Published:Updated:

`வந்தே பாரத்' அதிவேக ரயிலுக்கு வந்த சோதனை! - நடுவழியில் நின்ற முதல் பயணம்

`வந்தே பாரத்' அதிவேக ரயிலுக்கு வந்த சோதனை! - நடுவழியில் நின்ற முதல் பயணம்
`வந்தே பாரத்' அதிவேக ரயிலுக்கு வந்த சோதனை! - நடுவழியில் நின்ற முதல் பயணம்

தனது முதல் பயணத்திலேயே, இந்தியாவின் அதிவேக ரயிலான `வந்தே பாரத்' பழுதாகி நின்றுள்ளது.

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட, இன்ஜின் இல்லாத முதல் ரயில் ‘வந்தே பாரத்' எக்ஸ்பிரஸை பிரதமர் மோடி நேற்று தொடங்கிவைத்தார். மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய இந்த ரயில்தான், இந்தியாவின் அதிவேக விரைவு ரயில் ஆகும்.  இந்த ரயில், சென்னை பெரம்பூரில் தயாரிக்கப்பட்டது. டெல்லியில் நேற்று நடந்த விழாவில், `வந்தே பாரத்' ரயில் தன்னுடைய முதல் பயணமாக டெல்லியிலிருந்து வாரணாசி வரை சென்றது. முதல் பயணத்தில்,130 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் இயக்கப்பட்டது. நேற்று 11.19 மணிக்குத் தனது பயணத்தைத் தொடங்கிய `வந்தே பாரத்', மாலையில் வாரணாசி சென்றடைந்தது.

 வாரணாசியிலிருந்து டெல்லி திரும்பிக்கொண்டிருந்தபோது, டெல்லிக்கு 150 கிலோ மீட்டர் தூரத்தில் வரும்போது, திடீரென  இயந்திரக் கோளாறு  ஏற்பட்டதன் காரணமாகப் பாதியில் நின்றுள்ளது. இதில் பயணித்த பத்திரிகையாளர்கள் மற்றும் பிற பயணிகள், வேறு ரயில்களில் அனுப்பிவைக்கப்பட்டனர். 'ரயிலில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறை தற்போதைக்கு சரிசெய்ய முடியாது' என ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். தனது வர்த்தக ரீதியிலான பயணத்தை `வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் நாளை தொடங்குவதாக இருந்தது. அதற்குள், பழுது காரணமாக நின்றுள்ளதால் நாளை பயணம் இருக்குமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.