Published:Updated:

குழந்தைகளுக்கான படுக்கை வசதி; ரயில்வே அறிமுகப்படுத்தி யிருக்கும் பேபி பெர்த் எப்படி இருக்கிறது?

Baby Berth

அம்மாக்கள் தங்கள் குழந்தையுடன் ரயிலில் பயணிக்கும்போது, பயணம் அசௌகர்யமாக இருக்கக்கூடாது என்பதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட சில ரயில்களில், மடித்து வைக்கும் வசதியிடன் கூடிய `குழந்தைகளுக்கான படுக்கை' (baby berth) வசதியை இந்திய ரயில்வே அறிமுகப் படுத்தியுள்ளது.

குழந்தைகளுக்கான படுக்கை வசதி; ரயில்வே அறிமுகப்படுத்தி யிருக்கும் பேபி பெர்த் எப்படி இருக்கிறது?

அம்மாக்கள் தங்கள் குழந்தையுடன் ரயிலில் பயணிக்கும்போது, பயணம் அசௌகர்யமாக இருக்கக்கூடாது என்பதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட சில ரயில்களில், மடித்து வைக்கும் வசதியிடன் கூடிய `குழந்தைகளுக்கான படுக்கை' (baby berth) வசதியை இந்திய ரயில்வே அறிமுகப் படுத்தியுள்ளது.

Published:Updated:
Baby Berth

அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுடன் ரயிலில் பயணிக்கும்போது அவர்களுக்கு அசௌகர்யமாக இருக்கக் கூடாது என்பதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட சில ரயில்களில், மடித்து வைக்கும் வசதியிடன்கூடிய 'குழந்தைகளுக்கான படுக்கை' (baby berth) வசதியை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

Train Journey
Train Journey

வடக்கு ரயில்வேயின் லக்னோ மற்றும் டெல்லி பிரிவுகள் ஒன்றிணைந்து, அன்னையர் தினத்தில், லக்னோ - டெல்லி இடையே செல்லும் லக்னோ மெயில் மூன்றாம் வகுப்பு ஏ.சி பெட்டியில் 12 மற்றும் 60-ம் இருக்கையில் `பேபி பெர்த்'களை அறிமுகப்படுத்தியுள்ளன. ரயில் பயணத்தில் அம்மாக்களுடன் குழந்தை வசதியாகத் தூங்கும் வகையில் இந்தப் படுக்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வடக்கு ரயில்வே தனது அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில், ரயில்களில் குழந்தைகளுக்கான படுக்கை வசதி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளது. மேலும், குழந்தைகளின் இருக்கை மடிக்கக்கூடியதாகவும், ஸ்டாப்பருடன் (Stopper) பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Child (Representational Image)
Child (Representational Image)
pixabay

குழந்தை உறங்கிக்கொண்டிருக்கும்போது தவறுதலாகக் கீழே விழுந்துவிடாமல் இருப்பதற்காகக் கீழ்ப்படுக்கையில் (Lower Berth) மட்டும் குழந்தைகளுக்கான படுக்கை இணைக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் பாதுகாப்புக்காக அந்தப் படுக்கையில் பட்டைகள் பொருத்தப்பட்டுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குழந்தை படுக்கை பயன்பாட்டில் இல்லாதபோது, படுக்கையின் அடியில் இருக்கும் ஸ்டாப்பரில் பொருத்தி லாக் செய்துவிடலாம். ஸ்டாப்பரிலிருந்து அன்லாக் செய்து மீண்டும் அதே நிலைக்கு படுக்கைகையைக் கொண்டு வந்துவிடலாம்.

குழந்தைகளுக்கான படுக்கை வசதிகொண்ட படுக்கைக்கு முன்பதிவு செய்வதற்கு எந்த வழியும் இல்லை.

ரயில்
ரயில்

ஒரு பயணி, குழந்தை படுக்கை இணைக்கப்பட்டுள்ள இருக்கையைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பினால் டிக்கெட் பரிசோதகரை அணுகி, அதை மாற்றிக்கொள்ளலாம். இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றால், அனைத்து ரயில்களிலும் இதுபோன்ற குழந்தைகளுக்கான படுக்கைகளை ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism