Published:Updated:

வருமான வரி செலுத்தியதற்கு விருது... ரஜினிகாந்த்துக்கு வழங்கியதில் எந்த நியாயமும் இல்லை!

ரஜினிகாந்த்
News
ரஜினிகாந்த்

பெரும்புகழ் பெற்ற நடிகர் ரஜினிகாந்த்துக்கு இவ்விருது வழங்கப்பட்டதால் இதைப் பற்றிப் பேசுகிறோம். இதை ஓர் அரசியல் வியூகமாகத்தான் பார்க்க முடிகிறது. வரி கட்டுவதை வைத்து மட்டும் அவர்களுடைய உண்மையான வருவாயைத் தீர்மானித்துவிட முடியாது.

வருமான வரி செலுத்தியதற்கு விருது... ரஜினிகாந்த்துக்கு வழங்கியதில் எந்த நியாயமும் இல்லை!

பெரும்புகழ் பெற்ற நடிகர் ரஜினிகாந்த்துக்கு இவ்விருது வழங்கப்பட்டதால் இதைப் பற்றிப் பேசுகிறோம். இதை ஓர் அரசியல் வியூகமாகத்தான் பார்க்க முடிகிறது. வரி கட்டுவதை வைத்து மட்டும் அவர்களுடைய உண்மையான வருவாயைத் தீர்மானித்துவிட முடியாது.

Published:Updated:
ரஜினிகாந்த்
News
ரஜினிகாந்த்

தனிநபர் வரி செலுத்துதல் பிரிவில் அதிக அளவு வரி செலுத்தியதுக்காக நடிகர் ரஜினிகாந்த் உட்பட 4 பேருக்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல வருமான வரித்துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற 163-வது வருமான வரி தின விழாவில் இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது. ரஜினிகாந்த் சார்பில் அவரின் மகள் ஐஸ்வர்யா இவ்விருதைப் பெற்றுக்கொண்டார். வரி செலுத்துவதென்பது குடிமக்களாகிய நம் அனைவரின் கடமை என்பதோடு, சட்டப்படி அனைவரும் வரி கட்டியே ஆக வேண்டும் என்கிற சூழலில் அதிக வரி செலுத்தியவர்களுக்கு விருது கொடுப்பது முறையானதா? என ஆடிட்டர் சதீஷ்குமாரிடம் கேட்டோம்...

எஸ்.சதீஷ்குமார், ஆடிட்டர்
எஸ்.சதீஷ்குமார், ஆடிட்டர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``அதிக வருவாய் ஈட்டுகிறவர்கள் அதற்கேற்றாற்போல் அதிக அளவிலான வரி செலுத்தியே ஆக வேண்டும். வரி செலுத்துவது என்பது குடிமக்கள் அனைவரும் கட்டாயம் செய்தே ஆக வேண்டிய கடமை. 80 - 90 வயதில் ஓய்வூதியம் பெறுகிறவர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுகிறவர்கள்கூட நெருக்கடிகளுக்கு மத்தியிலும் வரி கட்டுகிறார்கள். இப்படியிருக்கையில் பல கோடி ரூபாய் சம்பாதித்து அதிலிருந்து உரிய வருமான வரியைக் கட்டியதுக்காக விருதளிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பெரும்புகழ் பெற்ற நடிகர் ரஜினிகாந்த்துக்கு இவ்விருது வழங்கப்பட்டதால் இதைப் பற்றிப் பேசுகிறோம். இதை ஓர் அரசியல் வியூகமாகத்தான் பார்க்க முடிகிறது. வரி கட்டுவதை வைத்து மட்டும் அவர்களுடைய உண்மையான வருவாயைத் தீர்மானித்துவிட முடியாது. அவர்களுடைய வரவு செலவை முற்றிலுமாக ஆராய்ந்து, அனைத்து வருவாய்க்கும் உரிய வரி கட்டியிருக்கிறார்களா என்பதைக் கண்டறிய வேண்டும். அவர்களுடைய சொத்துகள் எல்லாவற்றையும் ஆராய வேண்டும். அதிக அளவிலான வரி கட்டியிருக்கிறார்கள் என்றாலும், சிறிய அளவில் கட்ட வேண்டிய வரியைக் கட்டாமல் விட்டிருந்தார்கள் என்றால் அது குற்றம்தான்.

வருமான வரி
வருமான வரி

அப்படியே அவர்கள் தங்களுடைய வருவாய்க்கு நேர்மையாக வரி கட்டியிருந்தார்கள் என்றாலுமே, அது அவர்களின் கடமைதானே, அதற்கு எதற்கு விருது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிக்கு சிகிச்சை கொடுப்பது ஒரு மருத்துவரின் பணி. அதுவே, மிகவும் ஆபத்தான சூழலில் தன் உயிரையும் பணயம் வைத்து ஓர் நோயாளியைக் காப்பாற்ற அம்மருத்துவர் செல்கிறார் என்றால் அதைத்தான் நாம் பெருமைப்படுத்த வேண்டும்.

ரஜினி உட்பட நான்கு பேர் அதிகம் வரி கட்டியிருக்கிறார்கள் என்று விருதளித்தால் அவரைவிட அதிகம் சம்பாதிக்கிறவர்கள் வரி ஏய்ப்பு செய்வதுபோல பொருள் கொள்ளப்படும். நாம் எல்லோருமே சட்டப்படிதானே வரி கட்டிக்கொண்டிருக்கிறோம். நியாயமாகச் செலுத்த வேண்டிய வரியைக் கட்டியதற்கு விருதளித்து ஊக்கப்படுத்த வேண்டிய தேவை இல்லை. வணிக நிறுவனங்கள் அதிகம் பொருள்கள் வாங்கும் வாடிக்கையாளர் களுக்கு சலுகைக் கூப்பன் வழங்குவதைப்போல ஓர் அரசு செயல்படக் கூடாது. இது பெயரளவில் விருது என்று சொல்லப்பட்டாலும் அதில் எந்த நியாயமும் இல்லை" என்றார் சதீஷ்குமார்.