Published:Updated:

சென்னை ஐ.சி.எஃப்-பில் தயாரிப்பு! மணிக்கு 160 கி.மீ வேகத்தில் பறக்கும் 'ஹைடெக்' ரயில்!

சென்னை ஐ.சி.எஃப்-பில் தயாரிப்பு! மணிக்கு 160 கி.மீ வேகத்தில் பறக்கும் 'ஹைடெக்' ரயில்!
சென்னை ஐ.சி.எஃப்-பில் தயாரிப்பு! மணிக்கு 160 கி.மீ வேகத்தில் பறக்கும் 'ஹைடெக்' ரயில்!

சென்னை பெரம்பூர் ஐ.சி.எஃப் நிறுவனத்தில், மணிக்கு 160 கி.மீ வேகத்தில் பறக்கும் ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. 

சிறப்பம்சம்  என்னவென்றால், இந்த ரயிலுக்கு தனியாக இன்ஜின் இருக்காது. புறநகர் ரயில்களில் உள்ளதுபோல முன்புறமும் பின்புறமும் ஓட்டுநர்கள் இருப்பார்கள். ரயிலை இயங்குவதற்கான மின்சார மோட்டார்கள் பெட்டிகளின் அடியில் பொருத்தப்பட்டுள்ளன.

முதன்முறையாக, நெடுந்தொலைவு ரயில்கள் தனியாக இன்ஜின் இல்லாமல் இயக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் எளிதாக ஏறி இறங்கும் வகையில், தானியங்கிக் கதவுகள், நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. நடைமேடைக்கு வந்தவுடன் தானாகவே படிக்கட்டுகள் திறந்து, நடைமேடைக்கும் ரயிலுக்கும் உள்ள இடைவெளியை மறைத்துவிடும். இதனால், பயணிகள் தண்டவாளத்தில் தவறி விழுவதுபோன்ற அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டுள்ளது. 

16 பெட்டிகளும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டவை. வைஃபை, செல்போன் சார்ஜ் வசதியும் உண்டு. இருக்கைகள் புஷ்பேக் வசதி கொண்டவை. புத்தகம் படிப்பதற்குச் சுழலும் விளக்குகள், பயோ கழிப்பறை வசதிகள் கொண்ட பெட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன. வெளிப்புறத்தில் உள்ள தட்பவெப்பச் சூழலுக்கு ஏற்ப உள்பகுதியில் தானாகவே குளிர் குறைவும், கூடவும் செய்யும் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. 

18 மாதங்களில் இதைத் தயாரித்து, ஐ.சி.எஃப் சாதனை படைத்துள்ளது. மணிக்கு 160 கி.மீ வேகத்தில் பறக்கும் இந்த ரயிலைத் தயாரிக்க ரூ.100 கோடி செலவாகியுள்ளது. டெல்லியில் இருந்து போபால் வரை முதன்முதலாக இயக்கப்படும் இந்த ரயில், அடுத்த மாதத்தில் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படும். சதாப்திக்கு  மாற்றாக இது வர உள்ளது.