Published:Updated:

வெற்றிகரமாக நடைபெற்ற அதிநவீன தேஜஸ் ரயிலின் சோதனை ஓட்டம்... மதுரை மக்கள் மகிழ்ச்சி!

வெற்றிகரமாக நடைபெற்ற அதிநவீன தேஜஸ் ரயிலின் சோதனை ஓட்டம்... மதுரை மக்கள் மகிழ்ச்சி!
வெற்றிகரமாக நடைபெற்ற அதிநவீன தேஜஸ் ரயிலின் சோதனை ஓட்டம்... மதுரை மக்கள் மகிழ்ச்சி!

சென்னை- மதுரை இடையே இயக்கப்பட உள்ள அதிவேக தேஜஸ் ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்துள்ளதால், மதுரை மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

வெற்றிகரமாக நடைபெற்ற அதிநவீன தேஜஸ் ரயிலின் சோதனை ஓட்டம்... மதுரை மக்கள் மகிழ்ச்சி!

 வரும் 27-ம் தேதி மதுரை வரும் பிரதமர் மோடி, தேஜஸ் ரயில் சேவையைத் தொடங்கிவைக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில், சோதனை ஓட்டம் வெற்றி அடைந்திருப்பதன்மூலம் அது உறுதியாகியுள்ளது.

சென்னை - மதுரை இடையே, பகல் நேர விரைவு ரயிலாக வைகை எக்ஸ்பிரஸ் மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கிறது. இதைவிட அதிவேக ரயில் தேவை என்று மதுரை மக்கள்  நீண்ட நாள்களாக எதிர்பார்த்து வந்த நிலையில், அதிநவீன தேஜஸ் ரயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக  அறிவிக்கப்பட்டது. மும்பை,  டெல்லிக்கு அடுத்தபடியாக தேஜஸ்  அதிவிரைவு ரயில் சென்னை- மதுரை இடையே இயக்கப்பட உள்ளது. 

குளிரூட்டப்பட்ட 18  பெட்டிகளில், ஒவ்வொன்றிலும்  78 பேர் பயணிக்கலாம்.  ஒவ்வொரு இருக்கை முன்பும் டிவி பொறுத்தப்பட்டுள்ளது. வைஃபை மற்றும் ஜிபிஎஸ் வசதி, சிசிடிவி உட்பட அனைத்து நவீன வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட 27-ம் தேதி மதுரை வரும் பிரதமர் மோடி, இந்த ரயில் சேவையைத் தொடங்கிவைக்கும் வகையில், ரயிலின் சோதனை ஓட்டம் சென்னை- விழுப்புரத்துக்கு இடையே 110 கி.மீ வேகத்தில் வெற்றிகரமாக நடந்துள்ளதால், மதுரை மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.