Published:Updated:

வடவள்ளி to பரளிக்காடு - தட்புட் தட்புட் ஜாவா... பரளிக்காட்டுக்குள் ஜாலி ட்ரெக்கிங்!

வடவள்ளி to பரளிக்காடு - தட்புட் தட்புட் ஜாவா... பரளிக்காட்டுக்குள் ஜாலி ட்ரெக்கிங்!
பிரீமியம் ஸ்டோரி
வடவள்ளி to பரளிக்காடு - தட்புட் தட்புட் ஜாவா... பரளிக்காட்டுக்குள் ஜாலி ட்ரெக்கிங்!

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - ஜாவா - 1964

வடவள்ளி to பரளிக்காடு - தட்புட் தட்புட் ஜாவா... பரளிக்காட்டுக்குள் ஜாலி ட்ரெக்கிங்!

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - ஜாவா - 1964

Published:Updated:
வடவள்ளி to பரளிக்காடு - தட்புட் தட்புட் ஜாவா... பரளிக்காட்டுக்குள் ஜாலி ட்ரெக்கிங்!
பிரீமியம் ஸ்டோரி
வடவள்ளி to பரளிக்காடு - தட்புட் தட்புட் ஜாவா... பரளிக்காட்டுக்குள் ஜாலி ட்ரெக்கிங்!

* பெயர்: முரளி

* தொழில்: பைக் மெக்கானிக்

* வாகனம்: ஜாவா-1964

* ஊர்: வடவள்ளி, கோவை

* இடம்: பரளிக்காடு

* பயண தூரம்: சுமார் 200 கி.மீ

வடவள்ளி to பரளிக்காடு - தட்புட் தட்புட் ஜாவா... பரளிக்காட்டுக்குள் ஜாலி ட்ரெக்கிங்!

‘‘நாளைக்குப் புது ஜாவா பைக் ரிலீஸ். என்கிட்ட 1964 மாடல் ஜாவா பைக்ஸ் இருக்கு. ஜாவா ரிலீஸ் அன்னைக்கு நம்ம ஜாவா பைக்கில் ஒரு ஃபாரஸ்ட் ட்ரிப் அடிச்சா செமயா இருக்கும்ல?’’ என்றார் கோவையைச் சேர்ந்த யூஸ்டு கார் டீலர் கோபி. கடைசி நேரத்தில் ஒரு பெர்சனல் காரணத்தைச் சொல்லி, ‘‘கிரேட் எஸ்கேப்பில் கலந்து கொள்ள முடியாததற்கு வருந்துகிறேன். எனக்குப் பதில் என் நண்பர் கலந்துக்குவாரு!’’ என்று டிவி சீரியலில் வருவதுமாதிரி, ‘அவருக்குப் பதில் இவர்’, என்று ‘எண்டு கார்டு’ போட்டார் கோபி.  ‘‘இமயமலைக்கே போயிட்டு வந்துருக்கேன். பரளிக்காடுதானே... போயிடலாம்!’’ என ‘தட் புட்’ என்று ஆக்ஸிலரேட்டர் முறுக்கிக் காட்டினார் முரளி. ‘கஜா’ புயலுக்கு ‘ஜகா’ கொடுத்துவிட்டு, ஜாவா ரிலீஸ் ஆன அன்று நம் பழைய ஜாவாக்களைக் கிளப்பினால்... ‘சின்ன’ கஜா துரத்த ஆரம்பித்து விட்டது. அதாவது, லேசான காற்றுடன் கூடிய மழை. அதனால் ஒரே ஒரு ஜாவா, கேமரா-லக்கேஜ்க்காக ஒரு கார் சகிதம் பரளிக்காடு கிளம்பினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

* கோவையில் இருந்து பிலிச்சி, காரமடை, வெள்ளியங்காடு செக்போஸ்ட் வழியாகப் போவதுதான் எல்லோரும் தேர்ந்தெடுக்கும் பாதை. ‘‘நான் சொல்ற ரூட்ல வண்டியை விடுங்க... மறக்கவே மாட்டீங்க’’ என்றார் முரளி. மாங்கரை, ஆனைகட்டி, அட்டப்பாடி, முள்ளி செக்போஸ்ட் வழியாக ஜாவாவை விரட்டினோம்.

* கொஞ்ச நேரம்தான் டிராஃபிக். மாங்கரையில் இருந்தே நகரத்துக்கான எல்லா அடையாளமும் காணாமல் போனது. பச்சைப் பசேல் வயல்.. திடீரென்று துருத்திய மலை, லேசான சாரல் என்று பயணம் செம க்ளீஷேவாக இருந்தது.

வடவள்ளி to பரளிக்காடு - தட்புட் தட்புட் ஜாவா... பரளிக்காட்டுக்குள் ஜாலி ட்ரெக்கிங்!

* அட்டப்பாடியில் மதிய உணவு. கேரள குண்டுச்சோறும், மீன் வறுவலும் வயிற்றை நிரப்பியது. அட்டப்பாடியைத் தாண்டினால் எவ்வளவு காசு கொட்டினாலும் பசியை அடக்க முடியாது. ஆம்... அதற்கு மேல் கடை கண்ணிகளெல்லாம் கிடையாது. சாரலிலும் தூறலிலும் மலை ஜொலித்தது. நடுநடுவே ஹேர்பின் பெண்டுகள், அடர்ந்த காடு, திடும்மென உயரும் மேடு என்று பாதையே போதை ஏற்றியது.

* ஆடி, ஜாகுவாரில் போனால்கூட இத்தனை மரியாதை கிடைக்காதுபோல. கேரளா செக்போஸ்ட்டில் அதிகாரிகள்... ‘‘1960 மாடலோ...! நேத்து புது ஜாவா பிரகசனம் செய்யுட்டுன்னே... ஈ பைக்கில் கிக்கர்தான் கியரானு...’’ என்று சுற்றிச் சுற்றிப் பார்த்து வியந்தார்கள்.

* திரும்ப தமிழ்நாடு செக்போஸ்ட். ‘‘பரளிக்காடு டூரிஸம் சனி, ஞாயிறு மட்டும்தான். வெள்ளிக்கிழமை வந்துருக்கீங்களே’’ என்றார் அதிகாரி. வந்த விஷயத்தைச் சொன்னதும் கேட் திறந்து விட்டார்கள். அதாவது பரளிக்காட்டில் பூச்சமரத்தூர் எனும் இடத்தில் எக்கோடூரிஸம் ஆரம்பித்திருக்கிறார்கள். இங்குள்ள ரெஸார்ட்டில் தங்கலாம். ஒரு நபருக்கு 1,500 ரூபாய். முன் பதிவு முக்கியம். சனி, ஞாயிறு மட்டும்தான்.

* இங்கிருந்து இடதுபுறம் போனால் குந்தா, அவலாஞ்சி போகலாம். வலதுபுறம் திரும்பி அத்திக்கடவு வழியாகத்தான் நாம் போக வேண்டிய பாதை. அத்திக்கடவு பாலத்தில் நம் கைடு பிரகாஷ் காத்திருந்தார். இடதுபுறம் திரும்பினால், பூச்சமரத்தூர் கெஸ்ட்ஹவுஸ். பாலத்தில் இருந்தே பாதை டர் அடித்தது. ‘‘வழியில் யானைங்க நிக்குதுங்க... கவனமா போங்க!’’ என்று ஃபாரஸ்ட் கார்டு வேறு கிலி கிளப்பினார். ‘‘ஜாவா பைக்கோட பீட்டுக்கு அனிமல்ஸ் ஓடிரும்னு நினைக்கிறேன்’’ என்று முரளி சொன்னதுபோலவே நடந்தது.

* போகும் வழியெல்லாம் யானை கடந்ததற்கான அறிகுறிகளாக யானையின் சாணங்களைப் பார்க்க முடிந்தது. ‘‘யானை இந்தப் பக்கம் வந்து ஒரு நாள் ஆகியிருக்கலாம். இந்த இடத்தில் இப்போதான் க்ராஸ் ஆகியிருக்குனு நினைக்கிறேன்... இந்தப் பாதைதான் டேஞ்சர். யானைங்க வந்தா அப்படியே நின்னுட வேண்டியதுதான்!’’ என்று டிஸ்கவரி சேனல் ‘பியர் கிரில்ஸ்’ மாதிரி பயமுறுத்திக் கொண்டே வந்தார் பிரகாஷ்.

வடவள்ளி to பரளிக்காடு - தட்புட் தட்புட் ஜாவா... பரளிக்காட்டுக்குள் ஜாலி ட்ரெக்கிங்!

* எங்கள் கெட்ட நேரமோ, விலங்குகளின் நல்ல நேரமோ... ஆளே இல்லாத தன்னந்தனிக் காட்டில் எந்த யானையும் தரிசனம் தரவில்லை. ஆனால் ஏகப்பட்ட காட்டுக்கோழிகள், காட்டு அணில்கள், முயல்கள், மான் என்று செம அட்வென்ச்சர் ட்ரிப்பாக இருந்தது. ஸ்டீப்பாக ஏறிய பாதையிலும் ‘தட் புட்’ என ஏறி தாறுமாறு பண்ணியது ஜாவா.

* பில்லூர் அணைக்கு முன்பாக... காட்டுக்கு நடுவே ரெஸார்ட் இருந்தது. சுற்றிலும் மேற்குத் தொடர்ச்சி மலை படுத் திருக்க... கீழே ஏகப்பட்ட பரப்பளவில் அணை நீர்... லாங் ஷாட்டில் அத்தனை பெரிய மலையையும் மலைக்காமல் கடக்கும் பெயர் தெரியா பறவைகள்... நட்ட நடுக் காடு... அதில் மர வீடு என்று கெஸ்ட்ஹவுஸ் கெத்து காட்டியது.

* மறுநாள் அதிகாலை... காட்டுக்குள் ட்ரெக்கிங். யானைகளால் தொந்தரவு இருந்ததால்... இப்போது அங்கங்கே ட்ரென்ச் என்று சொல்லக்கூடிய குழி வெட்டி வைத்திருந்தார்கள். ‘‘முந்தியெல்லாம் கெஸ்ட் ஹவுஸ்க்குள்ளாறவே யானைங்க வந்துடும்ங்க... இப்போ இல்லை’’ என்றார் கெஸ்ட்ஹவுஸில் பணிபுரியும் பழங்குடி ஒருவர்.

* அடுத்து... அதிகாலை ட்ரெக்கிங்... மௌனமாகச் சத்தம் போட்டது காடு. யானைச் சாணமே மிரட்டியது. யானைகள் பார்க்கவில்லை; ஆனால், கீரிப்பிள்ளை ஒன்று ஏதோ ஒரு விலங்கை வேட்டையாடிக் கவ்விச் சென்றது த்ரில்லிங்காக இருந்தது.

* அடுத்து பரிசல் பயணம். பில்லூர் அணை பேக் வாட்டரில் அற்புதமான பரிசல் பயணம். பரிசல் பயணத்தில் எந்தப் பக்கத்தில் இருந்து செல்ஃபி எடுத்தாலும் அழகாக இருந்தது. பில்லூர் அணைக்கட்டு வேற லெவல். போட்டிங் போகும்போது, ‘‘எத்தனை அடிண்ணே’’ என்று விசாரித்தேன். ‘‘நிச்சயம் 60 அடி இருக்கும்’’ என்று அடித்துச் சொன்னார் பரிசலோட்டி.

* என்ட்ரன்ஸ் ஏரியாவில் நான்கைந்து டூரிஸ்ட் பஸ்களில் வந்து பரளிக்காட்டை அதகளம் பண்ணினர் டூரிஸ்ட்கள். மொத்தம் 20 பரிசல்கள். ஒரு பரிசலுக்கு நாலு பேர். இரண்டு ட்ரிப். ஒரு நாளைக்கு 140 பேர் வரைதான் அனுமதி. ரெஸார்ட்டில் தங்குபவர்களுக்குச் சிறப்புப் பரிசல் பயணம் உண்டு.

* போட்டிங்குக்கு உங்கள் டர்ன் வரும்வரை சும்மா காத்திருக்க வேண்டியதில்லை. சூடான சுக்குக் காப்பி தருகிறார்கள். காபி குடித்தபடியே மர ஊஞ்சலில் ஜாலியாக ஊஞ்சலாடலாம். போட்டிங் முடித்து வந்தவுடன் மதிய உணவு தருகிறார்கள். வெஜ் பிரியாணி, கேசரி, சப்பாத்தி குருமா, சிக்கன், கீரை, ராகி களி என்று நாக்கில் எச்சில் ஊறியபடி சாப்பிட்டு விட்டு, மறுபடியும் ட்ரெக்கிங். இவையெல்லாமே புக்கிங்குடன் இலவசம்.

* ட்ரெக்கிங்கில், ஏதோ ஒரு விலங்கின் கொம்போடு சேர்ந்த எலும்பு பார்த்தோம். டெரராக இருந்தது. யானை, புலிகளைவிட காட்டுக்குள் ஆபத்தான ஒரு மிருகம் உண்டு. அது செந்நாய். காரணமே இல்லாமல் வேட்டையாடுவதுதான் இதன் ஹாபியாம். திடீரென சாலையில் குறுக்கே நின்று வழிமறித்த நாட்டு நாய் ஒன்றை ‘காட்டு நாய்’ என நினைத்து ஏமாந்து, லாங் ஷாட்டில் போட்டோவெல்லாம் எடுத்து பல்பு வாங்கினார் புகைப்பட நிபுணர். 

* பரளிக்காடு வழியே 10 கி.மீ பயணித்து... மீண்டும் அத்திக்கடவு பாலம். சலசலத்து ஓடிக் கொண்டிருக்கும் நீர் வழியாகவே ட்ரெக்கிங் கூட்டிப் போனார்கள். இங்கு கைடுகள் உதவி இல்லாமல் வருவது பேராபத்து. அனகோண்டா, ஜங்கிள் புக் படங்களில் வருவதுபோல் ஒரு லொக்கேஷனைக் காண்பித்து விட்டு, ‘‘இங்கே குளிச்சுக்கோங்க... 5 மணி வரைக்கும்தான். அதுக்கப்புறம் விலங்குகள் வந்து தண்ணி குடிக்கும்’’ என்று எச்சரித்தார்கள். குளித்து முடித்து விழுந்தடித்துக் கிளம்பினோம்.

* மீண்டும் மலைப் பயணம்; பறவைச் சத்தம்; விலங்குகளின் ஒலி; காட்டின் மௌனம்... ‘தட் புட்’ என பரளிக்காட்டை அலறவிட்டு, வெள்ளியங்காடு செக்போஸ்ட் வழியே, மறுபடியும் கோவையில்தான் அடங்கியது ஜாவா. ஜாவாவின் இக்னிஷனை ஆஃப் செய்ததும் எங்கள் மனசில் தோன்றியது இதுதான்: ‘இன்னைக்கு மட்டும் Pause பட்டன் இருந்தா செமையா இருக்கும்ல!

தமிழ் - படங்கள்: கே.அருண்

வடவள்ளி to பரளிக்காடு - தட்புட் தட்புட் ஜாவா... பரளிக்காட்டுக்குள் ஜாலி ட்ரெக்கிங்!

பரளிக்காடு போக இது அவசியம்!

னி, ஞாயிறு மட்டும்தான் பரளிக்காட்டுக்கு டூர் அடிக்க முடியும். அதையும் http://coimbatorewilderness.com/ ஆன்லைனில் ஒரு வாரத்துக்கு முன்பே புக் செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு 140 பேருக்கு மட்டும்தான் அனுமதி. பெரியவர்களுக்கு 500 ரூபாய்; சிறியவர்களுக்கு 400 ரூபாய். இதில் பரிசல் பயணம், மதிய உணவு, வெல்கம் ட்ரிங்ஸ் எல்லாம் அடக்கம். கைடு உதவியுடன் ட்ரெக்கிங் உங்கள் வாகனத்திலேயே செய்யலாம். அத்திக்கடவு ஆற்றுக் குளியல் மறக்கவே முடியாத அனுபவமாக இருக்கும். 10 மணிக்குப் பரிசல் பயணம் ஆரம்பித்துவிடும். எனவே, கோவையில் இருந்து 7 மணிக்கெல்லாம் கிளம்புவதுதான் சரி. தாமதாமாகப் போனால், பரிசல் பயணத்தை மிஸ் பண்ண வாய்ப்புண்டு.

ரெஸார்ட்டில் தங்க நினைப்பவர்கள்... பூச்சமரத்தூர் போக வேண்டும். ஒரு நபருக்கு 1,500 ரூபாய் கட்டணம். ஒரு நாளைக்கு 24 பேர் மட்டும்தான். 98430 94900 எண்ணில் புக் செய்து கொள்ளலாம். கோவையில் இருந்து இரண்டு வழிகள் உண்டு. மேட்டுப்பாளையம், காரமடை, வெள்ளியங்காடு வழியாகப் போவது ஒரு வழி. ஆனைக்கட்டி, அட்டப்பாடி வழியாகப் போவது இன்னொரு வழி.

வடவள்ளி to பரளிக்காடு - தட்புட் தட்புட் ஜாவா... பரளிக்காட்டுக்குள் ஜாலி ட்ரெக்கிங்!

ஜாவா பைக் எப்படி?

நா
ம் போனது 1964 மாடல் ஜாவா. 2 ஸ்ட்ரோக் இன்ஜின் என்பதால், பெட்ரோல் பங்க்கில் ஆயில் ஊற்றியதையே எல்லோரும் வேடிக்கை பார்த்தார்கள். ஜாவாவின் பீட் சத்தத்தைக் கேட்டாலே மனசு துள்ளிக் குதிக்கும். அந்தக் காலத்திலேயே டெக்னாலஜியில் அசத்தியிருக்கிறது ஜாவா. இக்னீஷன் சாவியிலேயே இதன் தொழில்நுட்பம் புரியும். சாவியைச் சொருகினாலே போதும்; இக்னிஷன் ஆன் ஆகிவிடும். முதல் ஸ்டெப் திருகினால் - பார்க்கிங் லைட்; இரண்டாவது ஸ்டெப் திருகல் - ஹெட்லைட்ஸ்; கடைசித் திருகல் - எமர்ஜென்ஸி நேரத்துக்கானது. எந்தச் சூழலிலும் இந்த எமர்ஜென்ஸி சிஸ்டம் பைக்கை ஸ்டார்ட் ஆக்கிக் கொடுக்கும். மொத்தம் 4 கியர். 1 up - 3 Down. இதில் கிக்கரும் கியரும் ஒண்ணு. ஹை டார்க், 250 சிசி இன்ஜின், 2 ஸ்ட்ரோக் என்பதால்... சேறு சகதி மேடு பள்ளங்களைப் பற்றி ஜாவாவில் கவலையே இல்லை. மைலேஜ் 20 கொடுப்பதாகச் சொன்னார் முரளி.

வடவள்ளி to பரளிக்காடு - தட்புட் தட்புட் ஜாவா... பரளிக்காட்டுக்குள் ஜாலி ட்ரெக்கிங்!

என்னென்ன பார்க்கலாம் கோவையில் இருந்து..?

மலம்புழா டேம் (52 கி.மீ)

போட்டிங், மீன் பிடித்தல் என்று அசத்தலாம். பாம்புப் பண்ணை, சிறுவர் பூங்கா, அக்வாரியம் என்று ஒரு நாள் டூருக்கு அற்புதமான ஸ்பாட்.

சிறுவாணி அருவி (36 கி.மீ)


சிறுவாணி அணையில் இருந்து 4 கி.மீ ட்ரெக்கிங் போக வேண்டும். கோவையின் மொத்தக் குடிநீருக்கும் இந்த அருவிதான் ஆதாரம்.

பரம்பிக்குளம் (96 கி.மீ)

கேரளாவின் அருமையான வனவிலங்குச் சரணாலயம். பரம்பிக்குளத்தில் காட்டு விலங்குகள் பார்க்காமல் வர முடியாது. காட்டுக்கு நடுவே மரவீட்டில் தங்குவது அற்புதமான அனுபவம்.

டாப் ஸ்லிப் (80 கி.மீ)


புலிகள் சரணாலயமான இதில் யானைச் சவாரி பிரசித்தம். இதைத் தாண்டித்தான் பரம்பிக்குளம் போக முடியும்.

மீன்வல்லம் அருவி (77 கி.மீ)

பாலக்காட்டில் இருக்கும் இந்த அருவிக்கு, துப்பநாடு ஆறு வழியாக 2 கி.மீ ட்ரெக்கிங் போய் குளிக்க வேண்டும். பாலக்காட்டில் இருந்து வாடகை வாகனங்களும் உண்டு.

சைலன்ட் வேலி (62.5 கி.மீ)


அட்வென்ச்சர் விரும்பிகளுக்கு அட்டகாசமான ஸ்பாட். விலங்குகளைப் பார்க்க ஜீப்பில் காட்டுக்குள் போவது செம த்ரில்லிங்.

திருமூர்த்தி அருவி (86 கி.மீ)

ஆனைமலை புலிகள் சரணாலயத்தில் இருக்கும் இதுவும் குளித்து மகிழ ஓர் அற்புதமான அருவி. போட்டிங் வசதியும் உண்டு.

வடவள்ளி to பரளிக்காடு - தட்புட் தட்புட் ஜாவா... பரளிக்காட்டுக்குள் ஜாலி ட்ரெக்கிங்!

வாசகர்களே! நீங்களும் மோ.வி. டீமுடன் பயணிக்க விருப்பமா? உங்கள் பெயர், ஊர், கார் பற்றி 044-66802926 தொலைபேசி எண்ணில் உங்கள்  குரலில் பதிவு செய்யுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism