Published:Updated:

"இதைச் செய்பவர்களுக்கு ₹5000 முதல் ₹50,000 வரை அபராதம்!"- கோவா சுற்றுலாத் துறையின் அதிரடி நடவடிக்கை

மாசடையந்து வரும் கோவா கடற்கரை

அரபிக் கடலின் கரையில் அமைத்துள்ள அழகிய சுற்றுலாத்தளமான இது ஏராளமான சுற்றுலா வாசிகளின் வருகையால் சேதமடைந்து மோசமாகி வருகிறது.

"இதைச் செய்பவர்களுக்கு ₹5000 முதல் ₹50,000 வரை அபராதம்!"- கோவா சுற்றுலாத் துறையின் அதிரடி நடவடிக்கை

அரபிக் கடலின் கரையில் அமைத்துள்ள அழகிய சுற்றுலாத்தளமான இது ஏராளமான சுற்றுலா வாசிகளின் வருகையால் சேதமடைந்து மோசமாகி வருகிறது.

Published:Updated:
மாசடையந்து வரும் கோவா கடற்கரை

உலகிலுள்ள சுற்றுலாத் தளங்களில் கோவா முக்கியமானது. ஏராளமான வெளிநாட்டவர்களும், உள்நாட்டவர்களும் அதிகம் விரும்பிச் செல்லும் இடங்களில் ஒன்று. அரபிக் கடற்கரையில் அமைத்துள்ள அழகிய சுற்றுலாத்தளமான இது ஏராளமான சுற்றுலா வாசிகளின் வருகையால் மாசடையத் தெடங்கியுள்ளது. இதைத் தடுக்கும் விதமாகவும் கோவாவைத் தூய்மையான சுற்றுலா நகரமாக மேம்படுத்தும் விதமாகவும் கோவா சுற்றுலாத் துறை அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

மாசடையந்து வரும் கோவா கடற்கரை
மாசடையந்து வரும் கோவா கடற்கரை

அதன் ஒரு பகுதியாக திறந்தவெளியில் சமைப்பது மற்றும் மது அருந்துவது, கண்ணாடி பாட்டில்களை உடைத்தல், பிச்சை எடுப்பது, சட்டவிரோதமானப் பொருள்களை விற்பனை செய்வது, சுற்றுலாப் பயணிகளிடம் பொருள்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்வது, கடற்கரையில் வாகனங்களை ஓட்டுவது உள்ளிட்ட பல செயல்பாடுகளை 'தொந்தரவான செயல்கள்' (nuisance) என்று வகைப்படுத்தியுள்ளது கோவா சுற்றுலாத் துறை. மேலும், இதைச் செய்பவர்களுக்கு ₹5000 முதல் ₹50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இது பற்றிக் கூறிய கோவா சுற்றுலாத் துறை இயக்குநர் நிகில் தேசாய், "மோசமான செயல்களால் கோவா சுற்றுலா சேதமடைந்து மோசமாகி வருகிறது. இதைத் தடுக்கும் நடவடிக்கையின் முதற்கட்டமாக இந்த உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.