Published:Updated:

நீலகிரி: நிரம்பித் தளும்பும் பைக்காரா; படகுச் சவாரிக்குப் படையெடுக்கும் பயணிகள்!

பைக்காரா படகுச் சவாரி

தற்போது ஊட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தாலும் பைக்காரா பகுதியில் மழை குறைந்திருக்கிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் பைக்காராவிற்குப் படையெடுத்து வருகின்றனர்.

நீலகிரி: நிரம்பித் தளும்பும் பைக்காரா; படகுச் சவாரிக்குப் படையெடுக்கும் பயணிகள்!

தற்போது ஊட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தாலும் பைக்காரா பகுதியில் மழை குறைந்திருக்கிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் பைக்காராவிற்குப் படையெடுத்து வருகின்றனர்.

Published:Updated:
பைக்காரா படகுச் சவாரி

நீலகிரியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை பெரும்பாலான அணைகள் வறண்டு கிடந்தன. தீவிரமடைந்த தென்மேற்குப் பருவமழையின் தாக்கத்தில் கடந்த ஒரே வாரத்தில் அனைத்து அணைகளின் நீர்மட்டமும் அசுர வேகத்தில் உயர்ந்திருக்கிறது. குடிநீர் மற்றும் நீர் மின் உற்பத்திக்கான நீரும் தாராளமாக இருப்பதாக அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

பைக்காரா படகுச் சவாரி
பைக்காரா படகுச் சவாரி

இந்நிலையில், மழையின் தீவிரம் சற்று குறைந்திருப்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் மெல்ல அதிகரித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு நாள்களாக பைக்காரா பகுதிகளில் இதமான காலநிலை நிலவி வருகிறது. நிரம்பித் தளும்பி ரம்மியமாகக் காட்சியளிக்கும் பைக்காரா அணையில் படகுச் சவாரி செய்ய சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சுற்றுலாத்துறை அதிகாரிகள் நம்மிடம் பேசுகையில், "கடந்த மாத இறுதி வரை பைக்காரா அணையின் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டது. அதனால் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை குறைந்தது.

பைக்காரா படகுச் சவாரி
பைக்காரா படகுச் சவாரி

தற்போது ஊட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தாலும், பைக்காரா பகுதியில் மழை குறைந்திருக்கிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் பைக்காராவிற்குப் படையெடுத்து வருகின்றனர். ரம்மியமான இந்தக் காலநிலையில் கடல்போல் காட்சியளிக்கும் அணையில் சவாரி செய்து மகிழ்கின்றனர்" என்றனர்.