பெங்களூரில் வசிக்கும் தமிழ்ப் பெண் சித்ரா, சாஃப்ட்வேர் இன்ஜினீயர் பணியிலிருந்து விலகி டிராவல் பிளாகராகப் பரிணாம வளர்ச்சி பெற்றவர். masalabox.co.in என்கிற வலைதளத்தில் தன் பயண அனுபவங்களைப் பதிவிடுகிறார். அவரிடம், `உங்களை மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய பயணம் எது?' என்று கேட்டோம். `மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரிலுள்ள கால பைரவர் கோயில்தான்' என்று சற்றும் தாமதிக்காமல் விடையளித்தவர், அந்தக் கோயிலுக்குச் சென்றிருந்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை விளக்குகிறார்.

‘`பயணங்கள், திட்டமிடாத இடங்களுக்குக்கூட நம்மை அழைத்துச் செல்லும். அப்படிப்பட்ட பயணங்களில் நாம் சற்றும் எதிர்பார்க்காத விஷயங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஒருமுறை உஜ்ஜைன் நகருக்குச் சென்றேன். அங்குள்ள ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான ஸ்ரீமஹா காலேஸ்வரரை தரிசிப்பதுதான் என் நோக்கம்.

உஜ்ஜைன் நகரம் முழுவதும் எங்கு திரும்பினாலும் கோயில் களே தென்படுகின்றன. அங்கு இல்லாத தெய்வங்களே இல்லை என்றே சொல்லலாம். மிகப்பெரிய ஸ்ரீவிநாயகர் கோயில் ஒருபுறம், மறுபுறம் ஸ்ரீசெவ்வாய் பகவான் கோயில். இன்னொருபுறம் காற்றுகூடப் புகமுடியாத ஒரு சிறு குகைக்குள் துறவி ஒருவர் கடும்தவம் செய்து கொண்டு இருந்தார். அவர் யார் என்று தெரியவில்லை. என்னால் அந்தக் குகைக்குள் ஐந்து நிமிடங்கள்கூட நிற்க முடியவில்லை. மூச்சுத் திணறல் ஏற்பட்டு வியர்வை வழிந்தோடியதால், அவசரகதியில் வெளியில் ஓடிவந்தேன். பக்கத்திலிருந்த கோயிலில் எத்தனையோ நூற்றாண்டுகளாக அணையா விளக்கு எரிந்துகொண்டு இருக்கிறது. எந்தப் பக்கம் திரும்பினாலும் ஏதாவது ஓர் அதிசயம், ஓர் அற்புதம் அல்லது விசித்திரமான கதை நம்மை வியக்கவைக்கிறது.

ஜோதிர்லிங்கமான ஸ்ரீமஹா காலேஸ்வரரை தரிசனம் செய்தபின், ஸ்ரீகால பைரவரைக் கண்டிப்பாக வழிபட வேண்டும் என்ற மரபு பல நூற்றாண்டுகளாக கடைப்பிடிக்கப்படுவதாகப் பலரும் சொன்னார்கள். நானும் அந்தக் கோயிலுக்குச் சென்றேன்.

ஆட்டோவைவிட்டு இறங்கிய உடனே, பூஜை சாமான்களை விற்பவர்கள் என்னைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டார்கள். நான் கேட்பதற்கு முன்பே ஒரு பூஜைத் தட்டை வலுக்கட்டாயமாக என் கையில் திணித்து விட்டார் ஒருவர். அந்தப் பூஜைத் தட்டில் பூ, பழம், சந்தனம். குங்குமம் ஆகியவற்றுடன் மதுபான பாட்டில் ஒன்றும் இருந்தது. பக்கத்தில் நின்றிருந்த எல்லோருடைய பூஜைத் தட்டிலும் மதுபான பாட்டில் இருந்ததைப் பார்த்து எனக்கு ஆச்சர்யம் ஏற்பட்டது.

ஆச்சர்யம் சற்றும் விலகாமல், அருகிலிருந்த வர்களை விசாரித்தேன். ‘இந்தக் கோயிலில் அருள்புரியும் ஸ்ரீகால பைரவருக்கு மிகவும் பிடித்த படையல் மதுபானம்’ என்று ஒருமித்த குரலில் கூறினார்கள்.

பூஜைத் தட்டுக்கான பணத்தைக் கொடுத்துவிட்டு, நம்பமுடியாமல் கோயிலை நோக்கி நகர்ந்தேன். கோயிலுக்குச் செல்லும் வழியெல்லாம் மதுபானக் கடைகள்தாம் கண்ணில்பட்டன. நாட்டுச் சாராயம் முதல் ரம், ஒயின், வோட்கா மற்றும் விலையுயர்ந்த ஸ்காட்ச் வரை அத்தனை வகை மதுக்களும் சர்வசாதாரணமாக டாஸ்மாக் பார்களில் விற்பதைப்போலவே படுபிஸியாக விற்பனையாகிக்கொண்டிருந்தன. பக்தர்கள் தங்கள் வசதிக்கேற்ப மது வகையை வாங்கிச் செல்கின்றனர்’’ என்கிறவர், தொடர்ந்து கோயிலில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் வியப்பு மேலிடப் பகிர்ந்துகொண்டார்.

‘`ஸ்ரீகால பைரவர் கோயில் நுழைவாயில் பிரமாண்டமாக இருக்கிறது. மராட்டிய கட்டடக் கலை வடிவத்தின் சான்றாக தீப ஸ்தம்பத்தைக் காண முடிந்தது. கோயிலுக்குள் புகைப்படம் எடுக்க அனுமதியில்லை. எனவே, கையில் மது பாட்டிலுடன் பக்தர்கள் பரவசத்தில் திளைத்துக்கொண்டிருந்ததை கேமராவில் பதிவுசெய்ய முடியவில்லை.

கருவறையில் ஸ்ரீகால பைரவர் ஆரஞ்சு நிற குங்கும அலங்காரத்தில் அருள் பாலித்துக்கொண்டிருந்தார். அடர்த்தியான புருவம், தலையில் கிரீடம்... அவருடைய தோற்றத்தை மேம்படுத்தின. கனன்று ஒளிரும் கண்கள், செக்கச் சிவந்த உதடுகள் என்று சற்றே திகிலூட்டும் அலங்காரம்.

சந்நிதானம் முழுக்க திருவிழாக் கூட்டம் போல மக்கள் வெள்ளம். பெரிய வரிசையில் நின்று நகர்ந்து, என் முறை வந்தபோது, பூஜைத் தட்டை பூசாரியிடம் கொடுத்தேன். பூசாரி மது பாட்டிலைத் திறந்து கிட்டத்தட்ட கால்பங்கு மதுவை ஒரு தட்டில் ஊற்றி, அதை ஸ்ரீகால பைரவரின் உதட்டருகே கொண்டுசென்றார். கண் இமைக்கும் நேரத்தில் தட்டிலிருந்த மது காணாமல் போனது. என்னால் நம்பவே முடியவில்லை. பூசாரி தட்டை சரிக்கவும் இல்லை. ஒரு சிறு துளி மதுகூட கீழே சிந்தவும் இல்லை. மது எப்படி மாயமானது எனப் புரியாமல் குழம்பினேன். எனக்குப் பின்னால் நின்ற பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து நகர்ந்து வந்து, பூசாரியிடம் மது பாட்டிலைக் கொடுக்க, பூசாரியும் மதுவைத் தட்டில் ஊற்றி ஸ்ரீகால பைரவரின் உதட்டருகே கொண்டுசெல்கிறார். அவ்வளவுதான்... கிராபிக்ஸ் காட்சியைப்போல இமைப்பொழுதில் மது மயமாகிவிடுகிறது.

`அத்தனை மதுவும் எங்கேதான் போகிறது? உதட்டருகே கண்ணுக்குத் தெரியாமல் ஓட்டை ஏதாவது இருக்குமோ? கீழே எங்காவது பாதாளக் கிணறு இருக்கிறதோ? அப்படியே இருந்தாலும் நாட்டுச் சாராயத்திலிருந்து விலையுயர்ந்த ஸ்காட்ச் வரை எல்லாம் கலந்த காக்டெய்ல் திரவத்தை என்ன செய்ய முடியும்?' ஆயிரம் கேள்விகள் என் மனதில். விடை கிடைக்கவில்லை. தட்டில் ஊற்றி ஸ்ரீகால பைரவருக்குப் படைத்தது போக பாட்டிலில் மீதியிருக்கும் மதுவை, பக்தர்களுக்கு பிரசாதமாகத் திருப்பித் தருகிறார் பூசாரி. கடவுளின் சந்நிதானத்திலேயே அந்த மதுவை ஆளுக்குக் கொஞ்சமாக கால பைரவரின் பிரசாதமாக அருந்துகிறார்கள். நான் அதிர்ச்சியில் உறைந்தே போனேன்.

கோயிலைவிட்டு வெளியில்வந்ததும், இதற்கு ஏதாவது அறிவியல் ரீதியான காரணம் இருக்கலாமோ என்ற எண்ணத்தில் கூகுள் செய்து விவரங்களைத் தேடினேன். ஆனால், சமாதானமான பதில் கிடைக்கவில்லை. ஸ்ரீகால பைரவரின் சிலை வடிக்கப்பட்ட கல்லுக்கு மதுவை உறிஞ்சும் திறன் இருக்கும் என்றுதான் கூகுள் விடையளித்தது. என்னால் இதை ஒப்புக்கொள்ள முடியவில்லை. தினமும் பல்லாயிரக்கணக்கான லிட்டர் மது ஊற்றப்படுகிறது. அதுவும் எத்தனையோ நூற்றாண்டுகளாக இது தொடர்கிறது. மது ஆவியாகும் தன்மை கொண்டதுதான். அதற்குச் சில நிமிடங்களாவது தேவை. ஆனால், அங்கு உதட்டருகே கொண்டுசென்ற அந்த நொடியே மாயமாக மறைந்துவிடுகிறது மது.

கூகுள் உதவியுடன் பலரும் ஸ்ரீகால பைரவர் சிலைக்கு அருகில் ஆய்வு நடத்தினோம். சந்தேகப்படும் வகையில் துளைகளோ, வித்தியாசமான பொருள்களோ இல்லை. ஸ்ரீகால பைரவர் நிஜமாகவே மது அருந்துகிறார் என கமென்ட் செய்திருந்தனர். இது ஏதோ கட்டுக்கதை இல்லை. தினமும் லட்சக்கணக்கான பக்தர்களின் கண்ணெதிரே காலங்காலமாக நடக்கும் அதிசயம் இது. உஜ்ஜைன் நகருக்குச் சென்றால் மறக்காமல் ஸ்ரீகால பைரவரை தரிசியுங்கள்’’ என விழிகளில் வியப்பு மேலிட முடித்தார் சித்ரா!

- அகத்திய ஸ்ரீதர்