Published:Updated:

`இலவசமாகச் சுற்றிக்காட்ட நாங்க ரெடி; டூருக்கு நீங்க ரெடியா?' - ஜப்பான் ஏர்லைன்ஸின் அதிரடி அறிவிப்பு!

ஜப்பான் பயணத்தில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் டோக்கியோ, ஹனிடா, ஓசாகாஹான்ஷி, ஓசாகா இட்டாமி ஆகிய விமான நிலையங்களில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்யலாம்.

ஜப்பான்
ஜப்பான்

வெளிநாட்டவர்களுக்கு இலவசமாக ஜப்பானைச் சுற்றிக்காட்ட ஜப்பான் ஏர்லைன்ஸ் முடிவெடுத்துள்ளது. ஜப்பான் டூரிஸம் ஏஜென்சி மற்றும் ஜப்பான் தேசிய சுற்றுலா அமைப்பும் இணைந்து `Your Japan 2020' என்ற இந்தப் பிரசாரத்தைச் செயல்படுத்த உள்ளது. வருகிற ஜூலை 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை இந்த இலவசப் பயணத் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

ஜப்பான் ஏர்லைன்
ஜப்பான் ஏர்லைன்

இதில் பயணிக்க விரும்புபவர்கள் டோக்கியோ, ஹனிடா, ஓசாகாஹான்ஷி, ஓசாகா இட்டாமி ஆகிய விமான நிலையங்களில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்யலாம். இந்த இடத்திலிருந்துதான் இலவச பயணம் ஆரம்பமாகிறது. ஆனால், ஜப்பானுக்குள் சுற்றிக் காட்டப்படும் இடம் சுற்றுலாத்துறையின் விருப்பமே. நாம் தேர்ந்தெடுக்க முடியாது. இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம் சுற்றுலாப் பயணிகள் அதிகம் பார்க்காத இடங்களைப் பார்க்கச் செய்வதே.

Vikatan

இதைப் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளது. பிப்ரவரி இறுதியில் முன்பதிவு தொடங்கும். நாம் முன்பதிவு செய்த மூன்றாம் நாள், பயணிக்கப்போகும் இடங்கள் குறித்து மின்னஞ்சல் அனுப்பப்படும். 50,000 பேருக்கு மட்டுமே அனுமதி என்பதால், முதலில் வருபவருக்கே முன்னுரிமை வழங்கப்படும் என ஏர்லைன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் வெளிநாட்டவர்கள் மட்டுமே பங்கு பெற முடியும்.

ஜப்பான்
ஜப்பான்

ஜூலை முதல் செப்டம்பர் வரை டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடக்க இருப்பதால் 100 மில்லியன் வெளிநாட்டவர்கள் அங்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஜப்பான் ஏர்லைன் நிறுவனம் அறிவித்திருக்கும் இந்தக் கவர்ச்சிகரமான அறிவிப்பின் மீது உலக மக்களின் கவனம் திரும்பியிருக்கிறது.