Published:Updated:

`அம்பத்தூரில் சிக்னல் கோளாறு; ரயில் சேவை கடும் பாதிப்பு!'- சென்ட்ரலில் தவிக்கும் பயணிகள்

சகாயராஜ் மு
`அம்பத்தூரில் சிக்னல் கோளாறு; ரயில் சேவை கடும் பாதிப்பு!'- சென்ட்ரலில் தவிக்கும் பயணிகள்
`அம்பத்தூரில் சிக்னல் கோளாறு; ரயில் சேவை கடும் பாதிப்பு!'- சென்ட்ரலில் தவிக்கும் பயணிகள்

அம்பத்தூரில் ஏற்பட்ட சிக்னல் கோளாறால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில்கள் தாமதாகப் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடும் கூட்ட நெரிசல் நிலவுகிறது. 

`அம்பத்தூரில் சிக்னல் கோளாறு; ரயில் சேவை கடும் பாதிப்பு!'- சென்ட்ரலில் தவிக்கும் பயணிகள்

திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தினசரி சென்னைக்கு பணி நிமித்தம் வந்து செல்வதற்காக ரயில் போக்குவரத்தையே பெரிதும் நம்பியிருக்கின்றனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருவள்ளூர், அரக்கோணம் மற்றும் திருத்தணிக்கு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

`அம்பத்தூரில் சிக்னல் கோளாறு; ரயில் சேவை கடும் பாதிப்பு!'- சென்ட்ரலில் தவிக்கும் பயணிகள்

அதேபோல், திருப்பதி மார்க்கமாகவும் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினசரி இந்த சேவையை ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 

`அம்பத்தூரில் சிக்னல் கோளாறு; ரயில் சேவை கடும் பாதிப்பு!'- சென்ட்ரலில் தவிக்கும் பயணிகள்

இந்த நிலையில், சென்னை அம்பத்தூரில் இன்று திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால், மாலை 5 மணிக்கு மேல் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் பெரும்பாலான ரயில்கள் புறப்படவில்லை. அம்பத்தூரில் சிக்னல் கோளாறு ஏற்பட்டதால், 30 முதல் 35 நிமிடங்கள் வரை ரயில்கள் தாமதமாகப் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது அலுவலக நேரம் முடிந்து பெரும்பாலான மக்கள் ஊர்களுக்குத் திரும்பச் செல்லும் நேரம் என்பதால், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமானது. வேலை முடிந்து ஊர்களுக்குத் திரும்பும் பயணிகள் குறித்த நேரத்தில் திரும்ப இயலாமல் தவித்தனர். மாலை 5.45 மணிக்குப் புறப்பட வேண்டிய திருவள்ளூர் பயணிகள் விரைவு ரயில் 6.45 வரையும் புறப்படவில்லை என்று பயணிகள் தெரிவித்தனர். ஆயிரக்கணக்கான பயணிகள் குவிந்திருப்பதால், அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. 

Vikatan