Published:Updated:

கொடிவேரி ஏமாத்திடுச்சு... ஆனால்... கோபிச்செட்டிப்பாளையம் காப்பாத்திடுச்சு!

ஜாலி ட்ரிப்: கொடிவேரி
பிரீமியம் ஸ்டோரி
ஜாலி ட்ரிப்: கொடிவேரி

- பைக்கர் க்ளப்பினருடன் ஒரு ஜாலி ட்ரிப்!

கொடிவேரி ஏமாத்திடுச்சு... ஆனால்... கோபிச்செட்டிப்பாளையம் காப்பாத்திடுச்சு!

- பைக்கர் க்ளப்பினருடன் ஒரு ஜாலி ட்ரிப்!

Published:Updated:
ஜாலி ட்ரிப்: கொடிவேரி
பிரீமியம் ஸ்டோரி
ஜாலி ட்ரிப்: கொடிவேரி

நேரம் காலை 6 மணி.. இந்த அதிகாலை நேரத்திலேயே என்னுடைய பைக்குடன் நானும் கிளம்பித் தயாராக நின்றிருந்தேன். ‘எங்கே’ எனக் கேட்கிறீர்களா? வருடத்தின் முடிவு வந்துவிட்டதல்லவா… எனவே, மற்ற பைக்கர்களுடன் இணைந்து ஒரு இயர் எண்டு ட்ரிப் போவதுதான் திட்டம். பொதுவாகவே பைக்கர்ஸ் குழுக்கள் இதுபோல ‘இயர் எண்டு ட்ரிப்’ போவது வழக்கம். இந்த வருடம் மோட்டார் விகடனும் அவர்களுடன் கலந்து கொள்ள முடிவெடுத்தது. கிருஷ்ணகிரியில் இருந்து 'டீம் 24 பைக்கர்ஸ்' என்ற பைக் கிளப் வசமாகச் சிக்கியது.

கிருஷ்ணகிரியில் ஆரம்பித்து, கொடிவேரி வரை கிட்டத்தட்ட 200 கிமீ பயணம் செய்து, அங்கேயே மதிய உணவை முடித்துக் கொண்டு பின்னர் அங்கிருக்கும் சில இடங்களுக்கும் ஒரு விசிட் அடித்துவிட்டு, இரவு 7 மணிக்குள் திரும்பி விடுவது என்பதுதான் திட்டம். 24 பைக்குகளில் மொத்தம் 30 பேர் வரை இந்த ட்ரிப்புக்காக இணைந்திருந்தோம்.

கொடிவேரி ஏமாத்திடுச்சு... ஆனால்... கோபிச்செட்டிப்பாளையம் காப்பாத்திடுச்சு!
கொடிவேரி ஏமாத்திடுச்சு... ஆனால்... கோபிச்செட்டிப்பாளையம் காப்பாத்திடுச்சு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பைக்கில் பயணம் என்றவுடன் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேகத்தில், ஒருவர் வேகமாகச் சென்று ஒருவர் மெதுவாகச் சென்று இடையில் குழப்பங்கள் ஏற்பட்டு.. இப்படி எந்தவித குழப்பமும் பைக்கர்களுடைய ட்ரிப்பில் பெரும்பாலும் இருக்காது. கட்டுக்கோப்பான வாகனங்கள் ஒரு சேர அணிவகுத்துச் செல்வதைப் பார்த்தால் எப்படி இருக்கும்! அப்படித்தான் இருக்கும் பைக்கர்களுடைய பயணம். நாங்கள் கிளம்புவதற்கு முன்பே பைக்கை எந்த வேகத்தில் ஓட்ட வேண்டும், எந்த வரிசையில் பைக்குகள் வர வேண்டும், இடையில் ஏதாவது தேவைப்பட்டால் – தகவல் சொல்ல வேண்டும் என்றால் யாரிடம் சொல்ல வேண்டும் என அடிப்படையான விதிமுறைகளை எல்லோருக்கும் விளக்கினோம். இனி ஓவர் டு இயர் எண்டு பைக்கர்ஸ் ரைடு.

கிருஷ்ணகிரியில் இருந்து 20 கிமீ கடந்தால்… காவேரிப்பட்டினம் என்ற ஊர் வரும். குளிர்காலக் காலை வேளைகளில் அந்த ஊரைக் கடந்தும் 50 கிமீ வரை மூடுபனி மிகவும் அதிகமாக இருக்கும். நமக்கு முன்னால் செல்லும் வாகனங்கள்கூட கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு மூடுபனி அதிகமாக இருக்கும். இந்த மூடுபனி போர்த்திய சாலைகளில் வரிசையாகவும் கவனமாகவும் பைக்குகளை அணிவகுத்துப் பயணிப்பதே கொஞ்சம் சவாலான காரியம்தான். எனவே, மூடுபனி தொடங்குவதற்கு முன்பே மீண்டும் பைக்குகளை நிறுத்தி அந்த இடத்தில் எப்படிப் பயணிப்பது என அறிவுறுத்தி மீண்டும் பயணத்தைத் தொடங்கினோம்.

கொடிவேரி ஏமாத்திடுச்சு... ஆனால்... கோபிச்செட்டிப்பாளையம் காப்பாத்திடுச்சு!
கொடிவேரி ஏமாத்திடுச்சு... ஆனால்... கோபிச்செட்டிப்பாளையம் காப்பாத்திடுச்சு!

கிருஷ்ணகிரியில் இருந்து கொடிவேரிக்குச் செல்லும் வழி மிகவும் சுலபம்தான். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், பவானி மற்றும் கொடிவேரி. மொத்தம் 215 கிமீ நீண்ட இந்தப் பயணத்தில் சேலத்தைக் கடந்து காலை உணவை எடுத்துக் கொள்ளலாம் எனத் திட்டமிட்டிருந்தோம். சேலத்தைக் கடந்தவுடன் ஒரு சிறிய சாலையோரக் கடையில் காலை உணவை முடித்தோம். நாங்கள் 30 பேர் சாப்பிட்டும் பில்லானது 1,800 ரூபாயைத் தாண்டவில்லை. குறைந்த செலவில், நிறைவாகச் சாப்பிட இது போன்ற சிறிய கடைகளைத் தேர்ந்தெடுத்தோம்.

பவானி வரை நெடுஞ்சாலைதான். எனவே, அதில் அழகாக க்ரூஸ் செய்து பயணித்துவிட்டோம். பவானியைக் கடந்தபின் கொடிவேரிக்குச் செல்ல வலது பக்கம் திரும்ப வேண்டும். ட்ராஃபிக் நிறைந்த இருவழிச் சாலையில் பயணித்து ஒரு வழியாகக் கொடிவேரியை அடைந்துவிட்டோம். கொடிவேரி அருவியைப் பார்த்தவுடன் அதில் சென்று குளிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. பைக்குகளை எல்லாம் நிறுத்திவிட்டு அருவிக்குச் சென்றால், அங்கு குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதைக் கேட்டவுடன் அனைவரும் ட்ரிப் ஆர்கனைஸரை ஒருமுறை முறைத்தோம், `இப்படிக் கூட்டி வந்து ஏமாத்திட்டீங்களே பாஸ்' என்ற தோரணையில் அவரைப் பார்த்தோம். `என்கிட்ட வேற ப்ளான் இருக்கு' எனக் கூறி எங்களைக் கூல் ஆக்கினார் ஆர்கனைஸர். வந்ததுக்கு, பைக்குகளை வரிசையாக நிறுத்தி ஒரு போட்டோ ஷூட்.

கொடிவேரி ஏமாத்திடுச்சு... ஆனால்... கோபிச்செட்டிப்பாளையம் காப்பாத்திடுச்சு!
கொடிவேரி ஏமாத்திடுச்சு... ஆனால்... கோபிச்செட்டிப்பாளையம் காப்பாத்திடுச்சு!
J T THULASIDHARAN

கொடிவேரியில் இருந்து மீண்டும் நாங்கள் வந்த வழியே கிளம்பினோம். அந்த வழியில் திரும்பி வரும்போது, கோபிச்செட்டிப் பாளையத்தைக் கடக்க வேண்டியிருக்கும். அந்த ஊரைக் கடந்தவுடன் சிறிது தூரத்திலேயே இடதுபுறம் திரும்ப வேண்டியிருக்கும். இடதுபுறம் திரும்பி ஒரு 4 கிமீ பயணம் செய்தோம். ஒற்றையடிப் பாதைபோல் இருந்த அந்தப் பாதையில் பைக்கை ஓட்டும்போது, அந்த இடம் அப்படியே எங்கள் மனதைக் கொள்ளை கொண்டது. நீல வானம், பச்சைப் பசேல் என்ற வயல்வெளி, இடது பக்கம் தண்ணீர் ஓடும் கால்வாய் என அந்த இடம் பார்ப்பதற்கு அவ்வளவு ரம்மியமாகக் காட்சியளித்தது.

அத்தனையையும் கடந்து ஓர் இடத்தில் வண்டிகளை நிறுத்தினார்கள். அருகிலேயே பவானி ஆறு ஓடிக் கொண்டிருந்தது. இதற்கு மேலும் பொறுக்க முடியாது என்று ஓடிச் சென்று நீரில் குதித்தே விட்டோம். அன்று எங்களுடன் வந்த ரைடர்களில் ஒருவருக்குப் பிறந்தநாள் என்று அப்போதுதான் கூறினார்கள். வரும் வழியிலேயே அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு கேக் ஒன்றையும் பார்சல் செய்திருந்தார்கள். பவானி ஆற்றங்கரையோரத்திலேயே அவருடைய பிறந்த நாளையும் கொண்டாடியது இந்த ரைடின் மகிழ்ச்சியான ஒரு தருணம். மீண்டும் ஆற்றில் இறங்கி ஒரு மணி நேரம் குளித்துக் களித்தோம். ஆற்றில் விளையாடிவிட்டு அயர்ச்சியாக வெளியே வந்த எங்களுக்கு உடனடியாக 'நான்வெஜ்' லஞ்ச் ரெடியாக இருந்தது. விளையாடிய களைப்பில் இருந்த நாங்கள், அந்தச் சாப்பாட்டை ஒரு பிடிபிடித்தோம்.

எல்லாம் முடிந்து கடிகாரத்தைப் பார்த்தபோது, மணி 4.30–யைக் கடந்திருந்தது. சரி, இப்போது கிளம்பினால்தான் மீண்டும் கிருஷ்ணகிரியை அடைவதற்குச் சரியாக இருக்கும் என அங்கிருந்து கிளம்பினோம். சேலத்தைக் கடப்பதற்குள்ளாகவே வானம் இருண்டுவிட்டது. அதன்பிறகு கிருஷ்ணகிரியை அடையும் வரை இரவுப் பயணம்தான். இரவு 9 மணிக்கு பைக்கர்கள் அனைவரும் கிருஷ்ணகிரியை அடைந்தோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism