Published:Updated:

Kodaikanal: ஒரு லைவ் ட்ராவல் ரிப்போர்ட்; சுற்றுலா பயணிகள் மிஸ் பண்ணக்கூடாத 12 இடங்களுக்கான கைடு!

கொடைக்கானல்

கோடைகால விடுமுறையை ஒட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் வரத் திட்டமிடுவார்கள். அவர்கள் மிஸ் பண்ணக் கூடாத 12 இடங்களையும் அதன் சிறப்புகளையும் பார்க்கலாம்.

Kodaikanal: ஒரு லைவ் ட்ராவல் ரிப்போர்ட்; சுற்றுலா பயணிகள் மிஸ் பண்ணக்கூடாத 12 இடங்களுக்கான கைடு!

கோடைகால விடுமுறையை ஒட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் வரத் திட்டமிடுவார்கள். அவர்கள் மிஸ் பண்ணக் கூடாத 12 இடங்களையும் அதன் சிறப்புகளையும் பார்க்கலாம்.

Published:Updated:
கொடைக்கானல்

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல். மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் இந்த மலை கடல் மட்டத்தில் இருந்து சுமார் 7 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் இதமான தடப்வெட்ப நிலை இருப்பதால் தமிழகம் மற்றும் நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர். குறிப்பாக தமிழகத்துக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினர் கொடைக்கானலை மிகவும் விரும்புகின்றனர்.

கொடைக்கானல் அடிவாரப்பகுதி
கொடைக்கானல் அடிவாரப்பகுதி

கோடைகால விடுமுறையை ஒட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் வரத் திட்டமிடுவார்கள். அவர்கள் மிஸ் பண்ணக் கூடாத 12 இடங்களையும் அதன் சிறப்புகளையும் பார்க்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக 120 கி.மீ பயணித்தும், திண்டுக்கல்லில் இருந்து 100 கி.மீ பயணித்தும் கொடைக்கானலுக்குச் செல்லலாம் . கொடைக்கானல் மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் செக் போஸ்ட்டில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபடுவார்கள். பைக்கில் இருவர் சென்றால் இருவரும் ஹெல்மேட் அணிந்திருக்க வேண்டும். காரில் செல்வோர் சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும். இதை உறுதிப்படுத்தி அனுப்பும் போலீசார் வாகனத்தில் செல்வோர் 5 லிட்டருக்கும் குறைவான வாட்டர் கேன்களை எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை.

தலையாறு அருவி
தலையாறு அருவி

இந்த அடிவாரப் பகுதியில் இருந்து 15 கி.மீ மலையேறினால் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும் முதல் இடம் `டம் டம்' பாறை. இப்பகுதியில் இருந்து பார்த்தால் மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து விழும் தலையாறு அருவியின் எழில்மிகு காட்சியைப் பார்க்கலாம். இந்த அருவி எலி வால் போன்ற அமைப்பில் இருப்பதால் `எலி வால் வியூ பாய்ன்ட்' என்றும் இந்தப் பகுதி அழைக்கப்படுகிறது. மேலும் இங்கிருந்து பார்த்தால் மஞ்சளாறு அணையின் பரந்து விரிந்த நீர்ப்பிடிப்பு பகுதியைக் கண்டு ரசிக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து கொடைக்கானல் நகாரட்சி டோல்கேட்டை தாண்டினால் சுற்றுலா பயணிகளை பன்னீர் தெளித்து வரவேற்கும் விதமாக வெள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. கொடை மலையிலிருந்து உருவாகும் நீர் வெள்ளி அருவிக்கு வருகிறது. ஆண்டுதோறும் இந்த அருவியில் நீர்வரத்து இருந்துகொண்டே இருக்கும்.

வெள்ளி நீர்வீழ்ச்சி
வெள்ளி நீர்வீழ்ச்சி

வெண்மையான நீர் பாறைகளில் வழிதோடும் காட்சி வெள்ளிக் குழம்பு கொண்டுவது போலவும், அதன் சத்தம் வெள்ளி கொலுசின் சத்தம் போன்றிருப்பதும் இந்த அருவிக்கு வெள்ளி நீர்வீழ்ச்சி எனப் பெயர் வரக் காரணமாக அமைந்தது என்கின்றனர் கொடைக்கானலின் பூர்வீக மக்கள்.

அருவி
அருவி

கொடைக்கானலில் அடிக்கடி மழை பெய்வதால் இந்த அருவியில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்படும். இதனால் இந்த அருவியில் சுற்றுலாக் பயணிகள் குளிக்கத் தடை உள்ளது.

இப்பகுதியைக் கடந்து கொடைக்கானல் பழனி பிரிவு சாலையில் சென்றால் பேத்துப் பாறை, வெள்ளைப் பாறை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் ஆதிமனிதன் வாழ்ந்த கற்திட்டைகள் உள்ளன.

ஆதிமனிதன் குகை
ஆதிமனிதன் குகை

பேத்துப்பாறையில் மட்டுமே ஆதிமனிதன் வசித்த 7 கற்திட்டைகள் போன்ற குகைகள் உள்ளன. இதேபோல கொடைக்கானல் வனப்பகுதிகளில் 5 இடங்களில் ஆதிமனிதன் வாழ்ந்த குகைகள் உள்ளன. இவை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளன.

அறிவிப்பு பலகை
அறிவிப்பு பலகை

நவீன வசதி இல்லாத 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் 10க்கு 10 என்ற அளவிலான பெரிய கற்திட்டைகளை கொண்டு அமைத்த ஆதிமனிதனின் குடியிருப்பை சுற்றுலா பயணிகள் காணத்தவறக் கூடாது.

கொடைக்கானலில் உள்ள தூய இருதயக் கல்லூரி வளாகத்தில் நூறு ஆண்டுகால பழமையான அருங்காட்சியகம் உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான வண்டு, பூச்சி, பட்டாம்பூச்சி, கழுகு, ஆந்தை உள்ளிட்ட பறவைகளின் உருவங்கள் பதப்படுத்தப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் ராஜநாகம், மலைப்பாம்பு உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பாம்பு இனங்களும் பதப்படுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நீர்யானை, நீர்நாய், கலைமான், காட்டுப்பன்றி, யானை, கரடி, நரி உள்ளிட்ட விலங்குகளின் எலும்புக் கூடுகளும் காட்சிக்கு உள்ளன. இதேபோல தாயின் கருவறையில் இருந்த கரு முதல் 9 மாதக் குழந்தையின் வளர்ச்சியை கண்ணாடி பாட்டில்களில் பதப்படுத்தி வைத்துள்ளனர்.
அருங்காட்சியகம்
அருங்காட்சியகம்

மன்னர்கள் காலந்தொட்டு ஆங்கிலேயர் வரையும், இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு பிறகும் அச்சடிக்கப்பட்ட நாணயங்கள் சேகரிக்கப்பட்டு காட்சிக்கு வைத்துள்ளனர். இவ்வாறான அரிய பொக்கிஷங்களின் தொகுப்பாக உள்ள அருங்காட்சியகத்தை சுற்றுலாப் பயணிகள் ஒரு முறையேனும் பார்த்துவிட வேண்டும்.

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்பக்கூடிய இடமாக இருப்பது லேக் ஏரியா. சுமார் 24 ஹெக்டேர் பரப்பளவுகொண்ட இந்த ஏரியில் 1932 முதல் படகு சவாரி நடந்து வருகிறது.

பூங்கா
பூங்கா

இந்த ஏரியைச் சுற்றி 5 கி.மீ தொலைவுக்கு சாலையும் அதையொட்டி நடைமேடையும் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் நடைமேடையில் நடந்து கொண்டே ஏரியின் அழகை ரசிக்கலாம். இந்தச் சுற்றுச்சாலையில் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்ய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரிதும் விரும்புகின்றனர்.

ஏரி
ஏரி

கொடைமலையின் இதமான குளிரை அனுபவிக்கும் பயணிகளுக்கு சூடான உணவுப்பதார்த்தங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் குழந்தைகள் பெரிதும் விரும்பும் பலூனை சுட்டு விளையாடுவதற்கு பல இடங்களில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஏரியை ஒட்டிய பகுதியில் 23 ஏக்கரில் பிரையண்ட் பூங்கா அமைந்துள்ளது. குளிர் பிரதேசங்களில் வளரக்கூடிய அலங்காரச் செடி வகைகள், ரோஜா, லில்லியம் உள்ளிட்ட மலர் வகைகள் இந்தப் பூங்காவில் பூத்துக் குலுங்குகின்றன. புல்வெளிகளில் ஆங்காங்கே உள்ள மரத்தடிகளில் நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பூங்கா
பூங்கா

கொடையின் இதமான குளிரை அனுபவிக்கும் பயணிகள் அதிக நேரம் செலவிடுவது இந்தப் பூங்காவில் தான். பூங்காவின் அழகை ரசிக்க ஒரு சுற்று சுற்றி வரவே ஒரு நாள் போதாது. ஆண்டுதோறும் கோடை காலத்தை முன்னிட்டு நடத்தப்படும் கோடை விழாவின் ஒரு பகுதியான மலர் கண்காட்சியைக் காண லட்சக்கணக்கான மக்கள் வருகை தருகிறார்கள்.

கொடைக்கானல் தென்திசையில் கோக்கர்ஸ் வாக் பகுதி அமைந்துள்ளது. இந்த இடத்துக்கு பிரிட்டிஷ் காலத்தில் கோக்கர்ஸ் என்ற ஆங்கிலேயர் பாதை அமைத்ததால் அவரின் பெயராலே இப்பகுதி கோக்கர்ஸ் வாக் என அழைக்கப்படுகிறது. செங்குத்தான மலையை ஒட்டி இந்தப் பாதை சுமார் 2 கி.மீ தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ளது.

கோக்கர்ஸ் வாக்
கோக்கர்ஸ் வாக்

ஒரு பகுதியில் நடந்து சென்று மற்றொரு பகுதியில் வெளியே வரும்படியான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேகங்கள் சூழ்ந்திருக்கும் நடைமேடையில் இருந்து மலையின் கீழ் பசுமையாக இருக்கும் தரைப்பகுதியைக் கண்டு ரசிக்கலாம்.

கோக்கர்ஸ் வாக் பகுதியில் இருந்து 6 கி.மீ பயணித்துச் சென்றால் மோயர் வியூ பாய்ண்ட் என்ற ரம்மியமானப் பகுதியை அடையலாம். அங்கு முதலில் கொடைக்கானல் மலையில் அதிகம் வசிக்கக்கூடிய வனவிலங்கான காட்டு மாடுடைய கம்பீரமான சிலை நம்மை வரவேற்கும். அதையொட்டி இயற்கை எழில் கொஞ்சும் மலைகளின் அழகை ரசிப்பதற்கு உயரமான டவர் அமைக்கப்பட்டுள்ளது.

மோயர் வியூ பாய்ண்ட்
மோயர் வியூ பாய்ண்ட்

மேலும் இப்பகுதிக்கு பாதையை அமைத்த ஆங்கிலேயர் தாமஸ் மோயர் என்பவரின் நினைவாகத் தூண் அமைக்கப்பட்டிருக்கும். இரண்டாம் உலகப் போரின் போது கொடைக்கானலில் ஆங்கிலேயர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்துள்ளனர். அப்போது தாங்கள் எப்போதும் தாக்குதலுக்கு ஆளாகலாம் என எண்ணி இப்பகுதியில் இருந்து 86 கி.மீ தூரத்தில் உள்ள மூணாறுக்கு பாதை அமைத்தனர். இதனால் முன்பு இப்பகுதி எஸ்கேப் ரோடு என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளது.

இப்பகுதியை அடுத்துள்ள பள்ளத்தாக்கு காட்டுப்பகுதியில் பைன் மரங்கள் நிறைந்தது. சுமார் 60 முதல் 80 அடி வரை வளரக்கூடிய இந்த மரங்கள் சூரிய ஒளி புக முடியாத அளவுக்கு அடர்த்தியாக இருக்கிறது. அதையும் மீறி உள்நுழையும் சூரியக் கதிர்கள் மரங்களில் மோதி அப்பகுதியே செந்நிறத்தில் ஜொலிக்கும் அழகை ரசிக்க இரு கண்கள் போதாது.

பைன் மரக்காடு
பைன் மரக்காடு

தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல் காட்சிகளிலும், சண்டைக் காட்சிகளும் இப்பகுதியில் படமாக்கப்பட்டுள்ளன. ப்ரீ வெட்டிங் சூட்டுக்கு வரும் இளம் ஜோடிகளை போட்டோகிராபர்கள் இங்கு அழைத்துவர மறக்கமாட்டார்கள்.

பைன் மரக்காடுகளை கடந்து சென்றால் ஒரு கி.மீ தூரத்தில் இருப்பது குணா குகை. நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 1991-ல் வெளிவந்த குணா திரைப்படத்தில் வரும் கண்மணி அன்போடு காதலன் என்ற பாடல் காட்சி இந்தக் குகையில் தான் படமாக்கப்பட்டது. அதுமட்டுமில்லாது அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளும் இப்பகுதியில் தான் படமாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்துதான் சுற்றுலா வரும் பயணிகள் இவ்விடத்தையும் பார்த்து ரசிக்கத் தொடங்கினா். அதனால் இப்பகுதிக்கு குணா குகை என்ற பெயர் வந்தது.

குணா குகை பகுதி
குணா குகை பகுதி

சாலையில் இருந்து சிறிது தூரம் நடந்து சொன்று குணா குகையை அடைய வேண்டும். அங்கிருந்து தரைப்பகுதியையும் கண்டு ரசிக்கலாம். இப்பகுதியில் மரங்களின் வேர்கள் தரையின் மீது படர்ந்திருக்கும். குணா குகை பகுதி ஆபத்தானது என்பதால் வனத்துறையால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.

தூண் பாறை
தூண் பாறை

ஓங்கி உயர்ந்து நிற்கும் மலைகளையும், அழகிய பூங்காவிற்குள் நின்று ரசிக்கும்படியான இடம் பில்லர் ராக். 122 அடி உயரத்தில் 2 தூண் பாறைகளை பார்க்கையில் பாகுபலி படத்தில் போடப்பட்டுள்ள செட் போல தான் இருக்கும். ஆனால் இயற்கையான 2 தூண் பாறைகளைப் பார்க்க எல்லோருக்கும் பிரமிப்பாக இருக்கும். மேகங்கள் அவ்வப்போது இந்தத் தூண்களை சூழ்ந்து கொள்வதால் சுற்றுலா பயணிகள் பொருத்திருந்து தான் பார்வையிட்டு வர வேண்டும்.

கொடைக்கானலில் தயாரிக்கப்படும் நறுமனப் பொருள்கள், தேயிலை, காபி பொடி, குளிர் பிரதேசங்களில் அணிவதற்கான உடைகள் என அனைத்து பொருள்களும் கிடைக்கும் வகையில் வரிசையாக கடைகள் அமைந்துள்ளன. அந்தக் கடைகளில் விற்கப்படும் பொருள்களையெல்லாம் பார்த்து ரசித்துவிட்டு மேல் பகுதிக்கு சென்றால் பசுமையான மலை குன்றுகளும், அதையடுத்து பச்சைப் போர்வை போர்த்தியது போன்ற தரைப்பகுதியையும் காணலாம்.

பசுமை பள்ளத்தாக்கு
பசுமை பள்ளத்தாக்கு

தற்கொலை பள்ளத்தாக்கு என்று அழைக்கப்பட்டு வந்த இந்தப் பகுதியை முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பார்வையிட வந்துள்ளார். அப்போது இப்பகுதிக்கான பெயரைக் கேட்ட அவர், பசுமை பள்ளத்தாக்கு எனப் பெயரை மாற்றியது குறிப்பிடத்தக்கது. என்ன மக்களே கொடைக்கானலுக்கு கிளம்பத் ரெடி ஆகிட்டிங்களா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism