Published:Updated:

3 முதல் 20 லட்ச ரூபாய் பைக்ஸ்... ஒரே ஷோரூமில்!

3 முதல் 20 லட்ச ரூபாய் பைக்ஸ்... ஒரே ஷோரூமில்!
பிரீமியம் ஸ்டோரி
3 முதல் 20 லட்ச ரூபாய் பைக்ஸ்... ஒரே ஷோரூமில்!

பேட்டி - மோட்டோ ராயல்

3 முதல் 20 லட்ச ரூபாய் பைக்ஸ்... ஒரே ஷோரூமில்!

பேட்டி - மோட்டோ ராயல்

Published:Updated:
3 முதல் 20 லட்ச ரூபாய் பைக்ஸ்... ஒரே ஷோரூமில்!
பிரீமியம் ஸ்டோரி
3 முதல் 20 லட்ச ரூபாய் பைக்ஸ்... ஒரே ஷோரூமில்!

ந்திய ஆட்டோமொபைல் துறையில் புகழ்பெற்ற நிறுவனமான கைனட்டிக், மீண்டும் டூ-வீலர் சந்தையில் ‘மோட்டோ ராயல்’ என்ற பெயரில் களமிறங்கியுள்ளது. ‘இனி அதிரடி ஆரம்பம்’ என்பதுபோல ஒரே நாளில் தடாலடியாக 7 பைக்குகளை விற்பனைக்குக் கொண்டுவந்துவிட்டார்கள். மும்பையில் ஷோரூமைத் திறந்து வைத்த கையோடு சென்னைக்கு வந்த மோட்டோ ராயலின் இயக்குநர் அஜின்கியா ஃபிரோடியாவிடம் பேசினோம். 

3 முதல் 20 லட்ச ரூபாய் பைக்ஸ்... ஒரே ஷோரூமில்!

ஏன் ப்ரீமியம்/சூப்பர் பைக் விற்பனை?

லூனா மொபெட், கைனட்டிக் ஹோண்டா ஸ்கூட்டர் என நாங்கள் மக்களுக்கு நெருக்கமான நிறுவனமாக இருந்திருக்கிறோம். சூப்பர் பைக் விற்பனை வளர்ந்து வருவதும், அதற்குப் பெரிய மோகம் இருப்பதையும் உணர்ந்து இந்த பிசினஸுக்கு இப்போது வந்திருக்கிறோம். தனித்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், மல்ட்டி பிராண்டு சூப்பர் பைக்குகளை விற்பனை செய்யும் இந்த ஷோரூமைத் திறந்திருக்கிறோம்.

சூப்பர் பைக் வாங்குபவர்கள் இந்தியாவில் குறைவு. அப்படியிருக்க, இந்த பிசினஸ் மாடல் வெற்றியடையுமா?

 2 லட்சம் ரூபாய்க்கு பைக் வாங்கியவர்கள், அடுத்ததாக அதைவிடச் சிறப்பான பைக்கைத்தான் வாங்க நினைப்பார்கள். தற்போது மோட்டோ ராயலிடம் 3 லட்ச ரூபாயில் இருந்து 20 லட்சம் வரை பைக்குகள் உள்ளன.

இறக்குமதி மட்டும்தானா? இல்லை, இந்தியாவிலேயே தயாரிக்க விருப்பம் உண்டா?


நார்ட்டன் பைக்குகளை மட்டும் இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்துள்ளோம். ஆண்டுக்கு 8,000 பைக்குகள் CKD முறையில் அசெம்பிளி செய்யும் அளவுக்கு அஹமதுநகரில் பெரிய தொழிற்சாலை இருக்கிறது. இன்னொரு தொழிற் சாலையையும் கட்டமைக்க இருக்கிறோம்.

ப்ரீமியம் ஸ்கூட்டர்களைக் கொண்டுவரும் திட்டம் உள்ளதா?

‘கைனட்டிக் இட்டால் ஜெட்’ ஸ்கூட்டரை இன்னும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். ஆனால், இப்போதைக்கு ஸ்கூட்டர் பக்கம் திரும்பும் முடிவு எதுவும் இல்லை. ப்ரீமியம் பைக் செக்மென்ட்டில்தான் மொத்த கவனமும். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

3 முதல் 20 லட்ச ரூபாய் பைக்ஸ்... ஒரே ஷோரூமில்!

வெவ்வேறு அடையாளம் கொண்ட பைக்குகளை, ஒரே ஷோரூமில் விற்பனை செய்ய முடியுமா?

இந்த ஐடியாவே பலவிதமான பைக்குகளை எல்லா விலைகளிலும், எல்லா செக்மென்ட்டிலும் கொடுக்கவேண்டும் என்பதுதான். ‘SWM அட்வென்ச்சர்’ பைக்கிற்கு அதிக வரவேற்பு உள்ளது.ஹாய்சங் க்ரூஸர்கள், எம்.வி.அகுஸ்டாவின் பெர்ஃபாமென்ஸ் பைக்குகள், நார்ட்டனின் ரெட்ரோ ஸ்டைல், FB மோன்டியால் எனும் விலை குறைவான கஃபே ரேஸர் மற்றும் ஸ்க்ராம்பிளர் கலந்த ப்ரீமியம் ஸ்டைல் என ஒவ்வொரு பைக்கை விற்பனை செய்வதற்கும், தனித்தனி நபர்களுக்குப் பயிற்சி கொடுத்து வைத்திருக்கிறோம்.

ஹாய்சங் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஹாய்சங்குக்கு ஏற் கெனவே இந்தியாவில் 7000 வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். எங்களிடம் இருந்து DSK-க்குச் சென்று, இப்போது மீண்டும் எங்களிடமே இந்த பிராண்ட் வந்துள்ளது. ஹாய்சங் ‘சூப்பர் ஸ்போர்ட்’ மாடல்களைவிட ‘அக்கிலா’ மாடல்களை இந்தியாவில் பலரும் விரும்புவதாகத் தெரிகிறது. ஹாய்சங்கில் மட்டும் அடுத்த 4 ஆண்டுகளில் 4 புது பைக்குகளைக் கொண்டு வரப் போகிறோம்.

நார்ட்டன் 650 எப்போது வரும்?

நார்ட்டன் 650-யை கடந்த ஆண்டு EICMA-வில் காட்சிப்படுத்தியிருந்தோம். மோட்டோ ராயல் மற்றும் நார்ட்டன் இணைப்புக்குப் பிறகு வந்த முதல் பைக் இதுதான் என்பதால் , இன்னும் கூடுதல் கவனம் செலுத்துகிறோம். நார்ட்டனுக்கு உலகளவில் பெயரை வாங்கிக் கொடுக்கப் போகும் பைக் இது.

650சிசி இன்ஜினோடு, 3 விதமான மாடல்களில், வெவ்வேறு பவர்-டார்க் செட்-அப்போடு வரவுள்ளது. இந்த மூன்றில் ஒரு பைக்கில் டர்போ சார்ஜர் இருக்கலாம். விலையைப் பொறுத்தவரை நார்ட்டனின் ப்ரீமியம் தன்மை குறையாமல், அதே வேளையில் மற்ற பிராண்டுகளுக்கு நெருக்கடியைக் கொடுக்கும் அளவிலும் இருக்கும்.

ரஞ்சித் ரூஸோ 

விரைவில் நார்ட்டன் பைக்கில் டர்போ சார்ஜர் கொண்ட மாடல் வரும்! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism