Published:Updated:

குடும்பத்துடன் ஷாப்பிங் செய்ய பாங்காக் போகலாம்!

குடும்பத்துடன் ஷாப்பிங் செய்ய பாங்காக் போகலாம்!
குடும்பத்துடன் ஷாப்பிங் செய்ய பாங்காக் போகலாம்!

குடும்பத்துடன் ஜாலியாக என்ஜாய் செய்ய பல ஊர்கள் நம்மைச் சுற்றி இருக்கின்றன. ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு ஸ்பெஷாலிட்டி இருக்கும். ஆனால், ஒரே ஊரில் பலவிதமான ஸ்பெஷாலிட்டிகளைக் கொண்ட சுற்றுலாத் தலமாக இருப்பதுதான் பாங்காக்! என்னது பாங்காக்கா?... அது பேச்சுலர்ஸுக்கான இடம். அவர்கள் உல்லாசமாக இருக்க தேர்ந்தெடுக்கும் ஊர். ஏன் தளபதி விஜயே பாங்காக்கிற்கு மசாஜ் செய்யப் போறேன் என கத்திச் சொன்னவராச்சே... எனப் பல பேச்சுகள். ஆனால், அதெல்லாம் தாண்டி பாங்காக் முழுக்க முழுக்க ஃபேமிலியும் என்ஜாய் செய்யக்கூடிய ஒரு அற்புதமான டூரிஸ்ட் ஸ்பாட் என்பதே உண்மை. தாய்லாந்தின் தலைநகரமான பாங்காக், பாரம்பர்யம் மற்றும் நவீனத்தின் கலவை ஆகும். இதனால் ஒரு குடும்பமாக நாம் எதிர்பார்க்கும் அனைத்து இடங்களும் பாங்காக்கைச் சுற்றி நமக்காக காத்திருக்கின்றன.

குடும்பத்துடன் ஷாப்பிங் செய்ய பாங்காக் போகலாம்!

பாங்காக்கில் கோயில் முதல் பீச் வரை பல இடங்கள் சுற்றிப்பார்க்க இருந்தாலும், அங்கு மிகவும் பிரபலமாக இருக்கும் ஒருசில இடங்களை இங்கு பார்ப்போம்...

சட்டுச்சாக் மார்க்கெட் (Chatuchak Market):

பாங்காக்கில் அமைந்துள்ள சட்டுச்சாக் மார்க்கெட், தாய்லாந்திலேயே மிகப்பெரியது. சுமார் 15,000 அங்காடிகளைக் கொண்ட சட்டுச்சாக் மார்க்கெட்டுக்கு மக்கள் கூட்டம் அலைமோதும். பழம்பெரும் பொருட்கள், செடிகள், அழகுசாதனப் பொருள்கள், செல்லப் பிராணிகள், நாவூறும் உணவுகள், வீட்டுக்குத் தேவையானவை, உடைகள், புத்தகங்கள், மது என மார்க்கெட்டே களைகட்டும். பாங்காக்கிற்கு சென்றால் சட்டுச்சாக் மார்க்கெட்டிற்கு செல்லாமல் ஷாப்பிங் திருப்திகரமாக நிறைவடையாது.

இன்ட்ரா ஸ்கொயர் (Intra Square):

பாங்காக்கின் மிகப்பெரிய ஷாப்பிங் மால் இன்ட்ரா ஸ்கொயர். இங்கு இல்லாத பொருட்களே இல்லை. வெளியில் கிடைக்காத தனித்துவமான பொருட்கள் எதுவாக இருப்பினும், இந்த இடத்தில் நிச்சயமாக நம்மால் பார்க்க முடியும். புதுமைகள் நிறைந்த இடமான இன்ட்ரா ஸ்கொயர், பாங்காக் சுற்றுலா பயணிகளின் நினைவுகளில் முக்கிய இடம் வகிக்கும். தவிர, தரம், விலை என இரண்டும் தகுதியுடையதாக இருக்கும். 

குடும்பத்துடன் ஷாப்பிங் செய்ய பாங்காக் போகலாம்!

ஃப்ளோட்டிங் மார்க்கெட் (Floating Market):

பாங்காக்கிற்கு செல்லும் எந்தவொரு சுற்றுலாப் பயணியும் மிதக்கும் அங்காடிக்கு போகாமல் நாடு திரும்பியதாக சரித்திரமே இல்லை. இரவு நேரங்களில் அழகு கொஞ்சும் அந்த மிதக்கும் அங்காடிகளை பார்த்து ரசித்த பிறகுதான் நிம்மதியான தூக்கமே வரும். டம்னோன் சடக் (Damnoen Saduak), அம்ஃபவா (Amphawa), தலின் சான் (Talin Chan), க்ஹலோங் லாத் மாயோம் (Khlong Lat Mayom) மற்றும் பங் நாம் ப்ஹுயெங் (Bang Nam Pheung) என பாங்காக்கைச் சுற்றி மொத்தம் ஐந்து மிதக்கும் அங்காடிகள் உள்ளன. பழங்கள், பலகாரங்கள் என படகுகள் நிறைந்திருக்கும். நதியின் நடுநடுவே உள்ள மரத்தினாலான வீடுகளும் கண்கவரும். அம்ஃபவா மிதக்கும் அங்காடிக்கு பயணிக்கும் போது, அங்கிருக்கும் சிறிய கோயிலை குடை போல் காக்கும் பெரிய மரத்தை ரசிக்கத் தவறாதீர்கள்!

இதுபோன்று குடும்பத்துடன் சுற்றிப் பார்க்க பல இடங்கள் பாங்காக்கில் அமைந்துள்ளன. மேலும், பள்ளித் தேர்வுகள் முடிந்து குழந்தைகளின் விடுமுறை நாட்களின்போது நிம்மதியாக நேரத்தைக் கழிக்கவும் பாங்காக் ஒரு சிறந்த இடம். 

எப்படிச் செல்லலாம்?

பாங்காக்கிற்கு உங்கள் பட்ஜெட்டில் பயணம் செய்ய 'ஏர் ஏசியா' (Air Asia) நிறுவனத்தின் விமான சேவைதான் சரியான முடிவாக இருக்கும். மற்ற விமான சேவைகளை ஒப்பிடுகையில், ஏர் ஏசியா நிறுவனத்தின் டிக்கெட் கட்டணம் மிகவும் குறைவு. wwww.airasia.com அல்லது AirAsia மொபைல் ஆப் மூலம் டிக்கெட் புக் செய்வதன்மூலம் மிகக்குறைவான கட்டணத்தைப் பெறலாம். இந்தியாவிலிருந்து பாங்காக்கு  தினசரி விமான சேவையை வழங்கிவருகிறது ஏர் ஏசியா, இதனால் நாம் பயணப்பட நினைக்கும் காலத்தில் சுலபமாக டிக்கெட் பெறமுடிகிறது. பாங்காக் தவிர, பிற வெளிநாடுகளுக்கும் சிறப்பான விமான சேவையை வழங்குகிறது ஏர் ஏசியா நிறுவனம். தாய்லாந்து நாட்டில், இந்தியர்களுக்கு 'இலவச விசா ஆன் அரைவல்' வசதியை ஏப்ரல் 30, 2019 வரை வழங்குகிறது அந்நாட்டு அரசு, எனவே விரைந்து பறந்து தாய்லாந்தை இரசிக்கலாமே!