Published:Updated:

நெல்லை-தாம்பரம் அந்த்யோதயா ரயில்கள் ரத்து!

நெல்லை-தாம்பரம் அந்த்யோதயா ரயில்கள் ரத்து!
நெல்லை-தாம்பரம் அந்த்யோதயா ரயில்கள் ரத்து!

நெல்லை-தாம்பரம் இடையே தினசரி இயக்கப்பட இருந்த அந்த்யோதயா ரயில் சேவை தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. நாளை (27-ம் தேதி) இயக்கப்பட இருந்த ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

நெல்லை-தாம்பரம் இடையே தினசரி இயக்கப்பட இருந்த அந்த்யோதயா ரயில் சேவை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நாளை (27-ம் தேதி) இயக்கப்பட இருந்த ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

நெல்லை-தாம்பரம் அந்த்யோதயா ரயில்கள் ரத்து!

ரயில்வே துறையின் சார்பாக, ரயில் கால அட்டவணை வெளியிடப்பட்டபோது, நெல்லை-தாம்பரம் மற்றும் கொச்சுவேலி-மங்களூர் ஆகிய வழித்தடங்களில் வாரம் இருமுறையும் செங்கோட்டை-சென்னை இடையே தினமும் அந்த்யோதயா ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த்யோதயா ரயில் என்பது முழுவதும் முன்பதிவு இல்லாத பெட்டிகளைக் கொண்டு இயக்கப்படும் ரயில் என்பதால், அதிகக் கூட்ட நெரிசல் இருக்கும் பகுதிகளில் இந்த ரயில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வழக்கமான எக்ஸ்பிரஸ் ரயில்களில் 2 முதல் 4 பெட்டிகள் மட்டுமே முன்பதிவு இல்லாத பயணிகள் செல்வதற்காக அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், அந்த்யோதயா ரயிலில் அனைத்துப் பெட்டிகளுமே முன்பதிவு செய்யப்படாத சாதாரணப் பெட்டிகள் என்பதால், பயணிகள் குறைந்த கட்டணத்தில் பயணிக்க வசதி கிடைக்கும் என்பதால் இந்த ரயில்களுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. 

இந்த நிலையில், 27-ம் தேதி முதல் தாம்பரம்-நெல்லை மற்றும் நெல்லை-தாம்பரம் இடையே தினமும் அந்த்யோதயா ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரம் வரை இந்த ரயில் செல்லும் என அறிவிக்கப்பட்டது. தாம்பரத்தில் நள்ளிரவு 12.30 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் மறுநாள் பகல் 3.30 மணிக்கு நெல்லை வந்தடையும் என்றும் நெல்லையில் மாலை 5.30 மணிக்குப் புறப்படும் ரயில் மறுநாள் காலை 9.15 மணிக்கு தாம்பரம் செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்த ரயில் அறிவிப்பில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி 27-ம் தேதிக்கான ரயில் ரத்து செய்யப்படுவதாகவும் பிற ரயில்களுக்கான தேதி தள்ளி வைக்கப்படுவதாகவும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரயில் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். 

அடுத்த கட்டுரைக்கு