Published:Updated:

தமிழ்நாட்டில் ஒரு குட்டி கேரளா! - பட்ஜெட் பார்ட்டிகளின் ஆலப்புழா!

சேலம் மாவட்டம் பூலாம்பட்டி  ‘குட்டி ஆலப்புழா’
பிரீமியம் ஸ்டோரி
சேலம் மாவட்டம் பூலாம்பட்டி ‘குட்டி ஆலப்புழா’

சேலம் மாவட்டம் எடப்பாடிக்குப் (நம்ம முன்னாள் முதல்வர் ஊர்தானுங்கோவ்!) பக்கத்தில் இருக்கிறது பூலாம்பட்டி என்றோர் இடம். ‘குட்டி ஆலப்புழா’ என்று இதைச் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது.

தமிழ்நாட்டில் ஒரு குட்டி கேரளா! - பட்ஜெட் பார்ட்டிகளின் ஆலப்புழா!

சேலம் மாவட்டம் எடப்பாடிக்குப் (நம்ம முன்னாள் முதல்வர் ஊர்தானுங்கோவ்!) பக்கத்தில் இருக்கிறது பூலாம்பட்டி என்றோர் இடம். ‘குட்டி ஆலப்புழா’ என்று இதைச் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது.

Published:Updated:
சேலம் மாவட்டம் பூலாம்பட்டி  ‘குட்டி ஆலப்புழா’
பிரீமியம் ஸ்டோரி
சேலம் மாவட்டம் பூலாம்பட்டி ‘குட்டி ஆலப்புழா’

ஏழைகளின் ஊட்டி, தமிழகத்தின் சிரபுஞ்சி, இந்தியாவின் டெட்ராய்டு என்றெல்லாம் சில இடங்களுக்குப் புனைப்பெயர்கள் இருக்கும். அதேபோல், ‘குட்டி ஆலப்புழா’ என்று சேலம் மாவட்டம் மக்களால் அன்போடு அழைக்கப்படும் ஓர் இடம் இருக்கிறது. எங்கே?

அதான் சொல்லியாச்சே! சேலம் மாவட்டம். ஆம், சேலம் மாவட்டம் எடப்பாடிக்குப் (நம்ம முன்னாள் முதல்வர் ஊர்தானுங்கோவ்!) பக்கத்தில் இருக்கிறது பூலாம்பட்டி என்றோர் இடம். ‘குட்டி ஆலப்புழா’ என்று இதைச் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. ஆலப்புழா என்றால், படகுப் பயணம்தானே ஸ்பெஷல்! பூலாம்பட்டியிலும் அதே! ஆலப்புழா கொஞ்சம் காஸ்ட்லி என்றால், பூலாம்பட்டியை பட்ஜெட் ஆலப்புழா… இல்லை இல்லை… அதைவிட ‘ஏழைகளின் ஆலப்புழா’ என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு எல்லாமே மலிவு! 10 ரூபாய்தான் போட்டிங் என்றால் நம்புவீர்களா!

அப்படிப்பட்ட பூலாம்பட்டிக்கு ஒரு பட்ஜெட் ஃபோர்டு ஃபிகோவில்தான் பயணத்துக்கு ஸ்கெட்ச் போட்டோம். ஈரோட்டைச் சேர்ந்த ராஜ்குமார், கபிலன் சகோதரர்களி்ன் ஃபோர்டு ஃபிகோ டீசல் காரை உறும விட்டோம். ‘‘பழைய கார்னு தப்புக் கணக்குப் போட்டுடாதீங்க! இது ஓடாது… சும்மா பறக்கும்!’’ என்று பில்ட்அப் கொடுத்தார்கள் சகோதரர்கள்.

நிஜம்தான்; ஈரோட்டில் இருந்து காரை எடுத்ததே தெரியவில்லை; ஆக்ஸிலரேட்டர் மிதிப்பதும் தெரியவில்லை; ஃபிகோவை ஃபன் டு டிரைவ் கார் என்று சும்மாவா சொன்னார்கள். 140 கிமீ வேகத்தில் எல்லாம் பறந்தது ஃபிகோ. ‘‘சஸ்பென்ஷனில் மட்டும் கொஞ்சம் வேலை பார்க்கணும் சார்!’’ என்றார் ராஜ்குமார்.

ஈரோட்டில் காலை உணவை முடித்துவிட்டு, புகைப்பட நிபுணரை அழைத்துக் கொண்டு நான்கு பேருடன் பறந்தது ஃபிகோ. இதன் பவர் 67bhp. ‘இந்த 4 சிலிண்டருக்கு இத்தனை குறைந்த பவர் போதுமா’ என்று நினைத்தால் அது பொய்யாகிறது. இதன் கியர்பாக்ஸும் பழசு மாதிரியே தெரியவில்லை.

தமிழ்நாட்டில் ஒரு குட்டி கேரளா! - பட்ஜெட் பார்ட்டிகளின் ஆலப்புழா!

ஈரோட்டில் இருந்து பூலாம்பட்டிக்கு 3 வழிகள் சொல்லியது கூகுள் மேப். சங்ககிரி வழியாகப் போவதும் ஒரு ரூட். நிறைய பேர் இதைத் தேர்ந்தெடுப்பார்கள். ஈரோடு, கோவை, நாமக்கல் போன்ற இடங்களுக்கு லாங் டிரைவ் அடிப்பவர்கள் – மதிய உணவு நேரம் மெனக்கெட்டு சில பைபாஸ்களில் தங்கள் காரை நிறுத்துவார்கள். அதுவும் சங்ககிரி. காரணம், அந்த மண்பாண்ட நாட்டுக்கோழிச் சமையல். ராயல், சரவணா, இயற்கை என்று ஏகப்பட்ட மண்பாண்ட தாபாக்கள் ஃபேமஸ். நமக்கு நேரப் பற்றாக்குறை. அதுவும் நல்லதாகப் போயிற்று.

பூலாம்பட்டி போகும் வழியில் ஒரு பேரேஜ் வருகிறது. Barrage என்றால் ஓர் அணைக்கட்டுக்கு இடையில் பயணிப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் பாலம், நீர்ப் பாசனத்துக்கு உருவாக்கப்பட்டிருக்கும் இடம், மின்சாரம் தயாரிக்கும் இடம் என்று பல அர்த்தங்கள் சொல்லலாம். இந்த பேரேஜில் மட்டும் ஒரு நாளைக்கு 30 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாகச் சொல்கிறார்கள்.

பூலாம்பட்டிக்குப் போகும் வழியில் உள்ள பேரேஜ்தான் இங்கு டிரான்ஸ்போர்ட்டேஷனுக்குப் பக்கபலம். அதைவிட இங்குள்ள முக்கியமான ஸ்பெஷல் – ஆறால் மீன் என்றொரு மீன் உணவு.

ஆறால் மீனுக்கு ஒரு வரலாறே சொன்னார்கள். ஆறால் மீனை தமிழ்நாட்டில் ரொம்ப அரிதாகத்தான் பார்க்க முடியுமாம். காரணம், இது பாய்ந்து செல்லும் நீர்வரத்துகளில் இருக்காது. பாறைகளுக்கு அடியில் தங்குமாம். அது பேரேஜ் போன்ற இடங்களில் கெட்டிக் கிடக்கும் தண்ணீரில்தான் கிடைக்கும் என்றார்கள்.

தமிழ்நாட்டில் ஒரு குட்டி கேரளா! - பட்ஜெட் பார்ட்டிகளின் ஆலப்புழா!

இங்குள்ள வயதானவர்களுக்கு ஆறால் மீன்தான் சோறு போடுகிறது. இதைப் பிடிக்க படகு, வலை போன்ற வஸ்துக்க ளெல்லாம் தேவையில்லை. சில முதியவர்கள் இதைப் பிடித்து வந்து அங்குள்ள மீன் கடைகளுக்கு விற்கிறார்கள். மீன் கடைகளில் ஆறால் மீனுக்கு செம டிமாண்ட்.

கிட்டத்தட்ட உயிரோடு இருந்த ஆறால் மீன்களைச் சுத்தம் செய்து வாங்கிக் கொண்டு சமைக்க ஆள் தேடினோம். இதுபோன்ற சுற்றுலாத் தலங்களில் நிச்சயம் சமைத்துக் கொடுக்க ஆட்கள் கிடைப் பார்கள். நமக்கும் கிடைத்தார்கள்.

பூலாம்பட்டிக்குத் திரும்பும் வழியில் உள்ள ஒரு தாபாவில் ஆறால் மீன் குழம்பைச் சமைக்கச் சொல்லிவிட்டு, படகுப் பயணத்துக்குக் கிளம்பினோம். எடப்பாடிக்கு முன்பு ஒரு பாதை திரும்புகிறது.

தமிழ்நாட்டில் ஒரு குட்டி கேரளா! - பட்ஜெட் பார்ட்டிகளின் ஆலப்புழா!

‘அதுதானுங்க எடப்பாடியார் வீடு’ என்றொரு வீட்டைக் காட்டினார்கள். முன்னாள் முதல்வரின் வீட்டைத் தாண்டிப் போனால்… மேட்டூர் போகும் வழியில் இடதுபுறம் திரும்ப வேண்டும். போகும் வழி, பச்சைப் பசேலென இச்சை மூட்டியது. சுற்றிலும் நெல் வயல்களோ… வாழைத் தோப்போ… பப்பாளி மரங்களோ… சவுக்குத் தோப்போ… இப்படி ஏதோ ஒன்று பாதையில் நம்மைச் சூழ்ந்து கொண்டே இருந்தது. புகைப்பட நிபுணருக்குத் தீனிதான். அதைவிட, போகும் வழியெங்கும் காவிரி ஆறும் நம் உடன் பயணித்துக் கொண்டே வந்தது.

பூலாம்பட்டியில் பல பேருக்கு அத்திபழ விவசாயமும் பிரதானம்போல! ஆர்கானிக் முறையில் அத்திப்பழ விவசாயம் நடந்து கொண்டிருந்தது ஓரிடத்தில். (பசுமை விகடனுக்கு செம கன்டென்ட்). ‘கிலோ 200 ரூபாய்க்கு அத்திப்பழம் கிடைக்குமாமே’ என்று மகிழ்ச்சியாக பார்சலுக்கு ஆளுக் கொரு கை நீட்டினோம். ஆனால், ‘மே மாசம் முடிஞ்சதுக்கும் வாங்கண்ணா… இன்னும் அறுவடை நடக்கலை’ என்றார் அத்திப்பழ அக்கா. ப்ச்ச்!

பஸ்களில் போகும்போது ஜன்னலோர இருக்கை வழியாக, சில கடைகளின் பலகைகளில் தெருப்பெயரோடு முகவரி எழுதியிருப்பார்கள்தானே! அதுபோல் சில உணவகம் மற்றும் விற்பனைக் கடைகளில் முகவரிக்குப் பதில் ‘குட்டி கேரளா’ என்று மட்டும் எழுதியிருந்தார்கள். அட, பூலாம் பட்டி வந்து விட்டதற்கான அடையாளம்!

"இதைக் கவனிங்க!

சென்னைக்கு பாண்டிச்சேரி – கோவைக்கு ஊட்டி – பொள்ளாச்சிக்கு வால்பாறை மாதிரி சேலம், ஈரோடு போன்றவர்களுக்கு பூலாம்பட்டி ஒன்டே ஸ்பாட்தான். ஆனால், மேட்டூர் – பண்ணவாடி என்று இதை இரண்டு நாட்களாக்கத் திட்டமும் போடலாம். பூலாம்பட்டி போகும் பயணமே பச்சைப் பசேல் என இச்சை மூட்டுவது உறுதி. பூலாம்பட்டியில் ஆறால் மீன் என்றொரு உணவுதான் ரொம்ப ஃபேமஸ். இதை மறக்காதீர்கள்! சமைத்ததைச் சாப்பிடுவதைவிட, மீன் சமைத்துச் சாப்பிடுவது செம ஆப்ஷன். லோக்கல்வாசிகளிடம் விசாரித்தால்… நல்ல ‘குக்’குகள் கிடைப்பார்கள். பூலாம்பட்டியில் தங்குவதற்கு ஒரே ஒரு ஆப்ஷன்தான். பூரநல்லி ரெஸார்ட். முன்கூட்டியே புக் செய்துவிட வேண்டும். ஒரு ஆளுக்கு 1,000 ரூபாய் வரை கட்டணம். ஆனால், விலைக்கேற்ற என்ஜாய்மென்ட். காவிரியாற்றின் மேலே படகுப் பயணம் போவது சூப்பர் எக்ஸைட்மென்ட். இங்கே படகுப் பயணம் என்பது லோக்கல்வாசிகளுக்கு, டவுன் பஸ் சவாரி மாதிரி. இந்தப் படகுப் பயணத்தை நம்பித்தான் அவர்கள் கம்யூட்டிங் இருக்கிறது. மக்களோடு மக்களாகப் பயணம் செய்தால்… வெறும் 10 ரூபாய்தான் கட்டணம். நீங்கள் 10 பேர் கொண்ட குழுவாக இருந்தால், தனியாக ஒரு படகை வாடகைக்கு எடுப்பது நல்லது. 500 ரூபாய் கட்டணம். காவிரியாறு முழுக்க ‘மேகம் கறுக்கையிலே’ என்று ஜாலியாகப் படகுப் பயணம் போகலாம். 10 பேருக்கு இது மதிப்பு. இங்கே படித்துறையை விசாரித்து, குளிக்கவும் மறக்காதீர்கள்! மீன் வறுவல், ஆறால் மீன் உணவு, அத்திப்பழம் பர்ச்சேஸ், ஆற்றுக் குளியல், படகுப் பயணம்… என்று சேலம், ஈரோடு வாசிகளுக்கு செமையான வீக் எண்ட் ஸ்பாட் பூலாம்பட்டி!"

சுட்டெரிக்கும் வெயிலில் சுட்டெரிக்கும் அடுப்புக்குப் பக்கத்தில் மீன்களை வறுத்துக் கொண்டிருந்தார்கள் சில மாஸ்டர் செஃப் அக்காக்கள். பூலாம்பட்டியில் செல்வி மெஸ்… அல்லது திவ்யா அக்கா கடைதான் ஃபேமஸ் என்றார்கள். MM என்றொரு மீன் கடையும் ஃபெமிலியர்.

போகும் வழியில் பேரேஜில் ஆறால் மீன் பிரபலம் என்றால்… பூலாம்பட்டியில் கொக்கு மீன்தான் மிகப் பிரபலம். ‘அக்கா, 20 ரூபாய்க்குக் கொக்கு மீன் குடுங்க’ என்று ஸ்நாக்ஸ் டைமாகவும் கொக்கு மீனை லவட்டுகிறார்கள் ஏரியாவாசிகள். இதை மூக்கு மீன் என்றும் சொல்லலாம்.

மொறு மொறுவென்றிருந்த மூக்கு மீன்களை மூக்குப் பிடிக்கத் தின்றுவிட்டு, படகுப் பயணத்துக்கு ஆஜரானோம். படகுத்துறை என்றொரு போர்டு மாட்டியிருந்தார்கள். இந்தப் படகுத்துறையை கான்ட்ராக்ட் எடுத்துச் செயல்படுத்து கிறார்கள்.

இக்கரையில் இருந்து அக்கரைக்குச் செல்ல இந்தப் படகுச் சவாரிதான் பிரதானம். ஆலப்புழா போன்ற இடங்களில் டவுன் பஸ் மாதிரி டவுன் படகுகள் திரியுமே… அதேபோன்றதொரு ரகம் இந்தப் பூலாம்பட்டி படகு பஸ்கள். ஒரு நபருக்கு 10 ரூபாய்தான் கட்டணம் வசூலிக்கிறார்கள். ஆனால், இதில் சிட்டி பஸ்ஸில் பயணிப்பது மாதிரி கூட்டத்தோடு பயணிக்க வேண்டும். உட்கார இடம் பிடிப்பது உங்கள் சாமர்த்தியம். ரிட்டர்னுக்கு 10 ரூபாய்.

சேலம் மாவட்ட எல்லையில் இருந்து ஈரோடு மாவட்டம் நெறிஞ்சிப்பட்டி எனும் இடத்திலிருந்துதான் மக்கள் போக்குவரத்து இந்தப் படகில் அதிகமாக இருக்கிறது. காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரைதான் படகுப் போக்குவரத்து செய்ய முடியும்.

தமிழ்நாட்டில் ஒரு குட்டி கேரளா! - பட்ஜெட் பார்ட்டிகளின் ஆலப்புழா!

பூலாம்பட்டி காவிரி ஆற்றின் இன்னொரு ஸ்பெஷல் – எப்படிப்பட்ட சுட்டெரிக்கும் வெயிலிலும் இது வற்றவே வற்றாது என்கிறார்கள். தண்ணீர்த் தேக்கம், மின்சாரம் என்று 24 மணி நேரமும் பிஸியாகவே இருக்கிறது இந்தக் காவிரி. கிட்டத்தட்ட 40 அடி ஆழம் என்றார்கள் அந்தக் காவிரியை. ஆழமான காவிரியில் பயணம் செய்வது செம ரசனையாக இருந்தது.

தனியாகவும் இங்கே படகுப் பயணம் உண்டு. ஒரு படகுக்கு 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள். நீங்கள் 8 – 10 பேராகக் குழுவாகப் பயணம் செய்தால், தனிப் படகை வாடகைக்கு எடுக்கலாம். 20 நிமிடங்கள் காவிரி ஆறு முழுக்கச் சுற்றித் திரியலாம். இதில் லைஃப் ஜாக்கெட் வசதியுடன் பாதுகாப்பாகப் பயணிக்கலாம். லோக்கல்வாசிகள் அடிக்கடி பயணிப்பதால், லைஃப் ஜாக்கெட் எல்லோருக்கும் கொடுப்பது சிரமம் என்கிறார்கள்.

தமிழ்நாட்டில் ஒரு குட்டி கேரளா! - பட்ஜெட் பார்ட்டிகளின் ஆலப்புழா!

மறுபடியும் அந்த தாபாவுக்குப் போய், ஆறால் மீன் குழம்பை ஒரு பிடி பிடித்தபோதுதான், சமையல் அக்கா சொன்னார். ‘பூலாம்பட்டிக்கு வந்துட்டு காவிரி ஆத்துத் தண்ணியில குளிக்காமப் போனா எப்படி தம்பி… இந்தாண்ட போய்… லெஃப்ட்ல திரும்புங்க!’’ என்று ஒரு வழி சொன்னார்.

பூலாம்பட்டி ஆற்றுப்படித் துறை, கார் பார்க்கிங் வசதியோடு ஜம்மென்று இருந்தது. பாரதிராஜா கிராமத்து லொக்கேஷன் மாதிரி பார்க்கவே பரவசமாக இருந்தது. ‘நினைத்தேன் வந்தாய்’ படத்தில் விஜய் பயணிப்பாரே… அது இந்த இடம்தான் என்றார்கள். ‘இரண்டு முகம்’, ‘பவுனு பவுனுதான்’ என்று பல படங்கள் இங்கேதான் எடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

தமிழ்நாட்டில் ஒரு குட்டி கேரளா! - பட்ஜெட் பார்ட்டிகளின் ஆலப்புழா!

‘‘நல்லவேளைண்ணா… மிஸ் பண்ணப் பார்த்தேன்’’ என்று ராஜ்குமாரும் கபிலனும் உற்சாகமாக பிகினிக்கு மாறி ஆற்றுப் படித்துறையில் இறங்கிவிட்டார்கள். நீச்சல் தெரியாதவர்களுக்கு எல்லைக் கோடு மாதிரி கம்பியெல்லாம் போட்டு அட்டகாசமாக பார்டர் பிரித்திருந்தார்கள். ‘‘என்ன, பாசிதான் வழுக்குது’’ என்றார்கள்.

பார்டருக்கு அந்தப் பக்கம் நீச்சல் தெரிந்தவர்கள் மட்டும் போகலாம். எத்தனையோ ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த காவிரி ஆற்றில், வானத்தைப் பார்த்தபடி கடப்பாரை நீச்சல் போட்டால்… அடடா..! இது நீச்சல் தெரிந்தவர்களுக்கு மட்டுமே இந்த சுகம் புரியும். லோக்கல்வாசிகள் சிலர் தங்கள் பேரன்களுக்கோ, மகன் களுக்கோ கயிறு கட்டி காவிரிப் படித்துறையில் நீச்சல் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ‘‘மோட்டார் விகடன்ல வருமா எங்க போட்டோ’’ என்று மேலும் உற்சாகமானார்கள்.

தமிழ்நாட்டில் ஒரு குட்டி கேரளா! - பட்ஜெட் பார்ட்டிகளின் ஆலப்புழா!

பூலாம்பட்டியில் மீன் பிடிப்பதற்கென்றும் தனி மீன்பிடித் துறை வைத்திருக்கிறார்கள். ஊர்ப் பெரியவர்கள், சிறுவர்கள் என்று வெரைட்டியாக மீனவர்களாக அவதாரம் எடுக்கிறார்கள். ஜிலேபி, கட்லா, பாறை, மூக்கு மீன், மடவை, ரோகு என்று வெரைட்டியான மீன்களுக்கு பூலாம்பட்டியில் கேரன்ட்டி.

பூலாம்பட்டியில் தங்குவதற் கென்று ஒரே ஒரு காட்டேஜ் இருக்கிறது. வெறித்தனமான இயற்கைப் பிரியர்களுக்கு இது வெறித்தனமான சாய்ஸ். ஃபார்ம் ஹவுஸ் ஸ்டைலில் இதை அற்புதமாக வடிவமைத்திருக்கிறார்கள். பூரநல்லி ரெஸார்ட் என்ற இதில் மர வீடு ஸ்டைலில் தங்கலாம்; காட்டேஜ் ஸ்டைலில் ரெஸ்ட் எடுக்கலாம்; வில்லா மாடலும் வைத்திருக்கிறார்கள். இதன் நீச்சல் குளமே கிணறுபோல் அற்புதமாக இருக்கிறது. இதில் தங்குவதற்கு முன்கூட்டியே புக்கிங் செய்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் ஒரு குட்டி கேரளா! - பட்ஜெட் பார்ட்டிகளின் ஆலப்புழா!

நமக்கு பூரநல்லி ரெஸார்ட் ஆப்ஷனில் இல்லை. ‘விட்றா மேட்டூருக்கு வண்டியை’ என்று கிளம்பிவிட்டோம். காரணம், பண்ணவாடி என்றொரு அற்புதமான இடம். இதை பூலாம்பட்டிக்கெல்லாம் அண்ணன் என்று சொல்லலாம்.

இங்கேயும் மூக்கு மீன் வறுவல், கர்நாடகா ஸ்டைலில் ராகி கழி, கட்லா மீன் குழம்பு என்று வெரைட்டியான டிஷ்களுடன் இங்கேயும் போட்டிங் ஆப்ஷன் உண்டு.

தமிழ்நாட்டில் ஒரு குட்டி கேரளா! - பட்ஜெட் பார்ட்டிகளின் ஆலப்புழா!

பரந்து விரிந்த பொட்டல் காட்டில் அத்தனை பெரிய காவிரி ஆறு மனதை ஏதோ பண்ணியது. இங்கேயும் போட்டிங்குக்கு 15 ரூபாய் வாங்கினார்கள். கோவா மாதிரி இங்கே ஃபெர்ரி வசதி உண்டு. அதாவது, நமது டூ–வீலர் போன்ற வாகனங்களைப் படகில் ஏற்றிக் கொண்டு அப்படியே அக்கரைக்குப் போவது. இந்தப் படகுப் பயணம் இல்லையென்றால், பைக்கில் சுமார் 60 கிமீ தூரம் எக்ஸ்ட்ரா சுற்ற வேண்டும். ‘‘ஒக்கேனக்கல்லுக்குப் போய்ட்டு வர்றோம்’’ என்று திருச்செங்கோட்டில் இருந்து தங்கள் ஹோண்டா, ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் ஒக்கேனக்கல் போய்விட்டு வந்திருந்தது ஒரு இளைஞர் பட்டாளம்.

தமிழ்நாட்டில் ஒரு குட்டி கேரளா! - பட்ஜெட் பார்ட்டிகளின் ஆலப்புழா!



நேரப் பற்றாக்குறையால், பண்ண வாடியை ரொம்பவும் என்ஜாய் பண்ண முடியவில்லை. நெக்ஸ்ட் ஸ்டாப் – சங்ககிரி. நினைத்தபடியே நாட்டுக்கோழிச் சாப்பாட்டை முழுங்கினாலும், ‘பண்ணவாடியை விட்டுட்டோமே’ என்று மனதுக்குள் ஏதோ ஒரு குறை இருந்து கொண்டே இருந்தது. ‘உன்னை அடுத்த கிரேட் எஸ்கேப்ல வெச்சுக்கிறோம்’ என்று சபதம் போட்டுவிட்டு, ஃபிகோவைக் கிளப்பினோம்.

வாசகர்கள் ராஜ்குமார், கபிலன்கார்ஃபோர்டு ஃபிகோ டீசல் ஊர்பூலாம்பட்டி வழி சேலம், எடப்பாடி வழியாக இடதுபுறம்தூரம் சுமார் 200 கிமீஅட்ராக்ஷன் படகுப் பயணம், அணைக் குளியல், மீன் உணவு

பார்க்க வேண்டிய இடங்கள்!

(சேலம், ஈரோட்டுப் பக்கம்)

ஈரெட்டி அருவி

அந்தியூர் அருகே பர்கூர் வனப்பகுதியில் உள்ள அருவி. 70 அடி உயரத்தில் இருந்து விழும் இந்த அருவியில் அற்புதமான குளியல் போடலாம். சீஸன் விசாரித்து விட்டுப் போவது நல்லது.

மேட்டூர் அணை

மீன் வறுவல், அணையை என்ஜாய் பண்ண அற்புதமான இடம். அங்கங்கே கால்வாய்களில் குளிப்பதற்கும் இடம் உண்டு. விசாரித்தால்… நல்ல என்ஜாய்மென்ட் உண்டு.

அந்தியூர் குட்டி கொடிவேரி

அந்தியூரில் உள்ள பெரிய ஏரி எனும் ஸ்பாட், அப்படியே கொடிவேரியின் தம்பி மாதிரி இருப்பதால், இதை ‘குட்டி கொடிவேரி’ என்கிறார்கள். இங்கே குளியல் ஸ்பெஷல்.

வெள்ளோடு பறவைகள் சரணாலயம்

ஈரோட்டுக்கு வந்தால், வெள்ளோடு பறவைகள் சரணா லயத்துக்கு விசிட் அடியுங்கள். பறவைக் காதலர்களுக்குப் பிடித்த இடம். ஆனால், சீஸன் விசாரித்துவிட்டுச் செல்வது நல்லது.

மூக்கனேரி ஏரி

இதுவும் விசாரித்துவிட்டுச் செல்வது நல்லது. சின்னப் படகுப் பயணம், குளியல் என்று ஜமாய்க்கலாம். குடும்பத்துடன் செல்ல சிறந்த ஸ்பாட்.

குறும்பப்பட்டி உயிரியல் பூங்கா

ஏற்காடு மலையடிவாரத்தில் அமைந்திருக்கும் பூங்கா. சிங்கம், புலியெல்லாம் எதிர்பார்த்தால் கம்பெனி பொறுப்பல்ல. ஆனால் யானை, வெளிநாட்டுப் பறவைகள், முதலைகள், மான்கள் என்று குழந்தைகள் என்ஜாய் பண்ணுவார்கள்.

பண்ணவாடி

மேட்டூர் தாண்டியுள்ள பண்ணவாடியை, பூலாம்பட்டியின் அண்ணன் என்றே சொல்லலாம். இங்கும் காவிரி ஆற்றில் படகுப் பயணம் சூப்பர். வாகனங்களை ஏற்றிச் செல்லும் பரிசல் ஃபெர்ரி என்று சொல்லக்கூடிய பயணமும் இங்கே உண்டு. மீன் வறுவல், குளியல், படகுப் பயணம் என்று என்ஜாய் பண்ணலாம்.வெறும் 10 ரூபாய்க்கு மலிவு போட்டிங்...காவிரி ஆறே கலங்கும் அளவு டைவ்!ஆறால் மீன் இங்கே மட்டும்தான் கிடைக்கும்...மீன் வறுவல் பிரியர்களுக்கு நல்ல தீனி!ஆறால் மீன் குழம்பு செ`மத்தியானச்’ சாப்பாடு...காவிரி ஆற்றின் படித்துறையில் குளிப்பது நீச்சல் பார்ட்டிகளுக்கு வரம்...பறவைக் காதலர்களுக்கும் ஏற்ற ஸ்பாட் பண்ணவாடி...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism