Published:Updated:

272 நாள்களில் 12,800 கி.மீ. சைக்கிள் பயணம்; இந்தியாவை வலம் வந்த ஊட்டி இளைஞர் - எதற்காகத் தெரியுமா?

சைக்கிள் வீரர் மணிகண்டன்

"இந்தப் பயணத்தில் சில முறை சைக்கிள் பழுதானது. 5 டயர்களை மாற்ற வேண்டியதாக இருந்தது. 8 முறை டியூப் களையும் மாற்றியுள்ளேன். மொத்தப் பயணத்திற்கும் ரூ.55,000 வரை செலவானது." - மணிகண்டன்

272 நாள்களில் 12,800 கி.மீ. சைக்கிள் பயணம்; இந்தியாவை வலம் வந்த ஊட்டி இளைஞர் - எதற்காகத் தெரியுமா?

"இந்தப் பயணத்தில் சில முறை சைக்கிள் பழுதானது. 5 டயர்களை மாற்ற வேண்டியதாக இருந்தது. 8 முறை டியூப் களையும் மாற்றியுள்ளேன். மொத்தப் பயணத்திற்கும் ரூ.55,000 வரை செலவானது." - மணிகண்டன்

Published:Updated:
சைக்கிள் வீரர் மணிகண்டன்

நீலகிரி மாவட்டம் குந்தா அருகில் உள்ள பெங்கால் மட்டம் கோத்தி பென் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். 25 வயதான இவர் பி.காம் பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்கிறார். குடிசை மாற்று வாரியத்தில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றி வருகிறார். சைக்கிள் ஓட்டுவதில் அதீத ஆர்வம் கொண்ட இவர், சைக்கிள் மூலம் இந்தியா முழுவதையும் சுற்றி வர வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டிருந்தார்.

சைக்கிள் வீரர் மணிகண்டன்
சைக்கிள் வீரர் மணிகண்டன்
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அவசியத்தை வலியுறுத்தி, கடந்த பிப்ரவரி மாதம் ஊட்டியில் இருந்து நீண்ட சைக்கிள் பயணத்தைத் தொடங்கி இருந்தார். 272 நாள்களில் சுமார் 12,800 கிலோமீட்டர் தொலைவை சைக்கிள் மூலம் கடந்திருக்கிறார்.

இன்று சொந்த ஊர் திரும்பிய மணிகண்டனுக்கு அவரது நண்பர்கள் மணிகண்டனை உற்சாக வரவேற்பு அளித்து வரவேற்றனர்.

ஊட்டியில் மணிகண்டனைச் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்து விட்டுப் பேசினோம், "சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை நாட்டு மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் நாடு முழுவதும் சைக்கிளில் பயணித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என எனது பயணத்தை ஊட்டியில் தொடங்கினேன். காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை சைக்கிளை இயக்கினேன். இரவு நேரங்களில் பெட்ரோல் பங்க் அல்லது கோயில் போன்ற இடங்களில் கூடாரம் அமைத்துத் தங்கிக் கொள்வேன். காலையிலிருந்து மாலை வரை சைக்கிளை இயக்குவேன். ஒரு நாளைக்கு 100 கிலோமீட்டருக்கு மேல் இயக்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். கன்னியாகுமரி, சென்னை, ஆந்திரா, ஒரிசா, மேற்கு வங்கம், லடாக் என பயணித்து இந்தியாவின் கடைசி கிராமமான மனா வில்லேஜை அடைந்தேன்.

சைக்கிள் வீரர் மணிகண்டன்
சைக்கிள் வீரர் மணிகண்டன்

அங்கிருந்து ஆக்ரா, ராஜஸ்தான், குஜராத், கோவா, கேரளா வழியாக நீலகிரிக்குத் திரும்பினேன். 272 நாள் சைக்கிள் பயணத்தில் 12,800 கிலோ மீட்டரை வலம் வந்திருக்கிறேன். இந்தப் பயணத்தில் சில முறை சைக்கிள் பழுதானது. 5 டயர்களை மாற்ற வேண்டியதாக இருந்தது. 8 முறை டியூப்களையும் மாற்றியுள்ளேன். மொத்தப் பயணத்திற்கும் ரூ.55,000 வரை செலவானது. பயணச் செலவிற்கு டி.ஜி.பி சைலேந்திரபாபு உள்ளிட்ட ஒரு சிலரின் உதவியும் கிடைத்தது. நிறைய அனுபவங்களை இந்தப் பயணம் எனக்குக் கற்றுக் கொடுத்தது" என்றார்.