Published:Updated:

`சார், ரயிலை நிறுத்துங்க...அம்மா ஏறல...' - கார்டு பெட்டிக்குள் மாணவிக்கு பாலியல் தொல்லையா?

`சார், ரயிலை நிறுத்துங்க...அம்மா ஏறல...' - கார்டு பெட்டிக்குள் மாணவிக்கு பாலியல் தொல்லையா?
`சார், ரயிலை நிறுத்துங்க...அம்மா ஏறல...' - கார்டு பெட்டிக்குள் மாணவிக்கு பாலியல் தொல்லையா?

`சார், ரயிலை நிறுத்துங்க...அம்மா ஏறல...' - கார்டு பெட்டிக்குள் மாணவிக்கு பாலியல் தொல்லையா?

சென்னை எழும்பூரிலிருந்து காரைக்குடிக்குச் செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் கார்டு பெட்டிக்குள் ஏறிய மாணவி, தன்னிடம் ரயில்வே ஊழியர் தவறாக நடந்ததாக, எழும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். 

 சென்னை எழும்பூரிலிருந்து காரைக்குடிக்கு சிலம்பு எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணிக்க சென்னை ஆர்.ஏ. புரத்தைச் சேர்ந்த தாயும் மகளும் முன்பதிவுசெய்திருந்தனர். வழக்கம்போல சிலம்பு எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. ஆனால், தாயும் மகளும் ரயில் நிலையத்துக்குத் தாமதமாக வந்தனர். ரயில் புறப்பட்டதைப் பார்த்த அவர்கள், அவசர அவசரமாக ஏற முயன்றனர். அப்போது, மகள் மட்டும் ரயிலின் கார்டு பெட்டியில் ஏறிவிட்டார். அவரின் அம்மாவால் ஏற முடியவில்லை. இதனால், 'சார், ரயிலை நிறுத்துங்க அம்மா ஏறல' என்று அங்கிருந்த ரயில்வே ஊழியரிடம் அவர் கூறியுள்ளார். 

 இந்த நிலையில், பிளாட்பாரத்தில் மகள் மட்டும் இறக்கிவிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதனால், தாயும் மகளும் ரயிலைத் தவறவிட்டனர். தொடர்ந்து, நேற்றிரவு 8 மணியளவில் தாயும் மகளும் எழும்பூர் ரயில்வே போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள், ரயில்வே ஊழியர்மீது பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்தனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``எழும்பூரிலிருந்து காரைக்குடி செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்த தாயும், அவரின் மகளான ப்ளஸ் டூ மாணவியும் ரயிலைத் தவறவிட்டுள்ளனர். அப்போது, மாணவி மட்டும் ரயிலின் கடைசி பெட்டியான கார்டு பெட்டியில் ஓடிவந்து ஏறியுள்ளார்.  அதில் இருந்த கார்டுக்கும் மாணவிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இறுதியில், மாணவியை கார்டு இறக்கிவிட்டதாக எங்களிடம் புகார் கூறியுள்ளார். மேலும், கார்டு பெட்டிக்குள் தன்னிடம் ரயில்வே ஊழியர் தவறாக நடக்க முயன்றதாகக் குறிப்பிட்டுள்ளார். தற்போது கார்டு, சிலம்பு எக்ஸ்பிரஸில் காரைக்குடிக்குச் சென்றுவிட்டார். அவர், சென்னை திரும்பிய பிறகுதான் என்ன நடந்தது என்று தெரியவரும்" என்றனர். 

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ``மாணவி கொடுத்த புகாரின்பேரில் ரயில்வே ஊழியர்மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ரயில்வே ஊழியரிடம் விசாரித்தபிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியும்" என்றார். 

ரயில்வே ஊழியர்கள் கூறுகையில், ``கார்டு பெட்டிக்குள், ரயிலை நிறுத்துவதற்கான அபாயச் சங்கிலி இருக்காது. அதனால், அவரால் ரயிலை உடனே நிறுத்த முடியாது. வாக்கி டாக்கி மூலம்தான் பைலட்டுக்கு (ரயில் டிரைவர்)  தகவல் கொடுக்க முடியும். எழும்பூர் ரயில் நிலையத்தைக் கடப்பதற்குள் வாக்கி டாக்கியில் தகவல் கொடுத்து மாணவியை கார்டு இறக்கிவிட்டிருக்க வாய்ப்புள்ளது. அவர்மீது ஏன் பாலியல் தொல்லை தொடர்பான புகாரை மாணவி கொடுத்தார் என்று தெரியவில்லை. மேலும், ரயில்வே சட்டப்படி கார்டு பெட்டிக்குள் பயணிகள் ஏறுவது தவறு. அதன்படி புகார் கொடுத்த மாணவிமீது நடவடிக்கை எடுக்க முடியும்" என்றனர். 

 ரயில்வே ஊழியர்மீது மாணவி கொடுத்த பாலியல் புகார், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அடுத்த கட்டுரைக்கு