Published:Updated:

கோடை சீசனுக்குத் தயாராகும் ஊட்டி மலை ரயில் நிலையம்!

ரா.சதீஸ்குமார்
கோடை சீசனுக்குத் தயாராகும் ஊட்டி மலை ரயில் நிலையம்!
கோடை சீசனுக்குத் தயாராகும் ஊட்டி மலை ரயில் நிலையம்!

நீலகிரி மாவட்டத்தில் மே மாதம் தொடங்க உள்ள கோடை சீசனுக்கு, சுற்றுலாத் தளங்களைத் தயார்செய்யும் பணி முழு வீச்சில் நடைபெற்றுவருகிறது. ஊட்டி வரும் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும், மலை ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், இந்த ஆண்டு காேடை சீசனுக்கான டிக்கெட்டுகள் முன்பதிவாகிவிட்டன. நீராவி மற்றும் பர்னஸ் ஆயில் மூலம் இயக்கப்படும் ஊட்டி மலை ரயில் இன்ஜின்கள், இழுவைத்திறன் குறைபாடு, பல் சக்கர தண்டவாளங்களில் ஏற்படும் சேதம் உள்ளிட்ட காரணங்களால் நடுக்காட்டில் நின்றுவிடுவது வழக்கமாக உள்ளது. இதனால், ஊட்டி மலை ரயிலில் ஆவலுடன் பயணிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பவேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதுபாேன்ற குறைகளை நிவர்த்திசெய்யவும், பாரம்பர்யம் மிக்க மலை ரயிலை, பழுதில்லாமல் தாெடர்ந்து இயக்கவும், ரயில்வே நிர்வாகம் முனைப்புக்காட்டிவருகிறது. இந்நிலையில், வரவிருக்கும் இரண்டு மாத காேடை சீசனுக்கு சுற்றுலாப் பயணிகளின் வரவு அதிகரிக்கலாம் என்ற எதிர்ப்பார்ப்பில், மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரையுள்ள மலை ரயில் நிலையங்களான லவ் டேல், கேத்தி, வெலிங்டன், குன்னுார், ரண்ணிமேடு உள்ளிட்ட ரயில் நிலையங்களைப் பொலிவுபடுத்தும் பணிகள் மேற்காெள்ளப்பட்டு வருகிறது. ஆசியாவிலேயே பல்சக்கர முறையில் இயக்கப்படும், நுாற்றாண்டுகளைக் கடந்த ஊட்டி மலை ரயில் இன்ஜின்கள் மற்றும் தண்டவாளங்களைக் கவனத்துடன் பழமை மாறாது சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.