Published:Updated:

எட்டு மாதங்களில் 74 சஸ்பெண்டு; போதையில் பைலட்டுகள்! - அதிரடி காட்டும் டி.ஜி.சி.ஏ

கடந்த எட்டு மாதங்களில், சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ) 74 விமானிகளை சஸ்பெண்டு செய்துள்ளது.

flight
flight

பேருந்துகளில் பயணம் செய்யும்போது, டிரைவர்கள் சிலர் `குடி' போதையில் இருந்திருப்பதைப் பார்த்திருக்கலாம் அல்லது அதுதொடர்பான சில செய்திகளைப் படித்திருப்போம். ஆனால், இப்போது வெளியாகியுள்ள செய்தி, சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஆம், விமானத்தை இயக்கும் பைலட்டுகளே `குடி' போதையில் இருந்ததற்காக சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக, தி பிரின்ட் இதழ் வெளியிட்டுள்ள செய்தியில், ``கடந்த எட்டு மாதங்களில், சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ) 74 விமானிகளை சஸ்பெண்டு செய்துள்ளது.

flight
flight

அவர்களில் 41 பேர் அல்லது 55 சதவிகிதம் பேர் விமானம் மற்றும் விமானத்தில் உள்ள பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில், விமான போக்குவரத்து தொடர்பான விபத்துகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டனர். அவர்களின் குற்றம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். மீதம் இருக்கும் 33 பேர் ப்ரீதலைசர் சோதனையில் தோல்வி அடைந்ததால் சஸ்பெண்டுக்கு ஆளாகியுள்ளனர். ப்ரீதலைசர் சோதனை என்பது `மது போதை'-க்கு நடத்தப்படும் சோதனையாகும்.

அன்று ஹீரோ... இன்று வில்லன்... `குடி'யால் ஒரே நாளில் சரிந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி!

அதன்படி பார்த்தால், இந்த 33 பைலட்டுகளுமே டூயூட்டியின்போது மது அருந்தியிருந்தது உறுதியாகியுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை மட்டுமே இத்தனைபேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 2017 முதல் கடந்த ஆகஸ்ட் வரை மொத்தம் 262 பேர் பல்வேறு காரணங்களுக்காக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 2017-ல் 98 விமானிகளும் 2018-ல் 90 விமானிகளும், தற்போது 74 விமானிகளும் இடைநீக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

Directorate General of Civil Aviation
Directorate General of Civil Aviation

``இவர்களில் பெரும்பாலும், விபத்து ஏற்படுத்தியதன் காரணமாகவே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வழக்கத்தை விட, இந்த ஆண்டுதான் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பாதுகாப்பு விஷயங்களில் அதிக அக்கறை எடுத்துவருகிறது டி.ஜி.சி.ஏ. அதனால்தான் கடுமையான தவறுகளுக்கு உடனடி தண்டனை கொடுத்துவருகிறோம்" என்று பேசியுள்ளார், சிவில் ஏவியேஷன் இயக்குநரக அதிகாரி ஒருவர்.

ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு, சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் இந்தப் பதிலைக் கொடுத்திருந்தாலும் சம்பந்தப்பட்ட விமானிகளின் விவரங்களை வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

news credit : theprint

Vikatan