Published:Updated:

மதுரை - தேனி ரயில் சேவை: கிழக்கே போன ரயில், 11 ஆண்டுகளுக்குப் பிறகு இனி மேற்கு நோக்கியும் செல்லும்!

தேனி ரயில்நிலையம்

மதுரை - தேனி இடையே கடந்த 2011-ல் நிறுத்தப்பட்ட ரயில் சேவை 11 ஆண்டுகளுக்கு பிறகு மே 27-ல் மீண்டும் தொடங்கப்பட உள்ளதால் மதுரை, தேனி மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மதுரை - தேனி ரயில் சேவை: கிழக்கே போன ரயில், 11 ஆண்டுகளுக்குப் பிறகு இனி மேற்கு நோக்கியும் செல்லும்!

மதுரை - தேனி இடையே கடந்த 2011-ல் நிறுத்தப்பட்ட ரயில் சேவை 11 ஆண்டுகளுக்கு பிறகு மே 27-ல் மீண்டும் தொடங்கப்பட உள்ளதால் மதுரை, தேனி மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Published:Updated:
தேனி ரயில்நிலையம்

மதுரை - போடி இடையே 90.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு மீட்டர்கேஜ் பாதை அகற்றப்பட்டு அகல ரயில்பாதை அமைக்கும் பணி கடந்த 2011-ல் தொடங்கியது. தொடக்கம் முதலே போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமல் ஆமை வேகத்தில் பணி நடந்து வந்தது. 2015-க்குள் பணிகள் முடிக்கப்பட்டு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால் 2015 வரை முதற்கட்ட பணிகளே முடிவடையாமல் இருந்தன. இதனால் வர்த்தகர் சங்கம், தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பணியைத் துரிதப்படுத்தி விரைவில் ரயில் இயக்கப்பட வேண்டும் எனப் போராடி வந்தனர்.

ஆண்டிபட்டி
ஆண்டிபட்டி

இதனால் இத்திட்டத்துக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் விரைவு படுத்தப்பட்டன. முதல்கட்டமாக மதுரை - உசிலம்பட்டி, இரண்டாம் கட்டமாக உசிலம்பட்டி - ஆண்டிபட்டி மூன்றாம் கட்டமாக ஆண்டிபட்டி - தேனி எனப் படிப்படியாக பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது.

தற்போது நான்காம் கட்டமாக தேனி - போடி இடையே பாதை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்துவருகின்றன. இந்நிலையில் மதுரை - தேனி இடையே முன்பதிவு இல்லாத தினசரி சிறப்பு ரயில் மே 27-ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரயில் தண்டவாளம்
ரயில் தண்டவாளம்

இந்தச் சேவையை மே 26-ம் தேதி சென்னை வரவிருக்கும் பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைக்க உள்ளார். மே 27-ம் தேதி காலை 8.30 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தில் புறப்படும் ரயில் மதுரை காமராஜா் பல்கலைக்கழகம் அருகே வடபழஞ்சி நிறுத்தத்தில் 8.45க்கும், உசிலம்பட்டியில் 9.05க்கும், ஆண்டிபட்டியில் 9.20க்கும் சென்று, தேனியை காலை 9.35 மணிக்குச் சென்றடையும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதேபோல தேனியில் மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு ஆண்டிபட்டியில் 6.30 மணிக்கும், உசிலம்பட்டியில் 6.45 மணிக்கும், வடபழஞ்சிக்கு இரவு 7 மணிக்கும் வந்து மதுரை ரயில் நிலையத்திற்கு இரவு 7.35 மணிக்கு வரும் என மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தேனி ரயில்நிலையம்
தேனி ரயில்நிலையம்

மதுரை - தேனி இடையே கடந்த 2011-ல் நிறுத்தப்பட்ட ரயில் சேவை 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்க உள்ளதால் மதுரை, தேனி மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து தேனி பங்களாமேட்டைச் சேர்ந்த தனபாண்டியனிடம் பேசினோம். "தமிழகத்தில் தேனி மாவட்டத்துக்கு மட்டும்தான் ரயில் வரவில்லை என்ற குறை இருந்தது. நீண்ட காலத்திற்குப் பிறகு எங்கள் மாவட்டத்துக்கு ரயில் வருவதை மக்கள் பெரிதும் கொண்டாடுகின்றனர். ஒவ்வொரு கட்டமாக பணிகள் முடிக்கப்பட்டு, சோதனை ஓட்டம் நடத்தப்பட்டபோதே பெரும் திரளான மக்கள் ரயில்வே பாதையை ஒட்டி நின்று மலர் தூவி ரயிலை வரவேற்றனர்.

தனபாண்டியன்
தனபாண்டியன்

தேனி மாவட்டம் விவசாயம் மற்றும் விவசாயத் தொழிலை நம்பியுள்ளது. குறிப்பாக ஏலக்காய் மற்றும் அனைத்துவிதமாக காய்கறிகளும் விளைவிக்கப்படும் பகுதியாக உள்ளது. எனவே காய்கறி வர்த்தம் உள்ளிட்டவற்றிற்கும் ரயில் சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism