நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

வெற்றிகரமாக முடிந்த ஸ்டார்ட்அப் உலா!

வெற்றிகரமாக முடிந்த ஸ்டார்ட்அப் உலா!
பிரீமியம் ஸ்டோரி
News
வெற்றிகரமாக முடிந்த ஸ்டார்ட்அப் உலா!

வெற்றிகரமாக முடிந்த ஸ்டார்ட்அப் உலா!

தொழில்முனைவதற்கான சூழலை மேம்படுத்த ஒவ்வொரு அமைப்பும் தங்களால் முடிந்த பணியைச் செய்து வருகின்றன. இதில் தமிழக அரசும் இணைந்திருப்பது பாராட்டத்தக்கது. தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (Entrepreneurship Development And Innovation Institute) என்னும் தமிழக அரசு நிறுவனம் `ஸ்டார்ட்அப் உலா’ என்னும் நிகழ்வை அண்மையில் நடத்தியது.  

வெற்றிகரமாக முடிந்த ஸ்டார்ட்அப் உலா!

சிறு நகரங்களில் இருக்கும் தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதற்காக இந்த `உலா’ நடத்தப்பட்டது. திருநெல்வேலி மற்றும் கோவை ஆகிய நகரங்களிலிருந்து இந்த உலா தொடங்கியது. இந்த இரு நகரங் களைச் சுற்றி இருக்கும் புதிய தொழில் முனைவோர்கள் மற்றும் தொழில்முனைவு ஆர்வம் இருப்பவர்கள், தமிழகம் முழுவதும் உள்ள தொழில்முனைவது குறித்த சூழலை அறிந்துகொள்வதற்காக ஏற்பாடு செய்யப் பட்டது.

ஒவ்வொரு நகரத்திலும் உள்ள முக்கியமான தொழிலதிபர்களுடன் உரையாடும் வாய்ப்பு இவர்களுக்கு ஏற்படுத்தித் தரப்பட்டது. தவிர, தொழில் அமைப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன, நிறுவனங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை நேரடியாகக் கற்றுக்கொள்வதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

திருநெல்வேலியிலிருந்து தொடங்கிய உலா மதுரை, திருச்சி வழியாக சென்னையை அடைந்தது. அதேபோல, கோவையிலிருந்து தொடங்கிய உலா, ஈரோடு, சேலம் வழியாக சென்னையை அடைந்தது. இந்த இரு நிகழ்ச்சி களும் தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் தந்த நிதி உதவியுடன் நடத்தப்பட்டது. திருநெல்வேலி உலாவை வழிநடத்தும் பொறுப்பு ‘நேட்டிவ் லீட்’ (Native Lead) அறக்கட்டளையும், கோவை உலாவை நடத்தும் பொறுப்பு ‘ஃபவுண்டர் பாஷன்’ (Founder Passion) அறக்கட்டளையும் ஏற்றுக்கொண்டன.

அடுத்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் 5,000 புதிய நிறுவனங்களை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த உலா நடத்தப்பட்டதாக நேட்டிவ் லீட் அறக்கட்டளையைச் சேர்ந்த சிவராஜா கூறினார். தமிழகத்தின் பட்டி தொட்டிகளிலெல்லாம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பல்கிப் பெருகட்டும்.

- வாசு கார்த்தி