பருவம் எய்தும் வயது வரும்; திருமண வயது வரும்; தாய்மை அடையும் வயது வரும்; பேரன்/பேத்தி எடுக்கும் வயதும் வரும். ஆனால், தனித்துப் பயணம் செய்யும் வயது மட்டும் ஒரு பெண்ணுக்கு வரவே வராது. சூழல் இப்படி இருக்க, கோவையைச் சேர்ந்த சங்கீதா ஸ்ரீதருக்கு, அந்த வயது இப்போது வந்தேவிட்டது. இந்தியா முழுக்க மொத்தம் 165 நகரங்களுக்கு, ஆறு மாதங்களுக்கு என்று சங்கீதாவின் பயணம், ரொம்பப் பெருசு. அதுவும் தனி ஒருத்தியாய்! நீங்கள் நினைப்பதுபோல் இது ஜாலி டூர் அல்ல. இந்த நீண்ட நெடிய பயணத்துக்கு அர்த்தம் பொதிந்த ஒரு காரணம் உண்டு. சங்கீதா ஸ்ரீதரின் இந்தப் பயணத்துக்குப் பெயர் `க்ளீன் இந்தியா ட்ரையல்!’

அதாவது இந்தியா முழுக்க உள்ள பெண்களுக்குச் சுத்தமான கழிவறை வேண்டும்; நாப்கின் வசதி வேண்டும். தனியாகப் பயணம் செய்யும் பெண்களுக்குப் பாதுகாப்பு வேண்டும். இவையெல்லாம்தான் இந்தப் பயணத்தின் குறிக்கோள்கள்.

இந்த ஐடியாவைச் சொன்னதும், டாடா நிறுவனமே சங்கீதாவுக்கு ஒரு ஹெக்ஸா காரைக் கொடுத்து, `டா(ட்)டா பை பை!’ சொல்லி வழியனுப்பி வைத்திருக்கிறது. இதற்கு இந்திய டூரிசம் அமைச்சரவையும் ஒப்புதல் அளித்து, டூரிசம் அமைச்சரே பயணத்தைக் கொடியசைத்து தொடங்கி வைத்திருக்கிறார். ஆகஸ்ட் 12-ம் தேதி, மும்பையின் கேட்வே ஆஃப் இந்தியாவிலிருந்து தனது `க்ளீன் இந்தியா’ பயணத்தைத் தொடங்கிவிட்டார் சங்கீதா.

``புனேவில் வண்டி ஓட்டிக் கிட்டிருக்கேன்!’’

``ஹைதராபாத்தில் சபர்மதி ஆசிரமத்தில் தங்கியிருக்கேன்!’’

``ராஜஸ்தான்ல எருமைப்பால் குடிச்சிக் கிட்டிருக்கேன்!’’

``சொன்னா நம்ப மாட்டீங்க... பாகிஸ்தான் பார்டர்ல நின்னு செல்ஃபி எடுத்துக்கிட்டிருக்கேன்!’’

- சங்கீதாவுக்கு எப்போது போன் செய்தாலும் இப்படித்தான் பதில் வருகிறது. 51 வயதாகும் சங்கீதா, 15 வயசுப் பொண்ணு மாதிரி துறுதுறுவெனப் பேசுகிறார். ``நான் காந்தியோட தீவிர ரசிகை. கோவைப் பொண்ணுதான். ஆனா, துபாயில் செட்டிலாகிட்டேன். இந்தியாவுல இன்னும் பெண்களுக்கான பல விஷயங்கள்ல பின்னடைவு இருக்கு. முக்கியமா, கழிவறை வசதி, சானிடேஷன். இந்த விழிப்புஉணர்வை இந்தியாவோட ஒவ்வொரு கிராமத்துக்கும் எடுத்துட்டுப் போகணும்ங்கிறதுதான் இந்தப் பயணத்தோட திட்டம்!’’ என்றார் சங்கீதா.

ஹெக்ஸா டீசல் காரை, இந்தப் பயணத்துக்காக சங்கீதாவுக்குப் பரிசாகக் கொடுத்து உதவியிருக்கிறது டாடா நிறுவனம். சாதாரண எஸ்யூவி-யான ஹெக்ஸாவை, பெரிய கேரவன் மாதிரி சகல வசதிகளுடன் ரீமாடிஃபிகேஷனும் செய்து கொடுத்திருக்கிறது டாடா. படுக்கை வசதி, சமையலறை, குப்பைத்தொட்டி, சார்ஜிங் பாயின்ட்கள், சோலார் பேனல், கேட்ஜெட்ஸ், முக்கியமாக GPS என ஒரு நாட்டு அதிபரின் லிமோஸின் காரில் இருக்கும் அத்தனை வசதிகளும் இந்த ஹெக்ஸாவில் இருக்கின்றன.

``வரலாறு முக்கியம் சார்’’ என்று அடிக்கடி சொல்லும் சங்கீதா, ஆகஸ்ட் 12-ம் தேதி மதியம் 12 மணிக்கு, மும்பையின் கேட்வே ஆஃப் இந்தியாவில் இருந்து பயணத்தைத் தொடங்கியதற்கும் ஒரு காரணம் உண்டு. ``பிரிட்டிஷ்காரங்க நமக்குச் சுதந்திரம் அறிவிச்சுட்டு, இந்த வழியாத்தான் இந்தியாவை விட்டு கடைசியா போனாங்க!’’ என்று வரலாற்றை நினைவுகூர்கிறார் சங்கீதா.

``பயணம் கிளம்பி நாலு வாரம் ஆச்சு. 45 ஊர்களைத் தாண்டிட்டேன். ஒவ்வோரு ஊர்லேயும் அவ்வளவு கணிவா என்னைக் கவனிச்சுக்கிறாங்க! சில இடங்கள்ல மட்டும் `ஒரு பொம்பளை தனியா வந்திருக்கே’னு ஒரு மாதிரி பார்த்தாங்க. என் துணிச்சலைப் பார்த்துட்டு அப்புறமா அவங்களும் என்னை சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க!’’ என்று தன் பயணத்தின் ஒவ்வொரு நாளையும் அப்டேட் செய்து கொண்டே இருந்தார் சங்கீதா.

சாதாரணமாக சொந்த ஊருக்குப் பயணம் போனாலே மறக்க முடியாத அனுபவம் ஃபோன் மெமரியை நிரப்பும். இந்தியா முழுக்கச் சுற்றுவதென்றால்..? சங்கீதாவுக்கு அனுபவங்கள் மட்டுமல்ல, பெருமைகளும் கூடவே சேர்ந்திருக்கின்றன. ஆம்! ஹைதராபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் காந்தியடிகள் அறைக்குப் பக்கத்தில் காரை பார்க் செய்துவிட்டுத் தங்கியது; இந்தியாவின் மேற்கு கோடி `சிர்கிரில்’ கடல் தாண்டிய திட்டில் கடற்பாசிகள் சூழ்ந்த இடத்தில் ஹெக்ஸாவில் ஆஃப்ரோடு செய்தது; 1971-ம் ஆண்டில் பாகிஸ்தான் நம் மீது போர் தொடுத்த இடத்தில் கால் வைத்தது; பரோடா விஜயமால் அரண்மனைக்குச் சென்றது; கடலில் மூழ்கிய நகரங்களுக்கு விசிட் அடித்தது; 5,000 ஆண்டுகள் பழைமையான ஹராப்பா நாகரிகம் தோன்றிய இடத்துக்குச் சென்றது... இப்படி ஒவ்வோர் ஊரிலும் தங்கும்போது, மறுநாள் அந்தந்த ஊர் நாளிதழ்களிலோ, தொலைக்காட்சிகளிலோ தன்னைப் பற்றிய செய்தி வந்துகொண்டே இருப்பதைப் பெருமையாகச் சொன்னார் சங்கீதா.

`` `நீ மட்டும் தனியாவாமா வந்தே, எங்க ஊர் பாஷை எப்படித் தெரியும்?’னு போற எல்லா இடத்துலயும் அன்பைப் பொழியுறாங்க. பரோடா ராஜாவின் மகன் என் பயணத்தைப் பற்றிக் கேள்விப்பட்டுப் பாராட்டினார். `இன்னிக்கு என் அரண்மனையிலதான் தங்கணும்’னு பாசமா சொன்னார். `என் ஹெக்ஸாதான் என் பேலஸ். நான் அதுலேயே தங்குறதுதான் சார் முறை’னு சொல்லி அன்பா மறுத்துட்டேன். ஆமா, ஹெக்ஸா இல்லைன்னா, இந்தப் பயணம் சாத்தியமாகியிருக்காது. இன்னும் நாலு மாசத்துக்கு மேல பயணம் போகணும். வாட்ஸ்அப்ல ஆக்டிவா இருங்க. அப்பப்போ அப்டேட் பண்றேன்!’’ என்று வீடியோ காலைத் துண்டித்து விட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார் சங்கீதா.சங்கீதா சார்பில் ஒரு சாகசப் பயணத் தொகுப்புக்கு ரெடியாகுங்க!

தமிழ்