Published:Updated:

கும்பக்கரை அருவிக்குப் படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!

கும்பக்கரை அருவிக்குப் படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!
கும்பக்கரை அருவிக்குப் படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!

சில நாள்களாகப் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக பெரியகுளம் அருகில் இருக்கும் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர் விடுமுறையின் காரணமாக அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகள் சிலரிடம் பேசியபோது, “ஆண்கள் பெண்கள் இருவரும் தனித்தனியாகக் குளிக்க இங்கே இட வசதி செய்துகொடுக்கலாம். தற்போது அனைவரும் இணைந்துதான் குளிக்கும் நிலை உள்ளது. மேலும், ஷாம்பு, சோப்பு பயன்படுத்துகிறார்கள். அதைக் கட்டுப்படுத்தலாம்.

காலையிலேயே மக்கள் அதிகமாக இங்கே வந்திருக்கிறார்கள். இன்று விடுமுறை என்பதால் நேரம் ஆக ஆக மக்கள் அதிகமாக வரலாம். குறிப்பாகப் பெண்கள், குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. எனவே, பாதுகாப்புக்காக ஒரு காவலர் இருந்தால் நன்றாக இருக்கும். கிளைமேட் அருமையாக இருப்பதாலும், அருவியில் தண்ணீர் அதிகமாக வருவதாலும் குடும்பத்துடன் இங்கே வந்துவிட்டோம். இனி மாலைதான் வீட்டிற்கு திரும்புவோம்” என்றனர். வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கும்பக்கரை அருவிக்கு ஒரு காவலர் தேவை என்ற மக்களின் கோரிக்கையை வனத்துறையின் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.