Published:Updated:

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் கேரளா ஆலப்புழா படகுவீடு..!

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் கேரளா ஆலப்புழா படகுவீடு..!
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் கேரளா ஆலப்புழா படகுவீடு..!

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் கேரளா ஆலப்புழா படகுவீடு..!

ஒரு பயணம் கண்களுக்கும், மனதுக்கும் விருந்தாக அமைந்தால் எப்படி இருக்கும் அதுபோலதான் ஆலப்புழா படகு வீடு பயணம். காஷ்மீரின் பாரம்பர்ய சின்னமான படகு வீடுகளை, இப்போது தனது பாரம்பர்யமாக மாற்றி விட்டது கேரளா. தண்ணீர்மீது தங்கும் அந்த அழகிய அனுபவம் வித்தியாசமான சூழலுக்குக் கடத்திச் செல்கிறது. பாரம்பர்யமிக்க வீடு ஒன்று தண்ணீரில் கம்பீரமாக மிதப்பதுபோல் காட்சியளிக்கிறது, `இரண்டு பெட் ரூம்களுடன் கூடிய படகு வீட்டின் வாடகை 8,000 ரூபாய். இந்தப் படகு வீட்டை இரு ஆட்கள் கவனித்துக் கொள்வார்கள். அவர்களே சமையலும் செய்து கொடுப்பார்கள். மதிய சாப்பாடு நேரத்தில் பயணிகளின் விருப்பத்திற்கேற்ப மெனு சொன்னவுடன் கடல் உணவுகள் மெனுவில் இருந்தால் காயல் கரையோர சந்தைப் பகுதியின் முன் படகினை நிறுத்தி அங்கு எல்லா விதமான கடல் மீன்களையும் வாங்கிக் கொண்டு அதை வாங்கி பயணிகளுக்குச் சுவையான விருந்தாகக் கொடுக்கிறார்கள்.


இப்படிப் பயணிக்கும்போது படகோட்டிகள் மாலை ஆறு மணிக்குப் படகை ஓர் இடத்தில நிறுத்தி விடுவார்கள். பின்னர் மறுநாள் காலை ஒன்பது மணிக்குத்தான் பயணம் தொடரும். பின்னர் அங்கிருக்கும் சிறு கிராமங்களுக்குச் சென்று சுற்றுலாப் பயணிகள் தங்களுக்கு வேண்டிய நினைவு பொருள்களை வாங்கி வரலாம். இருள் அடர்ந்த அந்தப் பொழுதில் இரவு உணவை முடித்துக்கொள்கிறார்கள். அதிகாலையில் அந்தச் சூரியன் உதிக்கும்போது படகும், தண்ணீரும் தங்கமாக மாறுவதுபோல ஒரு தோற்றம். அது ஒரு கண்கொள்ளாக்காட்சி. தூங்கி எழுந்த பின் காலையில் ஆப்பமும், கடலைக் கறி சாப்பாடும்.


ஆலப்புழா மற்றும் குமரக்கோம் இவை இரண்டும் பேக் வாட்டர் மற்றும் படகு சவாரிக்கு மிகப் புகழ் பெற்றது. இரு இடங்களிலிருந்தும் இரவு நேரப் படகு சவாரி உண்டு. எனினும்- ஆலப்புழாதான் இப்படி ஒரு முழு நாள் சவாரி செல்ல சிறந்தது. ஆலப்புழாவில் 2000-க்கும் மேற்பட்ட படகுகள் உள்ளன. இதனால் சவாரிக்கான செலவு கணிசமாகக் குறைவு. குமரக்கோமில் 50-க்கும் குறைவான படகுகள்தான் உள்ளன. திருமணமான புது தம்பதியர்கள், இங்குதான் ஹனிமூன் கொண்டாட வருகிறார்கள். படகு வீடும் அதன் மிதப்புத் தன்மையும் தண்ணீர்ச் சத்தமும் ஒரு தனி ரம்மியத்தைக் கொடுக்கும். ஒரு மறக்க முடியாத பயணம் சீக்கிரம் முடிந்துவிட்டதே என்றிருக்கும். ஆற்று நீரை வீணாகக் கடலில் கலக்கவிடாமல் காயல்களில் விடுவதினால் நிலத்தடி நீர் வளமும் கேரளாவில் குறைவதில்லை. காயலில் எப்போதும் நீர் இருப்பதினால் படகு வீடுகள் மிதக்கின்றன. அதன் மூலம் சுற்றுலாப் பயணிகளைக் கேரளா கவர்கிறது.

அடுத்த கட்டுரைக்கு