Published:Updated:

`ரூ.10-க்கான ரயில் டிக்கெட்டுடன் பிளாட்ஃபார்ம் செல்கிறீர்களா?!'- எச்சரிக்கும் ரயில்வே அதிகாரிகள் 

பிளாட்ஃபார்ம் டிக்கெட்
பிளாட்ஃபார்ம் டிக்கெட்

பாசஞ்சர் ரயிலில் குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் 10 ரூபாயாக உள்ளது. ஆனால், பிளாட்ஃபார்ம் கட்டணம் 50 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இது, கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த ரயில்வே நிர்வாகம் மேற்கொண்ட தற்காலிக முயற்சி.

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. பொது இடங்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரயில் நிலையங்களில் பயணம் செய்பவர்கள் மட்டுமல்லாமல் அவர்களை வழியனுப்பி வைப்பதற்காகவே பெரும் கூட்டம் வருவது வாடிக்கை. அதைக் கட்டுப்படுத்தும் வகையில், நேற்று (17-ம் தேதி) முதல் பிளாட்ஃபார்ம் கட்டணம் 50 ரூபாயாக உயர்த்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.

ரயில் நிலையம்
ரயில் நிலையம்
தட்கல் டிக்கெட் எடுப்பதில் நடந்த பெரும் மோசடி...இனி அதிக டிக்கெட்கள் கிடைக்கும்!

நடைமேடைக்கான கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதால், நெல்லையில் ரயில் நிலையங்களில் அவசியமற்ற கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. இன்று காலை 12 மணி வரையிலும் நடைமேடைக்காக ஒரு சில டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. மக்களில் பலர் இந்தக் கட்டண உயர்வைத் தவிர்க்கும் வகையில், பாசஞ்சர் ரயிலுக்கான குறைந்தபட்சக் கட்டணமான ரூ.10-க்கு டிக்கெட் எடுத்து நடைமேடைக்குச் சென்றிருப்பது அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நெல்லையில் இருந்து மதுரைக்கு தன் தாயை வழியனுப்ப வந்திருந்த ஜெகநாதன் என்பவரிடம் பேசியபோது, ``ரயில் நிலையத்தில் வழியனுப்ப வருபவர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. `50 ரூபாய் கட்டணம் என்பதால் நான்கூட, என்னோடு வந்திருந்த மூவரை வெளியே நிறுத்திவிட்டு வந்திருக்கிறேன்.

தாயுடன் ஜெகநாதன்
தாயுடன் ஜெகநாதன்

என் தாய் மதுரை செல்கிறார். அவருக்கான கட்டணம் ரூ.35 மட்டுமே. ஆனால், நடைமேடை கட்டணம் அதிகம் என்பதால் உறவினர்களை உள்ளே அழைத்து வரவில்லை. ரயில்வே நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை அவசியமானது” என்றார்.

நடைமேடை கட்டண உயர்வைச் சமாளிக்கும் வகையில், குறுக்கு வழியில் சிந்திக்கும் சிலர் குறைந்தபட்ச கட்டண டிக்கெட் எடுப்பது பற்றி ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டோம். ``கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தவே நடைமேடை கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது, இது தற்காலிக உயர்வுதானே தவிர நிரந்தரமானது அல்ல. அதனால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை.

நடைமேடை டிக்கெட் இரண்டு மணி நேரம் செல்லக் கூடியது. ஆனால், பாசஞ்சர் ரயில் டிக்கெட் அப்படி கால நிர்ணயத்துக்கு உட்பட்டதல்ல.
ரயில்வே அதிகாரி
3 லட்சம் ஊழியர்களுக்குக் கட்டாய ஓய்வு?! - பட்டியல் கேட்கும் ரயில்வே நிர்வாகம்

அடுத்ததாக, நடைமேடை டிக்கெட் என்பது இரண்டு மணி நேரத்துக்குச் செல்லத்தக்கது. ஆனால், பாசஞ்சர் டிக்கெட் என்பது, எப்போது முதல் பாசஞ்சர் ரயில் வந்து வெளியேறுகிறதோ அப்போதே அது செல்லாததாகிவிடும். அதனால் அதை வைத்திருந்தால் அபராதம் கட்ட நேரிடும். அதைப் புரிந்து மக்கள் செயல்பட வேண்டும்” என எச்சரித்தார்.

அடுத்த கட்டுரைக்கு