Published:Updated:

உலகமே உங்களைக் கொண்டாடும்! - கஸ்தூரி ராமநாதன்

உலகமே உங்களைக் கொண்டாடும்! - கஸ்தூரி ராமநாதன்
பிரீமியம் ஸ்டோரி
உலகமே உங்களைக் கொண்டாடும்! - கஸ்தூரி ராமநாதன்

தனியே... தன்னந்தனியே...

உலகமே உங்களைக் கொண்டாடும்! - கஸ்தூரி ராமநாதன்

தனியே... தன்னந்தனியே...

Published:Updated:
உலகமே உங்களைக் கொண்டாடும்! - கஸ்தூரி ராமநாதன்
பிரீமியம் ஸ்டோரி
உலகமே உங்களைக் கொண்டாடும்! - கஸ்தூரி ராமநாதன்

வேலையும் வாழ்க்கையும் கொடுக்கும் மன அழுத்தத்திலிருந்து மீள, பலருக்கும் பயணமே சிறந்த வழி. ஆனால், பயணமே ஒருவருக்கு வேலையும் வாழ்க்கையுமானால்?

`பிக் 4’ ஆடிட் நிறுவனத்தில் எக்ஸ்பீரியன்ஸ் கன்சல்டன்ட்டாக இருக்கும் கஸ்தூரி ராமநாதன், அப்படியோர் அதிர்ஷ்டசாலிதான். உலகம் சுற்றும் வாலிபி! இதுவரை 21 நாடுகளுக்குப் பயணித்திருக்கிறார். பயணத்தின் இடையேதான் நம்மிடமும் பேசினார். இந்த வருட இறுதியில் எண்ணிக்கை 25-ஐ எட்டுமாம்!

உலகமே உங்களைக் கொண்டாடும்! - கஸ்தூரி ராமநாதன்


``அக்டோபர் மாசம் ஆம்ஸ்டர்டாம்ல ஆடிட்டிங் இருக்கு. அங்கிருந்து ஜெர்மனி போயிட்டு, அப்புறம் இந்தியா வர்றேன். அடுத்த வருஷ ஆரம்பத்துல என் தங்கையோடு மியான்மர் போகத் திட்டமிட்டிருக்கேன். இத்தாலியும் வெயிட்டிங்’’ - ஷெட்யூல் சொல்கிறார் சோலோ ட்ரிப் பிரியை.

``ப்ளஸ் டூ படிச்சிட்டிருந்தபோது ஸ்கூல் சார்பா ஒரு கான்ஃப்ரென்ஸுக்காக நியூயார்க்கும் வாஷிங்டனும் போனதுதான் என் முதல் சோலோ ட்ரிப். ஏர்போர்ட்ல விடறதுக்கு அம்மா அப்பா வந்தாங்க. வாஷிங்டன்ல இறங்கினதும் என்னைக் கூட்டிட்டுப்போறதுக்கு உறவினர் வந்திருந்தாங்க. இதுக்கிடையில நான் ஃபிராங்க்ஃபர்ட்டுல ஃப்ளைட் மாறினது, யு.எஸ் வரையிலான டிராவல்னு எல்லாமே தனியாதான் பண்ணினேன். அந்த முதல் பயணம் நிஜமாகவே பயமாகவும் த்ரில்லிங்காகவும்தான் இருந்தது. ஆனா, அதுதான் இன்னிக்கு என் அடையாளத்துக்கான ஆரம்பப்புள்ளி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உலகமே உங்களைக் கொண்டாடும்! - கஸ்தூரி ராமநாதன்

சென்னையில பிறந்து வளர்ந்த நான், காலேஜுக்காக பெங்களூரு போனேன். மாசத்துக்கு ஒருமுறை வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவைப் பார்க்கிற அந்தப் பயண அனுபவமும் நிறைய கத்துக் கொடுத்தது. இன்னிக்கு உலகத்தின் எந்த மூலைக்கும் என்னால தனியா போயிட்டு வந்துட முடியும்’’ - தைரியலட்சுமியாகச் சொல்பவர், ரயில் பயணங்களின் காதலியாம்.

``தமிழ்நாட்டைத் தாண்டினாலே மொழி, உணவு, இயற்கைச்சூழல்னு எல்லாமே வேறுபடும். இந்த அனுபவத்தை ஃப்ளைட் டிராவல்ல அனுபவிக்க முடியாது. மூணு மணி நேரத்துல காஷ்மீர்ல போய் இறங்கியிருப்போம். மொத்தமா எல்லாமே வேற ஒண்ணா மாறியிருக்கும். அந்த மாற்றங்களை அணு அணுவா ரசிக்க ரயில் பயணத்தில்தான் வாய்ப்பு கிடைக்கும். `சின்னப்பொண்ணு, கல்யாணமாகலை... ரயிலில் தனியா பயணம் பண்றியே’னு நிறைய பேர் கேட்டிருக்காங்க. எந்தப்  பொண்ணுக்கும் தன்னைப் பாதுகாத்துக்கத் தெரியும். புதுசா ஒரு நபரைப் பார்த்தாலே அவங்ககிட்ட பேசலாமா, வேணாமானு கணிக்க முடியும். இதையெல்லாம் தாண்டி, ரயில் பயணங்களில் அருமையான மனிதர்களைச் சந்திக்கலாம்; அனுபவங் களைச் சம்பாதிக்கலாம்’’ - கஸ்தூரியின் `தொடரி' அனுபவங்கள் தொடர்கின்றன.

``வேலை, அதனிடையே எப்போதாவது டிராவல் என்றால் ஓகே. பயணமே வாழ்க்கை என்பது உங்களுக்கு அலுக்கவில்லையா?’’ என்றால், அதற்கோர் அழகான விளக்கம் கொடுத்தார்.

``வருஷத்துல எட்டு மாசங்கள் டிராவல் பண்றேன். மே மாசத்துலேருந்து நவம்பர் வரை டிராவல் பண்ணுவேன். புராஜெக்ட் தொடர்பான இவையெல்லாமே சோலோ ட்ரிப்ஸ்தான். வார நாள்ல போகிறதெல்லாம் பெரும்பாலும் வேலை தொடர்பான பயணங்கள் என்பதால், வார இறுதி நாள்ல எனக்கான பயணத்துக்கு ப்ளான் பண்ணிப்பேன்.

அப்படித்தான் நாலு வார ட்ரிப்பா கனடா போயிருந்தேன். ரெண்டு வாரம் வேலையிலேயே போச்சு. மூணாவது வாரம் உடம்பு சரியில்லை. அவ்வளவு தூரம் வந்துட்டு நயாகரா ஃபால்ஸ் பார்க்கலைன்னா எப்படினு, நான்காவது வாரம் நயாகரா பார்த்துட்டுதான் நாடு திரும்பினேன்.

ஒரு டிராவலை ப்ளான் பண்ணும்போதே சில விஷயங்களை முடிவுபண்ணுவேன். முதல் விஷயம், என்னுடைய டிராவல் ப்ளானை அம்மா அப்பாவுக்கு அப்பப்போ அப்டேட் பண்ணிட்டே இருப்பேன். நான் பாதுகாப்பா இருக்கேன்கிற நம்பிக்கை ரொம்ப முக்கியம்.

எந்த நாட்டுக்கு, எந்த ஊருக்குப் போனா லும் என் சாய்ஸ் பப்ளிக் டிரான்ஸ்போர்ட் தான். அப்பதான் அந்த இடத்தின் அழகை முழுமையா ரசிக்க முடியும். உதாரணமா... மொராக்கோவுல நம் ஊர் ஷேர் ஆட்டோ மாதிரியே வாகனம் இருக்கு. அதுலதான் ஊரைச் சுத்தினேன்.

உலகமே உங்களைக் கொண்டாடும்! - கஸ்தூரி ராமநாதன்

மேற்கத்திய நாடுகளில் பெண்கள் அதிகம் டிராவல் பண்றாங்க. இந்தியாவுல அப்படியில்லை. ஓர் ஆண் துணைக்கு வரணும்னு நினைப்பாங்க. எங்கே போறதுங்கிறதுல தொடங்கி, எங்கே தங்கணும், எவ்வளவு செலவு செய்யலாம்னு டிராவல் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங் களையும் முடிவுபண்றதும் ஆண்களாகத் தான் இருக்காங்க. இந்த நிலை மாறணும். 

இன்னும் நிறைய பெண்களுக்கு `சோலோ ட்ரிப்புல அப்படி என்ன என்ஜாய் பண்ணிட முடியும்’கிற நினைப்பு இருக்கு. அந்த டிராவலில் உங்களுக்கான எல்லா முடிவுகளையும் நீங்க மட்டுமே எடுக்க முடியும். ஃப்ரெண்ட்ஸ்கூட டிராவல் பண்ணும்போது அந்த நாலு பேருக் குள்ளேயேதான் நீங்க பேசிட்டிருப்பீங்க. அஞ்சாவதா ஒருத்தர்கிட்ட பேசினாதான் அந்த இடத்தின் கலாசாரம் உங்களுக்குத் தெரியும்.

உதாரணத்துக்கு, ஒரு சம்பவம் சொல்றேன். ட்ரம்ப் அமெரிக்கத் தேர்தலில் ஜெயிச்சபோது நான் சிகாகோவில் இருந்தேன். சிகாகோவில் பெரும்பான்மை மக்கள் ட்ரம்ப்புக்கு வாக்களிக்கலை. ட்ரம்ப் தேர்தலில் ஜெயிச்ச பிறகு மக்கள் தங்களுக்கு ஏன் அவரைப் பிடிக்கலைனு வெளிப்படையா பேசினதைப் பார்த்தேன். அப்படிப் பேசினவங்க அமெரிக்கன்ஸ். ஒருவேளை நான் இந்தியர்களோடு மட்டுமே பேசிட்டிருந்தா இந்த மாதிரியான உரையாடல்களைக் கேட்க வாய்ப்பு கிடைச்சிருக்காது.

ஒவ்வொரு முறை நான் தனியா டிராவல் பண்ணும்போதும் தியேட்டர் உள்பட எல்லா இடங்களுக்கும் தனியாதான் போகணும். ரெஸ்டாரன்ட்டுக்குப் போய் `டேபிள் ஃபார் ஒன்’னு சொல்றது ரொம்ப தர்மசங்கடமானது. ஆனா, நான் நினைக்கிறதுக்கு நேரெதிரான வரவேற்பும் உபசாரமும் அங்கே கிடைக்கும். தனியா வந்திருக்கிறது தெரிஞ்சு ஸ்பெஷலா கவனிப்பாங்க. ஆக, இந்த உலகமே சோலோ டிராவலர்ஸைக் கொண்டாடுது. அதை அனுபவிக்க நீங்கதான் முன்வரணும்.’’

என்ஜாய் யாத்ரீகா!

- ஆர்.வைதேகி

உலகமே உங்களைக் கொண்டாடும்! - கஸ்தூரி ராமநாதன்

வெந்நீரில் பிளெய்ன் நூடுல்ஸை வேகவைக்கும்போது, மூன்று முதல் ஐந்து நிமிடங்களுக்குள் அதைக் கிளறினால் நீராவி மேலே எழும்புவது தெரியும். உடனே நூடுல்ஸை வடிகட்டிக்கொள்ளவும். தோசைக்கல்லில் சிறிது எண்ணெய்விட்டு நூடுல்ஸைப் போட்டு ஒரு புரட்டு புரட்டவும். நூடுல்ஸ் குழையாமல் உதிரியாக, உலர்ந்து போகாமல் இருக்கும். அலுவலகம் செல்பவர்கள் இப்படிச் செய்து ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டால் மாலையில் வேகவைத்த காய்கறி சேர்த்தால் உடனே டின்னர் ரெடி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism