Published:Updated:

`பனிப்பிளவுகளுக்கு நடுவே நீச்சல்!'- லூயிஸ் பக்கின் உறையவைக்கும் 10 நிமிடங்கள்

பனிப்பிளவுகளுக்கு நடுவே லூயிஸ் பக்
பனிப்பிளவுகளுக்கு நடுவே லூயிஸ் பக்

உறைந்த பனிக்கட்டிகளுக்கு இடையே ஓடும் குளிர்ந்த நீரில் ஒருவர் நீந்தி சாகசம் செய்கிறார் என்றால்... சற்றே யோசித்துப் பாருங்கள்! மிரட்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறதல்லவா?!

இங்கிலாந்து நாட்டிலுள்ள பிளைமவுத் நகரைச் சேர்ந்த லூயிஸ் பக் என்கிற மனிதர் சமீபத்தில் அன்டார்டிகாவிலுள்ள ஒரு பனிக்கட்டிகளுக்கு அடியில், பனி உருகி ஓடும் நதியில் நீந்தி உலகத்தின் கண்களைத் தன் பக்கம் திருப்பியிருக்கிறார். இந்தச் சாகசத்தின் வாயிலாக, பனிக்கட்டியில் 10 நிமிடம் 17 விநாடிகள் நீந்திய முதல் மனிதர் என்கிற பெருமையை இவர் அடைந்திருக்கிறார்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அவர் நீச்சல் உடை அணியாமல், ஒரே ஒரு டிரங்க், கண்ணாடி மற்றும் ஒரு தொப்பியை மட்டுமே அணிந்து இந்தச் சாதனையைப் படைத்திருக்கிறார்.
லூயிஸ் பக்
லூயிஸ் பக்

இவர் ஒரு நீச்சல் வீரர் என்பதாலும், 33 வருட நீச்சல் அனுபவம் இருப்பதாலும் இந்தச் செயல் செய்வதற்கான துணிச்சல் இவருக்கு வந்திருப்பதாக இவரின் நண்பர்கள் தெரிவித்திருக்கிறார்கள். காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, தான் நீந்தியதாகவும், கிரகத்தைப் பாதுகாக்க அனைத்து நாடுகளிடமிருந்தும் உடனடி நடவடிக்கைகள் தேவை" என்றும் லூயிஸ் பக் தெரிவித்திருக்கிறார்.

மேலும் அவர், ``கிழக்கு அண்டார்டிகா மிகவும் குளிராகவும், அங்குள்ள பனி ஆறுகளில் ஓடும் நீரின் தன்மை ஜீரோ டிகிரி செல்ஸியஸுக்கு சற்றே அதிகமாகவும் இருந்ததால் நீந்துவதற்கு ஏதுவாக இருந்தது. ஆனாலும் மிகவும் பயமாக இருந்தது. பல இடங்களில் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. இந்தப் பனிப் பிளவானது இந்தக் கிரகத்தின் தொலைதூர இடங்களின் ஒன்றாகும்.

இது மிகவும் பெரியது. ஆழமானது மற்றும் அழகானது. எங்கு பார்த்தாலும் இங்கே உருகி ஓடும் நீரைப் பார்க்கலாம். இங்கே பல நீல நிறக் கலவைகளை, கண்ணாரக் கண்டு ரசிக்க முடியும். நான் நீந்தும்போது ராயல் நீலம், பின்னர் இண்டிகோ, சைகடெலிக் நீலம் மற்றும் இறுதியாக வயலெட் என வண்ணங்களின் கலவை மாறிக்கொண்டே இருந்தது. ரசித்துக்கொண்டே நீந்தினேன்" என்று இந்த நீச்சல் பயணத்தின் அனுபவத்தை அவர் அழகாக விவரிக்கிறார்.

Antarctic ice
Antarctic ice

கடந்த 2007-ம் ஆண்டில் உலகின் வட துருவத்தின் குறுக்கே நீண்ட தூரம் நீச்சல் செய்து சாதனை படைத்திருக்கிறார். உலகின் ஒவ்வொரு கடலிலும் நீண்ட தூர நீச்சலை முடித்த முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின் செல்ல