Published:Updated:

பவளப் பாறைகளுக்குப் பாதிப்பின்றி புதிய பாம்பன் பாலம்! - ரயில்வே துறை உறுதி

`சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பாம்பன் கடல்மீது புதிய ரயில் பாலம் கட்டப்படும்' எனத் தென்னக ரயில்வே கூடுதல் மேலாளர் ராகுல் ஜெயின் தெரிவித்தார்.

பவளப் பாறைகளுக்குப் பாதிப்பின்றி புதிய பாம்பன் பாலம்! - ரயில்வே துறை உறுதி

ரயில்வே பணிகள்குறித்து ஆய்வு செய்வதற்காக, தென்னக ரயில்வே கூடுதல் பொது மேலாளர் ராகுல் ஜெயின், சென்னையிலிருந்து ரயில் மூலம் ராமேஸ்வரம் வந்தார். ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ஆய்வுசெய்த பின்னர், மண்டபம் கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான ரோந்துக் கப்பலில் பாம்பன் ரயில் பாலம், தனுஷ்கோடி கடற்கரைப் பகுதிகளில் கட்டப்பட இருக்கும் புதிய பாலம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர், ட்ராலி மூலம் பாம்பன் தூக்குப் பாலத்திற்குச் சென்று, பாலத்தின் உறுதித் தன்மைகுறித்து ஆய்வு மேற்கொண்டார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தென்னக ரயில்வே கூடுதல் பொது மேலாளர் ராகுல் ஜெயின், ``இன்று காலை முதல் ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் பாலத்தில் ஆய்வு மேற்கொண்டேன். ஆய்வின்போது, பாம்பன் ரயில் பாலம் மிகவும் உறுதியுடன் இருப்பது தெரியவந்துள்ளது. புதிய பாம்பன் ரயில் பாலம் கட்டும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், கடலுக்கு நடுவே கட்டப்படும் புதிய பாலத்தால், பவளப்பாறைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமலும் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையிலும் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து தனுஷ்கோடி வரையிலான ரயில்வே போக்குவரத்து விரிவாக்கம் செய்வதற்கான முதல்கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில், விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்.

ராமேஸ்வரம் ரயில் நிலையம் மற்றும் பாம்பன் ரயில் பாலத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிப்புப் பணி நடைபெற்றுவருகின்றன. ஆனாலும், தொடர் வெடிகுண்டு மிரட்டல் மற்றும் இலங்கை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தையடுத்து கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்திற்கு ரயிலில் வரும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களை இணைக்கக்கூடிய ரயில் சேவைகள், தேவைக்கேற்ப புதிதாக மேற்கொள்ளப்படும்'' என்றார். கூடுதல் மேலாளருடன் மதுரை கோட்ட மேலாளர் லெனின் மற்றும் ரயில்வே துறை அலுவலர்கள், பொறியாளர்கள் உடனிருந்தனர். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism