Published:Updated:

பிறருக்காக மறைவில் வாழத் தேவையில்லை... LGBT உரிமைக்காக மனம் திறந்த ரஷ்ய வீராங்கனை!

டாரியா கசட்கினா | ரஷ்ய வீராங்கனை
News
டாரியா கசட்கினா | ரஷ்ய வீராங்கனை

``பிறருக்காக மறைவில் வாழத் தேவையில்லை... அது அர்த்தமற்றது. நாம் நிம்மதியாக வாழ்வதுதான் முக்கியம். மற்றதையெல்லாம் விட்டுத் தள்ளுங்கள்'' - LGBT உரிமைகள் குறித்து வெளிப்படையாக விமர்சனம் செய்த ரஷ்ய வீராங்கனை டாரியா கசட்கினா.

பிறருக்காக மறைவில் வாழத் தேவையில்லை... LGBT உரிமைக்காக மனம் திறந்த ரஷ்ய வீராங்கனை!

``பிறருக்காக மறைவில் வாழத் தேவையில்லை... அது அர்த்தமற்றது. நாம் நிம்மதியாக வாழ்வதுதான் முக்கியம். மற்றதையெல்லாம் விட்டுத் தள்ளுங்கள்'' - LGBT உரிமைகள் குறித்து வெளிப்படையாக விமர்சனம் செய்த ரஷ்ய வீராங்கனை டாரியா கசட்கினா.

Published:Updated:
டாரியா கசட்கினா | ரஷ்ய வீராங்கனை
News
டாரியா கசட்கினா | ரஷ்ய வீராங்கனை

ரஷ்யாவில் மாஸ்கோ நகரில் வசித்து வருபவர் பிரபல டென்னிஸ் வீராங்கனை டாரியா கசட்கினா, இவர் வெளியிட்டுள்ள புகைப்படமும் கருத்துகளும் அந்நாட்டில் தற்போது கடும் சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தி வருகின்றன.

25 வயதான டென்னிஸ் வீராங்கனை டாரியா கசட்கினா, கடந்த பிரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ் போட்டியில் அரையிறுதிப் போட்டி வரை முன்னேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. டென்னிஸ் விளையாட்டில் உலகத்தின் தரவரிசைப் பட்டியலில் பன்னிரண்டாவது இடத்தில் உள்ளார்.

டாரியா கசட்கினா
டாரியா கசட்கினா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரஷ்யாவில் மறுக்கப்படும் LGBT உரிமைகள் குறித்து வெளிப்படையாக விமர்சனம் செய்த இவர், தான் தன்பாலின ஈர்ப்பாளர் என்பதை அறிவித்து தன்னுடைய காதலியின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தன்பாலின ஈர்ப்பு என்பது இயற்கையை மீறிய உறவு என்று கருதும் ரஷ்யா, அதைத் தடை செய்ய பல்வேறு வழிகளில் முயன்று வருகிறது. 2013-ம் ஆண்டே தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு எதிராக ரஷ்யாவில் சட்டம் இயற்றப் பட்டுள்ளது. ரஷ்யாவின் கால்பந்து வீராங்கனையான நடியா, இந்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துதான் தன்பாலின ஈர்ப்பாளர் என்பதை வெளிப்படையாக அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து டாரியா கசட்கினாவும் தான் தன்பாலின ஈர்ப்பாளர் என்பதை அறிவித்து தன் காதலியின் புகைப்படத்தை தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தச் சம்பவங்கள் ரஷ்யாவில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளன.

காதலியுடன்   டாரியா கசட்கினா
காதலியுடன் டாரியா கசட்கினா

டாரியா தான் காதலித்து வரும் தோழியின் புகைப்படத்தை தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய டாரியா, தமது நாட்டின் அணுகுமுறையை விமர்சித்துள்ளார். அத்துடன், ``பிறருக்காக மறைவில் வாழத் தேவையில்லை.. அது அர்த்தமற்றது. நாம் நிம்மதியாக வாழ்வதுதான் முக்கியம். மற்றதையெல்லாம் விட்டுத் தள்ளுங்கள். நாட்டில் செல்வாக்கு மிக்கவர்களும் விளையாட்டுத் துறைகளில் இருப்பவர்களும் ஒரே பாலின திருமணத் தடையை எதிர்த்துப் பேசுவது முக்கியம்'' என்று கூறியுதோடு, தன் காதலியை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.