Published:Updated:

வெள்ளத்தால் கேரள சுற்றுலாத்துறைக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு.!

வெள்ளத்தால் கேரள சுற்றுலாத்துறைக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு.!

வெள்ளத்தால் கேரள சுற்றுலாத்துறைக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு.!
வெள்ளத்தால் கேரள சுற்றுலாத்துறைக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு.!

பெருமழை காரணமாக கேரளாவே நீரில் மூழ்கியது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களின் வீடுகளை, உடைமைகளை இழந்தன. இந்நிலையில், கேரள சுற்றுலாத்துறைக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது.

கேரள மாநிலத்தின் பெரும்பாலான வருவாய் அதன் சுற்றுலாத்துறையை நம்பியே உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தலங்கள் வெள்ளத்தால் பெரும் சேதத்தைச் சந்தித்திருக்கின்றன. மேலும், ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை மாநிலத்தின் பல்வேறு சுற்றுலாத்தலங்களுக்கு வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து வருவதற்காக முன்பதிவு செய்திருந்தவர்கள், தங்களது முன்பதிவுகளை ரத்து செய்திருக்கிறார்கள். இதனால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகச் சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இதனால் மாநிலத்தின் மொத்த வருவாயில் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

வெள்ளத்தால் சேதமடைந்த சுற்றுலாத்தலங்களை மறு கட்டமைக்கும் பணிகள் விரைந்து நடைபெறுவதாகவும், எல்லாம் சரி செய்யக் குறைந்தது 6 மாதங்கள் ஆகும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிபா வைரஸால் சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டது. அதில் இருந்து மீண்டதும், தற்போது வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.