் நிரப்பப் பட்டிருக்கும். சுமார் 1,500 மீன்களும் இதில் இருந்தன. இந்தத் தொட்டி கடைசியாக 2020-ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைச் சுத்தம் செய்யும்பொழுது, தொட்டியில் இருந்து தண்ணீர் முழுவதும் முறையாக வெளியேற்றப்பட்டு விடும். கட்டடத்தின் அடித்தளத்தில் மீனை பராமரிக்க ஏற்ற வசதி உள்ளதால் பாதுகாப்பான முறையிலேயே தண்ணீர் மாற்றப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை, இந்த மீன்தொட்டி வெடித்துச் சிதறியது. இது மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது போல் இருந்ததாக அங்கிருந்தவர்கள் கூறினர். அந்த ஹோட்டலில் இருந்த 350-க்கும் அதிகமானோர் உடனடியாக அங்கிருந்து வேறு இடத்துக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

வெடித்துச் சிதறியது உலகின் மிகப்பெரிய மீன்தொட்டி..!

சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்ததால், அருகிலிருந்த கடைகள் மற்றும் சாலைகளும் உடனடியாக அடைக்கப்பட்டன. தகவலறிந்து அவ்விடத்துக்கு விரைந்த 100-க்கும் மேற்பட்ட மீட்புப்படையினர், விரைவாகவும் டிரோன் உதவி கொண்டும் துல்லியமாகக் கண்ணாடித் துண்டுகளை அகற்றும் பணியை மேற்கொண்டனர். இதில் இருவர் காயமைடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

தொட்டி திடீரென உடைந்ததற்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது. இதில் இருந்த 1,500 மீன்களின் நிலை பற்றியும் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. பெர்லின் நகரின் முக்கிய சுற்றுலாத்தளமாகவும், அடையாளமாகவும் இருந்த இந்த மீன்தொட்டி வெடித்துச் சிதறியது அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.