Published:Updated:

குறைந்த செலவில் `டெஸ்டினேஷன் வெட்டிங்'... ஒடிசா சுற்றுலாத்துறையின் ஸ்பெஷல் திட்டம்!

டெஸ்டினேஷன் வெட்டிங்
டெஸ்டினேஷன் வெட்டிங்

'டெஸ்டினேஷன் வெட்டிங்' செய்துகொள்ள இரண்டு நாள்களுக்கு அனைத்து செலவுகளும் சேர்த்து, 2.17 லட்சம் ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

'திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது' என்று சொன்னாலும், இன்றைய இளைய தலைமுறையினர், தங்களின் திருமணம் நடக்கும் இடமே சொர்க்கம் போல் இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அதற்காக, 'Destination wedding' கான்செப்ட்டுகளை தேடிப்பிடித்து திருமணம் செய்துகொள்ள நினைக்கிறார்கள்.

இவர்களைக் கவரும் வகையில், ஒடிசா சுற்றுலாத் துறை ரம்பா, கோபால்பூர், சாந்திபூர், பூரி, கோனார்க் மற்றும் பார்குல் ஆகிய 6 வெட்டிங் டெஸ்டினேஷன்களைப் புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கிறது.

Vikatan
பாந்த நிவாஸ்
பாந்த நிவாஸ்

இங்கு, திருமணம் செய்துகொள்ள இரண்டு நாள்களுக்கு அனைத்து செலவுகளும் சேர்த்து 2.17 லட்சம் ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 25 தங்கும் அறைகள், திருமணத்திற்கு வரும் 50 பேருக்கு மூன்று வேளை உணவு, தின்பண்டங்கள், குளிர்பானங்கள், மேளங்கள் என அனைத்தும் இந்தச் செலவில் அடங்கும். இதைத் தவிர, வேறு வசதிகளை சேர்க்க விரும்பினால், அதற்குத் தனியாக பணம் செலவழிக்க வேண்டியதாக இருக்கும்.

`திருவிழாக் கொண்டாட்டம்; திடீரென மாயமான சிறுமி!' - ஒடிசா கிராமத்தை அதிரவைத்த கொலை

இங்கு திருமணம் நடத்த வேண்டுமென்று புக் செய்துவிட்டால் போதும், மெஹந்தி, வீடியோ, நடனம், விருந்தினர்களுக்கு ஊர்சுற்றிக் காட்டும் ஏற்பாடு வரை அனைத்தும் அந்தக் குழுவே பார்த்துக்கொள்ளும். இதைத் தவிர, இந்தத் திட்டத்தின் கீழ் திருமணம் செய்துகொள்ளும் ஜோடிகளுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கான தேனிலவு சுற்றுலா இலவசமாக வழங்கப்படுகிறது.

வெட்டிங் டெஸ்டினேஷன்
வெட்டிங் டெஸ்டினேஷன்

இன்றைய உலகில், பலரும் டெஸ்டினேஷன் வெட்டிங் செய்துகொள்ள விரும்புவதால், இந்தப் புதிய முயற்சியை ஒடிஸா அரசு ஆரம்பித்துள்ளது. 'பாந்த நிவாஸ்'(Panthanivas) என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொண்டால் போதும், உங்கள் கல்யாணம் சம்பந்தப்பட்ட அனைத்துத் தேவைகளையும் 2.17 லட்சத்தில் முடித்துக்கொள்ளலாம்.

அடுத்த கட்டுரைக்கு